நிர்வாணக் கடற்கரையில் உனக்கென்ன வேலை..!

  • M. Jalees (UK)

franceபரிஸ்: பிரான்ஸின் உல்லாச ஓய்விட நகரில் சர்ச்சைக்குரிய புர்கினி முழு நீள நீச்சல் உடைக்கான தடையை பிரான்ஸின் உயரிய நிர்வாக நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்திருப்பதன் மூலம் சுமார் 30 பிரெஞ்சு மேயர்கள் அந்த நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சிவில் உரிமைகளின் அடிப்படையில் கடந்த  வெள்ளிக்கிழமை அன்று வீல்நோவ் லூபெய் நகரில் நடைமுறையாகி வரும் புர்கினி முழு நீள நீச்சல் உடைக்கான தடையை இடைநிறுத்தம் செய்வதாக பிரான்சின் உயரிய நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இஸ்லாம் வேகமாகப் பரவி வரும் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் முன்னிலை வகிக்கிறது. இஸ்லாம் அல்லாதவர்கள் குர்ஆனையும், உலக விடயங்களையும் ஆராய்ச்சி செய்வதன் மூலம் அதிகம் அதிகமாக இஸ்லாத்தைத் தழுவி வருகின்றனர்.

france

அரபுப் பிரதேசத்திலிருந்து அகதி அந்தஸ்த்து கோரி, அல்லது சட்டவிரோதமாகக் குடியேறி, இஸ்லாத்தை விற்றுப் பிளைக்கும் பெயர் தாங்கி அரபிகளின் அட்டாகாசங்கள் ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றன.

swim france

லெங்கின்ஸ்எனப்படும், ஐரோப்பியப் பெண்கள் அணியும் ஆடைகளை அணிந்து, ஓர் ரீ சேர்ட்டையும் மார்ப இறுக்கமாகத் தெரிய அணிந்து, தலையில் ஓர் குருவிக்கூடுபோல் ஓர் துண்டைப் போட்டுவிட்டு, சிகரட், மது, அந்நிய ஆண்களின் தொடர்புகள், புனித ரமழான் என்றும் பார்க்காமல் கே.எப்.ஸி, மெக் டொனால் போனன்ற உணவகங்களில் உண்டு திரிதல், கோப்பி கஃபேகளில் உணவு பரிமாறல் என்று, ஐரோப்பிய அரபிப் பெண்களின் இஸ்லாமிய வேசங்கள் களைந்து வருகின்றன.

france women

ஐரோப்பாவில் கோடைகாலத்தில், வெயிலை அனுபவிக்க புற்திடல்களிலும், கடற்கரைகளிலும் வெள்ளையர்கள் நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் குளித்துவிட்டு, கரையில் வந்து வெயிலில் சூரியக் குளியில் ஈடுபடுவது அங்குள்ள சம்பிரதாயமாகும்.

அந்நிய ஆண்கள் அரை நிர்வாணத்துடன் மல்லாக்கப்படுத்திருக்கும் கடற்கரை வெளியில் புர்கினி அணிந்த ஓர் இஸ்லாமியப் பெண்ணுக்கு என்ன வேலை வேண்டிக்கு கிடக்கு..?

அரை நிர்வாணமாக இருந்தாலும், குளித்துவிட்டு வரும்போது, முழு நிர்வாணமாகவே காட்சிதரும் இச்சீரழிவு இடம்பெறும் இடத்துக்கு முஸ்லிம் பெண்ணுக்கு என்ன வேலை…?

france swim

இவ்வாறு ஆண், பெண்கள் கலந்து அரைமுழு நிர்வாணத்துடன் குளிக்கும் இவ்விடங்களில் தலைக்கு மட்டும் பிடவையைக் கட்டிவிட்டு, இறுக்கமான ஆடையை உடலோடு ஒட்டிப்போட்டுக்கொண்டு, தண்ணீரில் நீந்தும் முஸ்லிம் பெயர்தாங்கிப் பெண்கள், ஐரோப்பிய பெண்களை விடவும், கவர்ச்சிக் கண்ணகளாகத் திகழ்கிறார்களே தவிர, இவர்களின் அங்கத்தை ஒருபோதும் ஒட்டிய ஆடைகளும், தன்னீரும் மறைக்கப்போவதில்லை.

கட்டுரையின் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்தவே குறித்த படங்கள் பதிவேற்றப்படுகின்றன. எமது வாசகர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருந்துகிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s