காத்தான்குடி நகரசபைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் – செயலாளர் சர்வேஸ்வரன்

  • எம்.ஐ.அப்துல் நஸார்

urban (2)காத்தான்குடி: காத்தான்குடி நகரசபைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக அதன் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தெரிவத்தார். காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை (12) வெளியாகிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘புதிய நாளை’யில் நாசமாகிறது நகரசபை என்ற தலைப்பில் காத்தான்குடி நகரசபையில் மோசடிகளும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் நடைபெறுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,

அவர்கள் ஆதாரமில்லாமல் கருத்துக்களை வெளியிடுபவர்கள், ஆதாரமில்லாமல்தான் இதனையும் வெளியிட்டுள்ளார்கள். கலாச்சார மண்டபம் கட்ட ஆரம்பிக்கப்படும்போது கூட இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இவர்களால் முன்வைக்கப்பட்டன. ஆனால் தற்போது அவர்களின் நிகழ்ச்சிகள் கூட கலாச்சார மண்டபத்திலேயே நடைபெறுகின்றன.

அதேபோன்றுதான் மடுவத்திற்கான காணி கொள்வனவின்போது ஊர் மக்களிடம் சென்று அந்தக் காணிகளை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும் கூறினார்கள். அந்த மடுவக் காணி கொள்வனவு செய்யப்படாதிருந்திருந்தால் சேதன உரம் தயாரிப்பதற்கான உற்பத்திக்கூடம் மற்றும் விலங்கறுமனை போன்றவற்றை கட்டுவதற்கு இடமிருந்திருக்காது.

இவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமலேயே இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பிலும் எம்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் பொதுவாக வருடாந்த பொருளிருப்பு கணக்கீடு செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட முடியாதவை என அக் குழு அடையாளப்படுத்துகின்ற வாகனங்களை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு இருக்கிறது. அதற்கு முறையான பொறியியல் அறிக்கைகளைப் பெற்றே விற்பனை செய்யப்படுகின்றது. விற்பனை செய்யப்படுகிறதென்றால் அது நானே விற்பனை செய்கின்றேன் என்பது அர்த்தமல்ல.

கொள்வனவு தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடயத்திற்கும் விடய எழுதுநர்கள் இருக்கின்றனர். இறுதியாகவே கோவைகள் எனது கையொப்பத்திற்கு வருகின்றன. பெறுகைக் குழுவொன்று இருக்கிறது, வேறு குழுக்கள் இருக்கின்றன, அக் குழுக்கள் முடிவெடுத்த பின்னரே எனது ஒப்புதலுக்கு வருகின்றன.

இன்னுமொரு விடயம் என்னவென்றால், சுமார் பத்து பன்னிரெண்டு நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் எமது நகர சபை வேலைத்தளத்தினுள் அத்துமீறி பிரவேசித்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ஒளிப்படம் எடுத்திருக்கிறார்கள். நான் நினைத்திருந்தால் அதனை பொலீஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்க முடியும். ஒரு வீட்டினுள்ளோ நுழைவதற்கு முன்னர் அனுமதி பெறவேண்டும். இப்படி அனுமதி பெறாது உள்ளே நுழைந்தவர்களின் கதைகளை எவ்வாறு ஏற்பது?

அதிகமான ஆளணி என்பது புதிய ஒன்றல்ல, அது நீண்டகாலமாக இருக்கிறது. அவர்களின் கட்சிசார்ந்த இருவர் நகரசபையில் உறுப்பினர்களாக இருந்த காலத்திலும் அதிகமான ஆளணி காணப்பட்டது. அந்த நிலைமை தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

மழை அங்கிகளைப் பொறுத்தவரை அது ஜனவரியில் நடந்த பிரச்சனை தொழில்நுட்ப உத்தியோகத்தர், விசாரணை உத்தியோகத்தர் மற்றும் பெறுகைக் குழு என்பன வந்து பார்த்தது தீர்மானம் எடுக்கும். ஒரு இலட்ச ரூபாயில் நாற்பத்தெட்டாயிரம் கொமிசன் அடிப்பது என்பது பெரிய விசயம். ஆரைவாசிக் காசு ஐம்பது வீதம். இது எங்காவது நடக்குமா? எங்களைக் கண்காணிப்பதற்கு கணக்காய்வாளர்கள் இருக்கின்றார்கள். மாகாண கணக்காய்வாளர்கள் இருக்கின்றார்கள், பொதுக் கணக்காய்வாளர்கள் இருக்கின்றார்கள், உள்ளகக் கணக்காய்வாளர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அத்தனைபேரும் வந்து பார்வையிடுகின்றனர். இவர்கள் வேறு வேறு நபர்கள் இவர்களுக்கூடாக அனைத்தும் வடிகட்டப்பட்டே வெளிவரும். அவர்களுக்கு தெரியாமல் எதுவும் நடைபெறாது. அப்படியென்றால் அவர்கள் அனைவருக்கும் நாம் பங்கு வழங்குகின்றோமா?

