பிரித்தானியா- “அஸ்லம் ரெடிங்” வருடாந்த கோடைகால 8வது ஒன்றுகூடல்

  • பிராந்திய நிருபர்

aslamரெடிங்: பிரித்தானியாவின் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றாகவும், இலங்கையர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றாகவும் அமையும் ரெடிங் (Reading) நகரில் அமைந்துள்ள இலங்கை முஸ்லிம்களின் அமைப்பு- ASSOCIATION OF SRI LANKAN MUSLIMS (ASLAM) ஏற்பாடு செய்யும் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வு இம்முறையும் ரெடிங் நகரில் கோலாகலமாக இடம்பெற இருக்கின்றது.

இந்நிகழ்வு எதிர்வரும் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 9 மணிவரையும்  WOODFORD PARK LEISURE CTR, WOODLEY, READING, RG 5 4LY  இடத்தில் இடம்பெறுகிறது.

இந்நிகழ்வில்

கிறிக்கட் சுற்றுப் போட்டி

உதைபந்தாட்டப் போட்டி

மெய்வல்லுனர் போட்டி

மல்யுத்தப் போட்டி

சிறுவர்களுக்கான நிகழ்வுகள்

பெண்களுக்கான நிகழ்வுகள்

இடம்பெற இருப்பதுடன், இலங்கை முஸ்லிம்களின் உணவுப் பரிமாறல்களும், சிற்றுண்டிகள், இனிப்புவகைகள் உங்கள் நாவை நனைக்கக் காத்திருக்கின்றன.

aslam

கடந்த வருடம் போன்று இம்முறையும் மிகச்சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ரெடிங் நகர மேயர் முகமட் ஐயூப் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

வருடாந்தம் இடம்பெறும் இவ் ஒன்றுகூடல் நிகழ்வில், பிரித்தானியாவில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் தங்களது குடும்ப சகிதம் வருகை தந்து இந்நிகழ்வைச் சிறப்பித்துச் செல்கின்றமை ஓர் விசேட அம்சமாகும்.

உரிய நேரத்திற்கு வருகைதந்து இந்நிகழ்வை அலங்கரித்துச் செல்லுமாரு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s