-
ஆற்றங்கரை பூங்காவுக்கு நிதி ஒதுக்கீடு
ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: நகரதிட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தில் பூங்கா அமைப்பதற்கென ரூபா 1 கோடி 20 இலட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். நகரதிட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான முபீனின் முயற்சி மற்றும் வேண்டுகோளின் பேரில் இந் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் மொத்த வியாபாரி பிறைந்துறைச்சேனையில் கைது
M.T. ஹைதர் அலி மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின், வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமமான பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் பாடசாலைக்கு முன்பாக 2016.0629ஆந்திகதி (இன்று) பிற்பகல் போதைவஸ்த்து மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ரேக்கிங் குற்றச்சாட்டின் பேரில் 331 மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடமாட காலவரையற்ற தடை
அம்பாறை: தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ரேக்கிங் குற்றச்சாட்டின் பேரில் 331 மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடமாட காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இரண்டாம் ஆண்டு ஆண்டு கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மீதும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக அம்மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்தும் தற்போது வெளியேறியுள்ளனர்.
-
“நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கம் துஆக்களை இறைவன் நிச்சயம் ஏற்றுக் கொள்வான் என்று நீங்கள் நம்புகின்றீர்கள், அதனை நானும் நம்புகின்றேன்”- மஹிந்த ராஜபக்ஷ
எம்.எஸ்.எம். சாஹிர் கொழும்பு: அளுத்கமை சம்பவத்துக்குப் பின்னணியில் இருந்தவர்கள் யார்? உண்மையான சூத்திரதாரிகள் யார்? சதித்திட்டங்களை வகுத்தவர்கள் யார்? என்பதை முஸ்லிம்கள் இன்னும் கொஞ்ச நாளில் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தெஹிவளை நகர பிதா தனசிரி அமரதுங்கவின் இல்லத்தில் நேற்று (29) இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தொடர்ந்துரையாற்றுகையில்,
-
இப்தார் முழு உலகுக்கும் முன்மாதிரி – ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு
எம்.எஸ்.எம். சாஹிர் கொழும்பு: புனித ரமழான் நோன்பை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு, நேற்று (28) செவ்வாய்கிழைமை மாலை 5.00 மணி தொடக்கம் ஜனாதிபதி மாளிகையில் இடம் பெற்றது. இவ்விப்தார் நிகழ்வில், ஜனாதிபதி உரை நிகழ்த்தும் போது,
-
துண்டு துண்டாகுமா பிரிட்டன்?
லண்டன்: ஓரிரு வருடங்களாக முழு உலகின் கவனமும் திரும்பி இருந்தது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மீதுதான்.ஆனால்,அவர்கள் தற்காலிகமாக மறக்கப்பட்டு இப்போது உலகின் கவனம் திரும்பி இருப்பது பிரிட்டனின் மீதுதான். ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது என்ற அதிர்ச்சிக்குரிய முடிவை அந்த நாடு எடுத்திருப்பதுதான் இதற்கு காரணம்.
-
துருக்கி விமான நிலையம் தாக்கப்பட்டுள்ளது: 36 பேர் பலி!
MJ அங்காரா: ஐரோப்பாவின் மிக ‘பிஸி’யான விமான நிலையமாகக் கருதப்படும் துருக்கிநாட்டின் அடாடர்க் விமான நிலையம் சற்றுமுன்னர் பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்குள்ளானது. துப்பாக்கித் தாக்குதல்களும், தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களும் இடம்பெற்ற நிலையில் இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். 97 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் உரிமை கோருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சட்டத்தரணியுடன் சைகை; பவித்ராவுக்கு நீதவான் எச்சரிக்கை
கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, நீதிமன்றத்தினுள் தனது சட்டத்தரணியிடம் சைகை முறையில் நடந்து கொண்டமையினால்,கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆர்டிகல அவரை கடுமையாக எச்சரித்துள்ளார். வன்னியாராச்சியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
-
தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட பஷீர்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்று எடுத்திருக்கும் தீர்மானம்தான் இன்று முஸ்லிம் அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படும் தலைப்பாக மாறியுள்ளது.
-
ஓட்டமாவடி பிரதேச சபையினை கைப்பற்றும் முஸ்லிம் காங்கிரசின் திட்டம் அமீர் அலியிடம் பலிக்குமா?
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஓட்டமாவடி: பிரதி அமைச்சர் அமீர் அலியின் கோட்டையாக கல்குடா கருதப்பட்டாலும் ஓட்டமாவடி பிரதேச சபையே கல்குடா அரசியலினை தீர்மாணிக்கும் முதுகெலும்பாக காணப்படுகின்றது என்பனை எவறாலும் மறுத்துரைக்க முடியாத விடயமாகும். அதனை மேலும் வலுவான முறையில் உறுதிப்படுத்தும் விடயமாக 1994ம் ஆண்டிலிருந்து இற்றை வரைக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் ஓட்டமாவடி பிரதேச சபை விடயத்தில் வாலாட்ட முடியாமல் இருப்பதாகும்.
-
ஜனாதிபதி மைத்திரி – சந்திரிக்காவுக்கு இடையில் முறுகல்
கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் மனகசப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த சில கோரிக்கைகளுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதகமான பதில்களை வழங்காமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
-
காத்தான்குடி மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வு
எம்.எச்.எம் .அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் 24.06.2016 இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காத்தான்குடி அல்மனார் அறிவியியற்கல்லூரி முன்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் மீடியா போரத்தின் பிரதித் தலைவர் எம் எப் எம் பஸால் ஜிப்ரி தலைமையில் இடம்பெற்றது.