-
தோனாவினுடைய சரியான அளவினை அடையாளப்படுத்தும் நடவடிக்கை
எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கை்கமைவாக மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் காத்தான்குடி சின்னத்தோணாவினுடைய புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இத்தோணாவை ஊடறுத்து செல்லும் பகுதிகளில் பொதுமக்களின் காணிகளும் உள்ளடங்கியுள்ளது. தோனாவினுடைய சரியான அளவினை நியாயமான முறையில் பிரதேச பொதுமக்களின் சம்மதத்துடன் அடையாளப்படுத்தும் நடவடிக்கை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் தலைமையில் 2016.08.25ஆந்திகதி (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
-
வர்த்தகர் மொஹமட் சுலைமான் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது
கொழும்பு: கடந்த 21ஆம் திகதி பம்பலபிட்டி பகுதியை சேர்ந்த வர்த்தகரான மொஹமட் ஷாகிப் சுலைமான் (29) என்பவர் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார்.தட்டையான ஆயுதத்தினால் தலையின் பின் பகுதியில் தாக்கப்பட்டமையால், உடலினுள் இரத்தக் கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சுவிஸில் தலா ஒருவருக்கு நாலு இலட்சம் கிடைக்கிறது!
சூரிச்: தனது நாட்டில் வசிக்கும் மக்களுக்காக மாதாந்தம் 2,500 டொலர்களை வழங்குவதற்கு சுவிட்ஸலாந்து அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய மக்கள் தொழில் புரியும் இடங்களிலேயே இதனைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார இலாபத்தை நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருனுவில பிரதேச மக்களின் துயரங்களை கேட்டறிந்த பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
உன்னிச்சை: உன்னிச்சை இருனுருவில் பிரதேசத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அங்கு யுத்தத்தின் பின் மீள்குடியேறியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார். இருனுருவில் பிரதேச மக்களுக்கும் கிழக்கு மாகாணச பை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 20.08.2016ஆந்திகதி (சனிக்கிழமை) இருனுருவில் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
தாக்குதலுக்குள்ளான சிறுவன் றிஜானை அரசியற் செயற்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: கடந்த 17ம் திகதி இரவு காத்தான்குடி ரெலிகொம் வீதி வர்த்தக நிலையத்தில்தாக்குதலுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் புதிய காத்தான்குடி அல்அமீன் வீதியைச் சேர்ந்த காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் எம்.ஆர். றிஜானை, ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வளர்ச்சி நடவடிக்கைச் செயற்பாட்டாளர் எம்.எஸ்.எம். ஷாபி நேற்று (23) நண்பகல் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டார்.
-
மட்டக்களப்பில் தலைமறைவாகியிருந்த நரி கைது
மட்டக்களப்பு: மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து கடந்த 11ஆம் திகதி தப்பிச்சென்ற நரி இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 11ஆம் திகதி திராய்மடு பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நரி எனப்படும் ஆர்.கே.டி.எஸ்.குணசேன என்பவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
-
மக்களால் சிறைபிடிக்கப்பட்ட முதலமைச்சர்
கொழும்பு: மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவின் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதுடன், முதலமைச்சரையும் சூழ்ந்து கொண்டதால் குறித்த பகுதி பெரும் பதற்றத்தில் உள்ளது. கொழும்பு கோட்டையில் உள்ள மேல்மாகாண மாகாண சபையில் வைத்து முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய இன்று மக்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.
-
அநீதியிழைக்கப்பட்ட 15 வயது மாணவனுக்கு நீதி கிடைக்க ஒத்துழைப்பு வழங்குக! “வார உரைகல்” ஊடக நிறுவனம் பகிரங்க வேண்டுகோள்
காத்தான்குடி ரெலிகொம் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கடந்த 17ம் திகதி புதன்கிழமை இரவு 15 வயதுடைய பாடசாலை மாணவன் எம்.ஆர். றிஜான் என்பவர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி காத்தான்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக 18ம் திகதி வியாழக்கிழமை செய்திகள் வௌியாகி இருந்தன.
-
மட்டு மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தில் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்
எம்.ரீ. ஹைதர் அலி மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலங்களின்போது இடம்பெயர்ந்து ஒவ்வொருஇடங்களாக வாழ்ந்துவந்த மக்கள் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீண்டும்மீளக்குடியேறுவதற்கு முற்படும்போது அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கின்ற அதே வேளையில் முஸ்லிம் கிராமங்கள் அதில் உள்வாங்கப்படாமல் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுக் கொண்டுவருகின்றது.
-
நாமலின் பட்டியலில் ரோசி சேனாநாயக்கவின் மகள்
கொழும்பு: முன்னாள் கண்காணிப்பு உறுப்பினரான சஜித் வாஸ் குணவர்தனவின் பொறுப்பின் கீழ் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு (CHOGM) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது தலைமையில் அதற்காக அலுவலகம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அனார்கலி தற்போது வரையில் அமெரிக்காவில் வசித்து வருகின்ற நிலையில், அவரினால் கொக்கலவில் கட்டப்பட்டுள்ள ஹோட்டலை கட்டுவதற்கு பணம் பெற்றுக் கொண்ட முறை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.