ஆறு நோன்பு ஹதீஸ் ஆதாரமற்றதா? கலாநிதி அஹ்மத் அஷ்ரபிற்கான மறுப்பு -01

  • ஊடகப் பிரிவு

ashroff (2)கலாநிதி அஹ்மத் அஷ்ரப் ஷவ்வால் நோன்பு ஹதீஸ் பலவீனமானது என்ற கருத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அதற்காக இவர் முன்வைத்த வாதங்கள் எதுவும் புதிதானவைகள் அல்ல. ஏற்கனவே அறபுலகில் முன்வைக்கப்பட்டு உரிய முறையில் பதில் கொடுக்கப்பட்ட வாதங்களே ஆகும். இத்தொடரில் நாம் அவரது ஒவ்வொரு வாதங்களாக எடுத்து அலசவுள்ளோம்.

கலாநிதி அஷ்ரபின் முதலாவது வாதம்

ரமழான் நோன்பு நோற்று, ஷவ்வாலில் ஆறு நாட்கள் நோற்பவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவர் போல் ஆவார் ‘

என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழி அறிவிக்கும் ஹதீஸ், ஸஹீஹ் முஸ்லிமில் ( 2815 ) பதியப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘ ஸஃத் பின் ஸஈத் காணப்படுகிறார் . அவர் மனன சக்தி குன்றியவர் ஆவார். இவரின் அறிவிப்புக்கு உடன்பாடான, அறிவிப்புகள் ஊர்ஜிதமானவைகள் அல்ல.

எமது பதில்

ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவர் மீது மனனசக்தி குறைபாடு என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டால் அவரது அறிவிப்பு சம்பந்தமாக விரிவாக அலசி ஆய்வு செய்வது இத்துறை சம்பந்தப்பட்டவர்கள் மீது கடமையாகும்.

இந்த அடிப்படையை கலாநிதி பேணாததால் அல்லது புறக்கணித்ததால் ஷவ்வால் நோன்பு ஹதீஸை பலவீனம் என்று கூறியுள்ளார். ஷவ்வால் நோன்பு சம்பந்தப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் ஸஃத் பின் ஸஃத் என்பவர் மீது மனனசக்தி குறைபாடு என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது உண்மை என்பதை நாம் மறுக்கமாட்டோம். மனனசக்தியில் குறைபாடு உள்ளவர்கள் தவறாக அறிவிக்கும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் தவறாக அறிவித்துள்ளார்களா? அல்லது சரியாக அறிவித்துள்ளார்களா? என்பதை வேறு துணை ஆதாரங்களை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இதை கவனத்தில் கொண்டு நாம் இது பற்றி ஆய்வு செய்தால் ஸஃத் பின் ஸஃத் என்ற அறிவிப்பாளர் இதில் தவறிழைக்கவில்லை என்பது தெளிவாகும். ஸஃத் பின் ஸஃதின் அறிவிப்பை வலுப்படுத்தும் விதத்தில் மற்றுமொரு அறிவிப்பு அபூதாவுதில் பதிவாகியுள்ளது.

سنن أبي داود (2ஃ 324)

2433 – حدثنا النفيلي، حدثنا عبد العزيز بن محمد، عن صفوان بن سليم، وسعد بن سعيد، عن عمر بن ثابت الأنصاري، عن أبي أيوب، صاحب النبي صلى الله عليه

وسلم، عن النبي صلى الله عليه وسلم قال: «من صام رمضان، ثم أتبعه بست من شوال، فكأنما صام الدهر

மேற்குறித்த இந்த அறிவிப்பில் உமர் என்பவரிடமிருந்து எப்படி ஸஃத் பின் ஸஃத் கேட்டு அறிவித்தாரோ அதே போல் ஸப்வான் என்பவரும் கேட்டு ஆறு நோன்பு ஹதீஸை அறிவித்துள்ளார்.

இப்போது ஸஃத் பின் ஸஃத் தவறாக அறிவித்தாரா? அல்லது சரியாக அறிவித்தாரா? என்ற சந்தேகம் ஸப்வான் என்பவர் மூலம் இல்லாமலாகி ஸஃத் என்பவர் சரியாகவே அறிவித்துள்ளார் என்ற உறுதியை தருகின்றது.

ashroff (2)

கலாநிதி அஹ்மத் அஷ்ரப்

கலாநிதி அஹ்மத் அஷ்ரப் இப்போது நாம் காட்டிய ஆதாரம் பற்றி எதுவும் பேசாமல் நழுவும் விதமான ஒரு வாசக அமைப்பை தனது மறுப்பில் கையாண்டுள்ளார்.

அவரது வாசகம்

//இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘ ஸஃத் பின் ஸஈத் காணப்படுகிறார் . அவர் மனன சக்தி குன்றியவர் ஆவார். இவரின் அறிவிப்புக்கு உடன்பாடான, அறிவிப்புகள் ஊர்ஜிதமானவைகள் அல்ல//

இதுவே இவர் பயன்படுத்திய வாசகமாகும். ஸஃதின் அறிவிப்புக்கு உடன்பாடான அறிவிப்புக்கள் ஊர்ஜிதமானவை அல்ல என பொத்தம் பொதுவாக எழுதியுள்ளார். இப்போது ஸப்வான் என்பவரின் ஆதாரத்தை நாம் ஸஃத் பின் ஸஃதின் அறிவிப்பை வலுப்படுத்த எடுத்து வைத்துள்ளோம். நாம் எடுத்து வைத்த இந்த ஆதாரத்தில் குறைகள் இருப்பதாக கலாநிதி அஷ்ரப் கருதினால் தாராளமாக அதை எடுத்து வைக்கலாம். அதை மீள்பரிசீலினை செய்யவும் நாம் தயாராகவுள்ளோம் என்பதை இங்குஅறியத்தருகின்றோம். والله اعلم

11.07.2016
1 of 1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s