WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கண்டி, தும்பர மஸ்ஜித் சம்மேளனம் நடாத்தி வரும் தும்பர தொழில்பயிற்சி நிலையம் திறந்துவைப்பு

    கண்டி: தும்பர மஸ்ஜித் சம்மேளனம் நடாத்தி வரும் தும்பர தொழில்பயிற்சி நிலையத்தில், தையல் பயிற்சி பெற்றுவரும் யுவதிகளும், மின்னியல் துறையில் பயிற்சி பெற்றுவரும் இளைஞர்களும், தாருல் ரஹ்மான் அமைப்பைச் சேர்ந்த மாணவிகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் இன்று (15/07/2016) அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

  • முஸ்லிம் காங்கிரசும் கலகங்களும்

    கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பார்கள். சில கலகங்களின் போது நியாயம் பிறப்பதில்லை. அத்தகைய கலகங்களின் போது நியாயம் பிறக்காமைக்கான காரணம் கலகத்திற்கு தலைமை வழங்குபவர்கள் நியாயவாதிகளாக இருப்பதில்லை.மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு பதிலாக தலைவர்கள் கலகங்களை முன்னிருத்தி தமக்குரிய வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்கின்றனர். ஈற்றில் மக்கள் மடையர்களாகவதுடன் தான் மடையர்களாக்கப்பட்டதையும் உணராத மக்களின் அப்பாவித்தனம் தொடர்ந்து மானங்கெட்ட தலைவர்களை வாழவைப்பதுதான் முஸ்லிம் அரசியலின் சோகம் நிறைந்த பக்கங்கள்.

  • யார் அந்த லொறி ஓட்டுநர்?

    பரிஸ்: பிரான்ஸின் நீஸ் நகரத்தில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தேசிய தினத்தின் நிறைவு நாளை குறிக்கும் விதமாக நடைபெற்ற வாண வேடிக்கைகளை காணக் கூடியிருந்த கூட்டத்திற்குள் மிக வேகமாக, ஒரு லொறி புகுந்தது. லொறி ஓட்டுநரை பொலீஸ் சுட்டுக் கொல்வதற்கு முன், ஓட்டுநரும் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். லொரிக்குள் துப்பாக்கிக்களும், கையெறி குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  • பிரித்தானியா- “அஸ்லம் ரெடிங்” வருடாந்த கோடைகால 8வது ஒன்றுகூடல்

    பிராந்திய நிருபர் ரெடிங்: பிரித்தானியாவின் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றாகவும், இலங்கையர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றாகவும் அமையும் ரெடிங் (Reading) நகரில் அமைந்துள்ள இலங்கை முஸ்லிம்களின் அமைப்பு- ASSOCIATION OF SRI LANKAN MUSLIMS (ASLAM) ஏற்பாடு செய்யும் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வு இம்முறையும் ரெடிங் நகரில் கோலாகலமாக இடம்பெற இருக்கின்றது.

  • அவுஸ்திரேலிய அணியின் சுழல்பந்து பயிற்சியாளராக முரளிதரன் நியமிப்பு

    கொழும்பு: இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை ஆடுகளங்கள் சுழல் பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமானவை என்பதால், அவ்வணியை சொந்தமண்ணில் வீழ்த்துவதற்காக முரளிதரனின் ஆலோசனையை அவுஸ்ரேலிய அணி பெறவுள்ளது.

  • டேவிட் கமரன் வெளியேறிய அந்த நேரம்

  • 16 அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலைப் பட்டியல்

    கொழும்பு: நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பொருட்களை அதிகவிலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

  • மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதியின் நடவடிக்கைகளுக்கு மஹிந்த ராஜபக்சவே காரணம்!

    மட்டக்களப்பு: பௌத்த பிக்குகள் இவ்வாறு ரவுடிகளைப் போல் நடந்துகொள்வதற்கு மஹிந்த ராஜபக்சவும் அவரது சகாக்களுமே காரணம் என ஊழலுக்கு எதிரான தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் தலைமை பௌத்த பிக்குவான அம்பிட்டியே சுமனரத்தன தேரரின் செயல்கள் தொடர்பில் கடும் ஆத்திரம் அடைந்த ஊழலுக்கு எதிரான தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா ஊடகங்களுக்கு பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

  • பிரிட்டன் வெளியேற்றம்: அரசுக்கு கால அவகாசம் வேண்டும் – பிரதமர் தெரீசா மே

    லண்டன்: பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்குத் தேவையான பேச்சுவார்த்தைகளுக்கு தயார் செய்வதற்கு தங்களுடைய அரசுக்கு கால அவகாசம் வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்கல் மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் ஆகியோரிடம் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

  • பிரிட்டன் பிரதமராக தெரீசா மே பொறுப்பேற்றார்

    லண்டன்: பக்கிங்காம் அரண்மனையில் நேற்று (13) நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமராக தெரீசா மேயை, ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார். ராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் 13வது நபர் தெரீசா மே ஆவார்.

  • “மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பின் செயல்பாடு முழு உலகத்திற்கும் ஓர் முன்னுதாரணமாகும்”

    ஏ.எல். டீன்பைரூஸ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பானது கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற பல்லின மக்களின் மேம்பாட்டிக்காக மத வேறுபாடின்றி சேவையாற்றி வருகின்றமையானது இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகத்திற்கும் ஓர் முன்னுதாரனமாகும் என சர்வமத தலைவர்கள்,புத்திஜீவிகள் பாராட்டியுள்ளனர்.

  • மரைக்கார் ராம்தாஸ் காலமானார்

    கொழும்பு: இலங்கையின் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட மற்றும் நாடக எழுத்தாளரும், நடிகருமான மரிக்கார் எஸ்.ராம்தாஸ் தனது 69வது வயதில் சென்னையில் காலமானார். இலங்கை வானொலியில் 1970 காலப்பகுதியில் ஒலிபரப்பான “கோமாளிகளின் கும்மாளம்” என்ற நகைச்சுவை தொடர் நாடகத்தில் மரைக்கார் என்ற பெயரில் முஸ்லிமாக பாத்திரமேற்று நடித்திருந்தார்.

←Previous Page
1 … 190 191 192 193 194 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar