-
பேச்சு பல்லாக்கு! தம்பி பொடிநடை! வை.எல்.எஸ் ஹமீதுக்கு இது சமர்ப்பணம்…
ஜுனைதீன் மான்குட்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீத் குரல்வழியாக இணையத்தளங்களில் பதிவொன்றை மேற்கொண்டிருக்கின்றார். தற்போதைய காலகட்டத்தில் பேசுபொருளாக இருக்கும் அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு (Devolution of Power) தொடர்பில் அவரது கருத்துக்களும் வியாக்கியானங்களும் அமைந்திருந்தன. திறந்தவெளிப் பல்கலைக்கழக சட்டபீட மாணவர்கள் கற்கும் பாடமொன்றின் அதிகாரம் ஒன்றை (Chepter) மனனம் செய்து, வாசகர்களுக்கு அதனை அப்படியே அச்சொட்டாக தந்திருக்கின்றார். உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு இது ஒரு பயனுள்ள பதிவு.
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம் காத்தான்குடியில் முன்னெடுப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான், டீன் பைரூஸ் காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கள் அமைச்சருமான றஊப் ஹகீமின் விழிகாட்டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணியை பலப்படுத்தும் நோக்கில் வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி மத்திய குழுவின் ஏற்பாட்டில் மேற்படி வீட்டுக்கு வீடு மரம் செயற்திட்டத்தின் ஆரம்ப வைபவம் 01-08-2016 இன்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி…
-
தமிழ்-முஸ்லிம்கள் பேசித் தீர்க்க வேண்டியவை எவை?
கொழும்பு: தமிழ்-முஸ்லிம் மக்களுக்குப் பெரும் ஆபத்தாக விளங்கி வந்த மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் தமக்கு இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும் புதிய அரசின் ஊடாகத் தீர்த்துக்கொள்வதற்கான முயற்சியில் இன்று அந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர். அரசால் கொண்டு வரப்படவுள்ள அரசியல் தீர்வு தமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு பொறிமுறையாக இருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றனர்.இந்த வருடத்துக்குள் அரசியல் தீர்வு வழங்கப்படும் என அரசு அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-
இலங்கையிடம் தோற்றும் சாதனை படைத்த அவுஸ்திரேலியா
பல்லேகல: இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் நெவில் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ஓகீபே ஆகிய இருவரும் சேர்ந்து இலங்கை அணியின் வெற்றிக்கு தடை கல்லாக இருந்தனர். அவுஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 157 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் இழந்து தோற்கும் தருவாயில் இருந்தது.அப்போது 9 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நெவில்,கீபே ஆட்டத்தை…
-
“மஹிந்தவின் குடியுரிமையை பறிக்கவும் சட்டத்தில் இடமுண்டு”- ரணில்
ரம்புக்கணை: இலங்கையின் பௌத்த உயர்பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடத்தை பிளவுபடுத்த மஹிந்த ராஜபக்ஷ சதி செய்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.ரம்புக்கணை, கடிகமுவ, நாகவிகாரையில் நேற்று நடைபெற்ற வழிபாட்டு வைபவெமான்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
-
அடுத்த கைதி மகிந்த..?
