-
ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவின் புதிய நிர்வாகிகள்
– புவி. எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ் காத்தான்குடி: ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழுக்கூட்டம் கடந்த 14.08.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் கபீர் ஹாசிம் அவர்களினால் உறுதிப்படுத்தப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மாவட்ட செயற்பாட்டாளர் எம்.எஸ்.எம். ஷாபி அவர்களும் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார்.
-
இலங்கை பூர்வீகத்தைக் கொண்ட சோனகர்களை “மூர்ஸ்” என அடையாள படுத்தியமை வரலாற்றுத் தவறாகும்
மஸிஹூதீன் இனாமுல்லாஹ் போர்த்துக்கேயர் இலங்கை வந்த பொழுது இலங்கையில் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்த அரேபிய வழித் தோன்றல்களை “மூர்ஸ்” என அழைத்தார்கள், அதற்கான பிரதான காரணம் ஐரோப்பாவில் கடல் வழி வர்தகத்தினூடாகவும் மேற்கு நோக்கிய இஸ்லாமிய பரம்பலினூடாகவும் குடிபெயர்ந்த அரேபிய மற்றும் ஆபிரிக்க குடிகள் வரலாற்றில் “மூர்ஸ்” என அழைக்கப்பட்டமையாகும்.
-
“அபிவிருத்திக்காக கொண்டு வரப்படுகின்ற நிதிகள் மக்களுக்கு சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றதா?”
M.T. ஹைதர் அலி காத்தான்குடி: பிரதேசத்தின் அபிவிருத்திக்காக கொண்டு வரப்படும் நிதியானது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் முன்னெடுப்புக்களுக்கு மத்தியிலும் கொண்டுவரப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அபிவிருத்திக்காக கொண்டு வரப்படுகின்ற நிதியானது சரியான முறையில் சரியான இடத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்றால் அது மக்களுக்கு சிறந்த முறையில் பயனளிக்கவில்லை என்பதனையும் உத்தியோகத்தர்கள் தமது கடமையினை சிறந்த முறையில் மேற்கொள்ளவில்லை என்பதனையும் மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
-
காதல் – திருமணம்: ஒலிம்பிக் போட்டியில் அரங்கேறிய மகிழ்ச்சி தருணம்
ரியோ: ரியோ ஒலிம்பிக்கில் யாரும் எதிர்பாராத விதமாக சீன வீரர் ஒருவர், சக வீரரும் தனது தோழியுமான பெண்ணிடம் திருமணத்திற்கான சம்மதத்தைக் கேட்டது சீன ஊடங்களில் ஒலிம்பிக் விளையாட்டைக் காட்டிலும் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.ஞாயிறன்று பெண்களுக்கான மூன்று மீட்டர் வளையும் மேடையிலிருந்து நீரில் தலைகீழாக குதிக்கும் போட்டியில் சீன வீரர் ஹெ ட்ஸீ வெள்ளிப்பதக்கத்தை வென்ற சில மணி நேரங்களில் அவரின் ஆண் நண்பர் மற்றும் சக நீரில் குதிக்கும் வீரரான ஷின் கா மேடைக்கு வந்து…
-
“என்றுமே பெயர் அழியாத புகழோடு ஓய்வுபெற இன்னும் இரண்டு தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டியுள்ளது”
ரியோ: ஒலிம்பிக் போட்டியில் மூன்று முறை தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வென்றிருக்கும் உசைன் போல்ட், இந்த சாதனையை படைத்திருக்கும் முதலாவது நபர் என்ற பெருமை பெற்றிருக்கிறார். ரியோவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் ஜமைக்கா தளகட வீரரான உசைன் போல்ட் 9.81 வினாடிகளில் ஓடி, தன்னுடைய முக்கிய போட்டியாளரான அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினை விட முன்னிலை பெற்றார்.
-
“தமிழ்த் தலைமைகளுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் அஸ்மின்”- மௌலவி சுபியான் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம்: தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் இலங்கை அரசும் சர்வதேசமும் ஈடுபாடு காட்டிவரும் இந்தக் காலகட்டத்தில் “வடக்கு முஸ்லிம்களின் விடயத்தை ஓர் அரசியல் ரீதியான விடயமாக நோக்க வேண்டிய அவசியம் கிடையாது” என்று வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்துள்ள கூற்றை வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் தலைவர் மௌலவி பி.ஏ.சுபியான் வெகுவாகக் கண்டித்துள்ளார்.
-
கல்முனையில் நீர் சேகரிப்பு மற்றும் நீர் உந்தும் நிலையம் திறந்து வைப்பு
ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைதீன் கல்முனை: கல்முனையில் அமைக்கப்பட்ட நீர் சேகரிப்பு மற்றும் நீர் உந்தும் நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (13) இடம்பெற்றது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்குப் பிராந்திய பொது முகாமையாளர் பொறியாளாலர் எம்.ஏ.ரஷீத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
-
காத்தான்குடி நகரசபைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் – செயலாளர் சர்வேஸ்வரன்
எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: காத்தான்குடி நகரசபைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக அதன் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தெரிவத்தார். காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை (12) வெளியாகிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘புதிய நாளை’யில் நாசமாகிறது நகரசபை என்ற தலைப்பில் காத்தான்குடி நகரசபையில் மோசடிகளும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் நடைபெறுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-
MOH பின் வீதி கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் புனரமைப்பு
MT. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடி MOH பின் வீதியினை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் அவ்வீதி உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதிக மக்கள் பயன்பாட்டையுடைய இவ்வீதியானது பல வருட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. மழை காலங்களில் இவ்வீதியில் அதிகமான வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக இவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
-
காத்தான்குடி வாவிக்கரையினை அழகுபடுத்தும் வேலைத்திட்டம்
எம். எச். எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி (மட்டு) வாவிக்கரையினை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நேற்று (12) கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பி எஸ் டீ ஜீ திட்டத்தின் கீழ் 4 மில்லியன் ரூபாய் செலவில் அமையவுள்ள இவ் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ எல் எம் என் முபீன், நகர சபை செயலாளர் சர்வேஸ்வரன்,…