“மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பின் செயல்பாடு முழு உலகத்திற்கும் ஓர் முன்னுதாரணமாகும்”

  • ஏ.எல். டீன்பைரூஸ்

batticaloaமட்டக்களப்பு: மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பானது கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற பல்லின மக்களின் மேம்பாட்டிக்காக மத வேறுபாடின்றி சேவையாற்றி வருகின்றமையானது இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகத்திற்கும் ஓர் முன்னுதாரனமாகும் என சர்வமத தலைவர்கள்,புத்திஜீவிகள் பாராட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் (12.07.2016 செவ்வாய்கிழமை) அமைப்பின் தலைவர் பிரபல சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல் (பிலால் ஹாஜி) தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இன ஒற்றுமைக்கான நோன்பு பெருநாள் இரவு நேர ஒன்று கூடல் மற்றும் இராப்போசன நிகழ்வு மட்டக்களப்பு ரெஸ்ட்-இன் ஹோட்டலில் இடம் பெற்றது.

இன ஒற்றுமையை வலியுறுத்தி மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வின் போது நான்கு மதத்தலைவர்களின் விசேட உரை மற்றும் அதிதிகளின் உரையும் இடம் பெற்றது.

batticaloa

பௌத்த சமயம் சார்பாக கல்முனை சுபாத்ராராம விகாராதிபதி ரண்முத்தகல சங்கரத்ன தேரர் அவர்களும்,கிரிஸ்தவ சமயம் சார்பாக மட்டக்களப்பு சிவில் சமூக தலைவரும்,கிழக்கு பல்கலை கழக சிரேஷ்ட்ட விரிவுரையாளருமான அருட்தந்தை கலாநிதி டொமினிக் சுவாமிநாதன் அவர்களும் , இந்து சமயம் சார்பாக பல்சமய ஒன்றியத்தின் இந்து சமய குருக்கள் குமாரஸ்தான தேவஸ்தானம் ஜெஹதீஸ்ஸ சர்மா குருக்கள் அவர்களும், இஸ்லாம் சார்பாக மருதமுனை தாருல் ஹூதா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் கலாநிதி அஷ்ஷெய்ஹ் முகம்மது முபாறக் (மதனி) அவர்களும் கலந்து கொண்டனர்.

bilal kaleel

இன ஒற்றுமைக்காக வேண்டி கடந்த 8 ஆண்டுகளாக தனது சமூகப்பணியினை ஜாதி,மத,குல,பேதம் பாராது பணியாற்றிவரும் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான நிகழ்வினில் கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம் அவர்களும்;,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,அரச உயர் அதிகாரிகள்,கல்விமான்கள்,புத்திஜீவிகள்,வைத்திய கலாநிதிகள்,பொறியியலாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், பல்சமய ஒன்றியத்தின் தலைவர் உறுப்பினர்கள்;,லயன்ஸ் கழக உறுப்பினர்கள்,றொட்டறி கழக உறுப்பினர்கள்,வர்த்தகசங்கஉறுப்பினர்கள்,உலமாக்கள்,வர்த்தகர்கள்,
ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இறுதி நிகழ்வாக இஸ்லாம் என்றால் என்ன என்ற தொனிப் பொருளில் விசேட உரை ஒன்று மருதமுனை தாருல் ஹூதா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் கலாநிதி அஷ்ஷெய்ஹ் முகம்மது முபாறக் (மதனி) அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s