-
பிரான்ஸ், போர்த்துக்கலிடம் தோல்வி அடைவது கடந்த 41 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும்
லிஸ்பன்: யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் அணி 1-0 என பிரான்சை வீழ்த்தி முதன்முறையாக கிண்ணம் வென்று வரலாறு படைத்தது. இந்தப் போட்டியில் கூடுதல் நேரத்தில் தான் போர்த்துக்கலுக்கு இந்த வெற்றி கிட்டியது.இதன் மூலம் ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் ஒரே தொடரில் மூன்று ஆட்டங்களில் கூடுதல் நேரத்தில் வெற்றி கண்ட அணி என்ற பெருமையும் போர்த்துக்கலுக்கு கிடைத்திருக்கிறது.
-
தென்கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்
கலாபூசணம் – மீரா.எஸ்.இஸ்ஸடீன் ஒலுவில்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 96/97 கல்வி ஆண்டில் கல்வி கற்று 2002ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய வர்த்தக முகாமைத்துவ மற்றும் கலை,கலாசார பீடங்களைச் சேர்ந்த பழைய மாணவர்களின் குடும்பத்துடனான ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 2016.07.16ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00மணி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
டேவிட் கமரூன் நாளை ராஜினாமா, இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் தெரேசா மே!
லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து தற்போதைய பிரதமர் டேவிட் கமரூன் புதன்கிழமை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்து பிரிட்டனில் வியாழக்கிழமை பொதுவாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு முடிவில் 51.9 சதவிகிதம் மக்கள் வெளியேறலாம் என்றும் 48.1 சதவிகிதத்தினர் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். பெரும்பான்மையோர் கருத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது.
-
இந்தக் கலாநிதி ஏன் இப்படி இருக்கிறார் பகுதி 02
“அறியாமைக்கு மறு பெயர் அஹ்மத் அஷ்ரப்” எனச் சொல்லுமளவிற்கு கலாநிதி அஹ்மத் அஷ்ரபின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைந்திருப்பதை அனைவரும் நன்கறிவோம். கலாநிதி அஹ்மத் அஷ்ரப் தனது முகநூல் பக்கத்தில் எழுதும் வாசகங்களையும், முட்டாள்தனமாக கருத்துக்களையும் உற்று நோக்கும் எவரும் இலகுவில் கலாநிதியின் தராதரத்தை எடை போட்டு விடுவார்.
-
எனது வாழ்நாளின் சிறந்த தருணம்: ரொனால்டோ மகிழ்ச்சி
பரிஸ்: போர்த்துக்கல் அணி யூரோ கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதால் அந்த அணியின் தலைவர் ரொனால்டோ மிகவும் குஷியாக உள்ளார். யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் போர்த்துக்கல் 1-0 என பிரான்சை வீழ்த்தி முதன்முறையாக கிண்ணம் வென்றது. இந்த வெற்றி குறித்து போர்த்துக்கல் அணியின் ரொனால்டோ கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தருணத்திற்காக தான் நீண்ட காலமாக, 2004ம் ஆண்டில் இருந்து காத்திருந்தேன்.
-
நாமல் ராஜபக்ஸ கைது
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன், நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ நிதி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பணத்தை முறைகேடாக செலவு செய்தது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்ட நிலையில், விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டார்.
-
ஆறு நோன்பு ஹதீஸ் ஆதாரமற்றதா? கலாநிதி அஹ்மத் அஷ்ரபிற்கான மறுப்பு -01
ஊடகப் பிரிவு கலாநிதி அஹ்மத் அஷ்ரப் ஷவ்வால் நோன்பு ஹதீஸ் பலவீனமானது என்ற கருத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அதற்காக இவர் முன்வைத்த வாதங்கள் எதுவும் புதிதானவைகள் அல்ல. ஏற்கனவே அறபுலகில் முன்வைக்கப்பட்டு உரிய முறையில் பதில் கொடுக்கப்பட்ட வாதங்களே ஆகும். இத்தொடரில் நாம் அவரது ஒவ்வொரு வாதங்களாக எடுத்து அலசவுள்ளோம்.
-
சொந்த மண்ணில் பிரான்ஸ் தோல்வி! வரலாற்றில் முதன்முறையாக யூரோ சம்பியனானது போர்த்துக்கல்!!
பரிஸ்: சற்றுமுன்னர் விறுவிறுப்பாக இடம்பெற்று முடிந்த யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை 1-0 என வீழ்த்திய போர்த்துக்கல் சம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. ஐரோப்பிய அணிகள் மட்டும் பங்கேற்கும் 15வது யூரோ கிண்ண கால்பந்து தொடர் பிரான்சில் நடைபெற்றது.
-
ஸாஜில் மீடியாவின் ‘ஈதுன் ஸயீத்’ மாபெரும் பெருநாள் நிகழ்ச்சி
காத்தான்குடி: ஓட்டமாவடி அல் கிம்மா நிருவனத்தின் அனுசரனையில் ஸாஜில் மீடியா நெட்வேர்க் இணைந்து வழங்கிய ‘ஈதுன் ஸயீத்’ மாபெரும் பெருநாள் நிகழ்ச்சி (08) வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் கடற்கரை திடலில் இடம் பெற்றது. இந் நிகழ்வு சரியாக மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.00 மணி வரை இடம்பெற்றது.
-
இரண்டாவது முறையாக விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றினார் அண்டி மர்ரி
லண்டன்: பிரிட்டிஷ் டென்னிஸ் வீரர் அண்டி மர்ரி விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளார். மிலோஸ் ரவோனிக்கை (கனடா) 6-4, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் அண்டி மர்ரி தோற்கடித்தார். அண்டி மர்ரி விம்பிள்டனில் பெறும் இரண்டாவது வெற்றியாகும். அதே சமயம் மூன்றாவது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.
-
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர், அஹமட் எஸ்.முகைதீன் மட்டக்களப்பு: புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் (10) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெபர் மைதானம், நீச்சல் தடாகம் என்பவற்றை திறந்து வைத்தார்.