டிசம்பர் மாதம் அதிக மழை பெய்கின்ற காலம். நாம் காத்தான்குடியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவரின் மட்டக்களப்புக் கடையிலேயே நாம் கொள்வனவு செய்தோம். டிசம்பர் மழை காலத்தில் கம்பனிகளில் எடுப்பது கடினம். நான் மட்டக்களப்பு என்றபடியால் மட்டக்களப்பில் கொள்வனவு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களுக்கென்று ஒரு கொள்வனவுக் குழு இருக்கின்றது. இறுதியாகவே நான் கையொப்பமிடுகின்றேன்.

urban (2)

ஒரு கொள்வனவை மேற்கொள்ளும்போது அங்கு பெறுகைக்குழு இருக்கிறது தொழில்நுட்பக் குழு இருக்கின்றது. இறுதியாகத்தான் எனது கையொப்பத்திற்கு வருகிறது. எல்லாவற்றையும் நானே செய்கின்றேன் என குற்றம் சுமத்தக்கூடாது. பெறுகைக்கு ஒரு விடய எழுதுநர் இருக்கின்றார், வாகனத்திற்கு ஒரு விடய எழுதுநர் இருக்கின்றார், வருமானத்திற்கு ஒரு விடய எழுதுநர் இருக்கின்றார். அவர்களே அவற்றை கையாள்கின்றனர்.

நகர சபையின் வாகனங்கள் தனிப்பட்டவர்களின் தேவைக்குப் பயன்படுகின்றமை தொடர்பிலும் நகர சபை செயலாளரின் சொந்தப் பயன்பாட்டிற்கு வாகனங்களும் ஆளணியினரும் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அது நிரூபிக்கப்பட வேண்டும்.

வாகனங்கள் மட்டக்களப்புக்கு வந்து போவது சம்பந்தமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். நாங்கள் கோழிக் கழிவுகளை உத்தியோகப்பற்றற்ற ரீதியில் மட்டக்களப்பில் கொட்டி வருகின்றோம். இதனை அவர்கள் பிரசுரித்திருக்கிறார்கள். காத்தான்குடியின் கோழிக் கழிவுகளை வெளியில் கொண்டு செல்ல முடியாது. காத்தான்குடியிலும் அவற்றை கொட்டுவதற்கு இடமில்லை. அதன் காரணமாக மட்டக்களப்பில் உத்தியோகப்பற்றற்றவிதத்தில் நாம் அதனை அகற்றி வருகின்றோம். அது தடுக்கப்படுமானால் அவற்றை கொட்டுவதற்கு இடமில்லை. அந்த நேரத்தில் இதனைப் பிரசுரித்தவர்களின் வீடுகளிலேயே கொட்ட வேண்டும். மட்டக்களப்புக்கு வாகனம் செல்கிறது என்பதற்காக எனது வீட்டுக்குத்தான் வாகனம் செல்கிறது என அர்த்தமாகாது.

எனக்கு வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கறது அதை நான் பயன்படுத்தத்தானே வேண்டும்.

நகர சபையில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மிகவும் பழைமையானவை 2000, 1999 ஆண்டுகளுக்கு முற்பட்டவையே அங்குள்ளன. அந்த வாகனங்களை ஓரிடத்தல் நிறுத்தினால் அதனை மீண்டும் இயங்க வைக்கமுடியாது. அதனால் அவற்றை தொடர்சியாக ஓடவைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு தொடர்ச்சியாக ஓடுவதால் திருத்தங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. நகர சபையில் தற்போது மூன்று ட்ரக்டர்கள் மாத்திரமே புதியனவாக இருக்கின்றன. ஏனைய அனைத்தும் பழையவை. புதியவைகள் தற்போதுதான் வந்துகொண்டிருக்கின்றன.

ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது காத்தான்குடி சிறியதெரு பிரதேசமாகும். மடுவத்தில் மாடுகளை அறுத்தால் அதன் கழிவுகளை அங்குதான் புதைக்க வேண்டும் ஏனென்றால் அவற்றை அகற்றுவதற்கு வேறு இடமில்லை. அங்கு புதைக்கக் கூடாதென்றால் மாட்டிறைச்சியை நிற்பாட்ட வேண்டும். துர்நாற்றம் வீசத்தான் செய்யும் அதற்கு சில ஏற்பாடுகளைச் செய்து நாம் புதைக்கின்றோம்.

மடுவத்தில் உள்ள மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதென்றால் அவர்கள் அதனைப் பொறுப்பேற்றால் மாடறுப்பதை நிறுத்த வேண்டும். மாட்டுக் கழிவுகளை எங்கு கொட்டுவது மட்டக்களப்பில் கொட்ட விடுவார்களா? அல்லது ஆரையம்பதியில்தான் கொட்ட விடுவார்களா ? எங்குதான் அவற்றை புதைப்பது மடுவத்தில்தான் புதைக்க வேண்டும் எனக் கூறினார் காத்தான்குடி நகரசபைச் செயலாளர் சர்வேஸ்வரன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s