இலங்கையிடம் தோற்றும் சாதனை படைத்த அவுஸ்திரேலியா

Lakshan Sandakan,Mitchell Starcபல்லேகல: இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் நெவில் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ஓகீபே ஆகிய இருவரும் சேர்ந்து இலங்கை அணியின் வெற்றிக்கு தடை கல்லாக இருந்தனர். அவுஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 157 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் இழந்து தோற்கும் தருவாயில் இருந்தது.அப்போது 9 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நெவில்,கீபே ஆட்டத்தை டிரா செய்யும் நோக்கில் விளையாடிவந்தனர்.

இவர்கள் இருவரும் தொடர்ந்து 22 ஓவர்களில், ஓட்டம் எதும் எடுக்காமல் களத்தில் விளையாடி வந்தனர். நெவி 115 பந்துகள் சந்தித்து 9 ஓட்டங்கள் மட்டும் எடுத்து டி சில்வா பந்து வீச்சீல் ஆட்டமிழந்தார்.இவருக்கு சிறப்பாக துணைகொடுத்து ஆடிய ஓகீபே ஹெராத் பந்து வீச்சில் அட்டமிழந்தார்.இவர் 98 பந்துகள் சந்தித்து 4 ஓட்டங்கள் மட்டும் எடுத்தார்.

Lakshan Sandakan,Mitchell Starc

இந்த ஜோடி 178 பந்துகள் சந்தித்து 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தவுடன் இலங்கை அணி வெற்றி பெற்றது. மேலும் அவுஸ்திரேலியா அணியினர் 63 வது ஓவரிலிருந்து 88.3 ஒவர் வரை ஒரு ஓட்டங்கள் கூட எடுக்கவில்லை.

இதனால் அவுஸ்திரேலியா அணி 154 பந்துகள் சந்தித்து ஒரு ஓட்டங்கள் கூட எடுக்காமல் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் சவுத் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ், ஆம்லா ஆகிய இருவரும் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 253 பந்துகள் சந்தித்து 27 ஓட்டங்கள் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s