கொழும்பு: மகிந்த ராஜபக்ஸ தனது காலத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கொலைகளை செய்து நாட்டை ஆட்சி செய்ததாக ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மகிந்த காலத்தில் மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது தமது கோரிக்கையை முன்வைத்த அன்டனி பெர்னாண்டோ என்ற மீனவர் கொல்லப்பட்டார். அத்துடன் ரத்துபஸ்வலவில் குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
-
அகதி அந்தஸ்து கோரியவர்கள் நாடு திரும்பினால் 20,000 டொலர்
சிட்னி: அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றவர்களில் சிலர் பப்புவா, நீகுனியா மற்றும் மானஸ் தீவு தடுப்பு முகாமில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், தாங்களாக முன்வந்து நாடு திரும்பினால் அவர்களுக்கு 20,000 அவுஸ்திரேலிய டொலர் வரை வழங்கப்படும் என்று அவுஸ்திரேலியா அரச அதிகாரிகள் ஆசை காட்டி வருவதாக அகதிகள் நலனுக்காக குரல் கொடுக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
கொல்லப்பட்ட பாதிரியாரின் நினைவு வழிபாட்டில் முஸ்லீம்களும் பங்கேற்பு
பரிஸ்: பிரான்சில் கொலைசெய்யப்பட்ட உள்ளூர் பாதிரியாரின் கொலை நடந்து ஐந்து நாட்களுக்கு பின்னர், மக்கள் நிறைந்திருந்த ரூவேங் பேராலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில் ரோமன் கத்தோலிக்கர்களுடன் நூற்றுக்கு அதிகமான முஸ்லீம்களும் பங்கேற்றுள்ளனர். சமீபத்திய தாக்குதலான இதனை முஸ்லீம்கள் ஏற்கவில்லை என்பதை காட்டும் விதமாக இந்த வழிபாட்டில் பங்கேற்க பிரான்ஸ் முழுவதுமுள்ள முஸ்லீம்களை தேவாலயங்கள் அழைத்திருந்தன.
-
ராட்சத திமிங்கலம்: ஆச்சரியத்தில் உறைந்த மீனவர்
பேர்த்: அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் உள்ள கடலில் வட்கின்ஸ் (36) என்ற மீனவர் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவரது படக்குக்கு அருகில் ஏதோ ஒன்று மிதந்து வந்துள்ளது, அதனைப்பார்த்த இவர் அது படகு அல்லது வெப்ப காற்று பலூனாக இருக்கும் என்று நினைத்துள்ளார். ஆனால் மெது மெதுவாக அருகில் நெருங்கி வர, அதனைப்பார்த்த இவருக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
-
தங்கத்துக்கு மாற்றமாக அறிமுகமாகிறது லுமினக்ஸ் யூனோ
டெல்லி: தங்கத்திற்கு மாற்றாக ‘லீடிங் ஜுவல்லர்ஸ் ஓஃப் த வேர்ல்ட்’ என்ற, உலக தங்க நகை கூட்டமைப்பு, ‘லுமினக்ஸ் யூனோ’ என்ற புதிய மதிப்புமிகு உலோகத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தங்கம், பிளட்டினம், பலேடியம், வெள்ளி ஆகிய உலோகங்களின் கலவையில் இருந்து, ‘லுமினக்ஸ் யூனோ’ உலோகம் தயாரிக்கப்படுகிறது. தற்போது, 10 கிராம், ‘லுமினக்ஸ் யூனோ’ உலோகத்தின் விலை, 1,250 ரூபாய்.
-
மாற்று காட்சி அங்கத்தவர்கள் அ.இ.ம.கா இணைவு..!!
சாய்ந்தமருது: நேற்று (30) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்றம் விவகார செயலாளருமான ARM.ஜிப்ரி தலைமையில் அவரது சாய்ந்தமருது இல்லத்தில் வைத்து பல மாற்று காட்சி அங்கத்தவர்கள் அகில மக்கள் காங்கிரஸ்சியில் அங்கத்தவர்களாக அங்கத்துவம் பெற்று இணைந்து கொண்டனர்.
-
நிலாவிற்கு சென்று வந்த மூவர் ஒரே நோயால் உயிரிழப்பு!
நியுயோர்க்: 1969ஆம் ஆண்டு அப்பலோ- 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொலின்ஸ் ஆகியோர் நிலாவுக்கு பயணமானார்கள். இவர்களை தொடர்ந்து வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நபர்கள் நிலாவுக்கு சென்று வந்தனர். இவ்வாறு நிலாவுக்கு சென்று கால் பதித்தவர்களில் மூன்று பேர் ஒரே வகையான நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.