75 இலட்சம் ரூபா நிதியொதிக்கீட்டில் ஓட்டமாவடியில் புதிய பஸ் தரிப்பிடம்

  • எம்.ரீ. ஹைதர் அலி

oddamavadiஓட்டமாவடி: கிழக்கு மாகாண சபையினால் பிரதேச மக்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் 2016ஆம் ஆண்டுக்கான நெல்சிப் திட்டத்தின் கீழ் கோறயைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையினால் எழுபத்தைந்து இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள மிக நீண்ட நாள் தேவையாக இருந்த புதிய பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2016.08.29ஆந்திகதி (திங்கட்கிழமை) ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் ஜே. சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களும் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்…

கிழக்கு மாகாண சபையினூடாக கிழக்கு மாகாணம் அபிவிருத்தியடைகின்றது என்ற ஒரு சிந்தனையை அல்லது ஒரு கருப்பொருளை மத்திய அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவத்தினை நான் இங்கு சுட்டிகாட்ட வேண்டும் கிழக்கு மாகாண சபையினுடைய அதிகாரத்திற்குட்பட்ட கிழக்கு மாகாண சபையினுடைய நிதியைக்கொண்டு அமைக்கப்பட்ட ஒரு விற்பனை நிலையம் ஒன்றினை கிழக்கு மாகாண முதலமைச்சர் திறந்து வைப்பதற்காக சென்றபோது மத்திய அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கக்கூடிய ஒருத்தரும், பிரதியமைச்சர் ஒருத்தரும் (பாரியார்) இதனை நாங்கள்தான் திறக்க வேண்டுமென்று நடந்துகொண்ட விதம் மத்திய அரசாங்கத்தினுடைய நிதியை செலவு செய்யாமல் மாகாண சபையினுடைய செலவில் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு விற்பனை நிலையத்தினை நாங்கள் பெயரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மிகவும் ஒரு அநாகரிகமான அரசியலை நடாத்துகின்ற ஒரு சிந்தனை இப்போது உருவாகியுள்ளது.

கிழக்கு மாகாணம் என்று பிரிக்கப்பட்டு முதலாவது மாகாண சபை 2008ஆம்ஆண்டு 2012ஆம்ஆண்டு இரண்டாவது கிழக்கு மாகாண சபையும் உருவாக்கப்பட்ட 8 வருட காலத்திற்குள் இந்த ஆட்சியிலே இருந்தவர்கள் மாகாண சபையினுடைய அதிகாரங்கள் என்ன அந்த மாகாண சபையின் அதிகாரத்தினூடாக எவ்வாறு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்ற சிந்தனையெல்லாம் விட்டுவிட்டு உள்ளுர் அரசியலை மாத்திரம் செய்துகொண்டு அபிவிருத்தி என்கின்ற விடயத்தில் ஒரு பொடுபோக்காக இருந்துவிட்டு மாகாண சபை இப்போது இயங்க ஆரம்பித்ததன் செய்தி கேட்டவுடன் அபிவிருத்திகள் நடைபெற இருக்கின்றபோது அதனை தடுப்பவர்களாக இப்போது மாறி இருக்கின்றனர்.

oddamavadi

வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக மாகாண சபையினூடாக நிதிகளை நாங்கள் கொண்டு வருகின்றபோது அதனை தடை செய்வதற்கு வீதியினை அகலமாக போட வேண்டும், காண் போட்டு போட வேண்டும் என்று பொதுமக்களை தூண்டி விடுவது. இவ்விடயத்தில் மக்கள் மிகவும் நிதானமாக இருக்கின்றார்கள். அபிவிருத்தி என்பது மிக நீண்ட காலமாக குறைவடைந்து நெலிவடைந்து கிடக்கின்ற இந்த கால கட்டத்தில் இவ்வாறான மிகப்பெரிய அபிவிருத்திகள் வருகின்றபோது தங்களுடைய அற்ப சொற்ப அரசியல் இலாபங்களுக்காக இவர்கள் யாரும் தடுக்கக்கூடாதென்று பொதுமக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.

பல கோடிக்கணக்கான ரூபாய்களை கிழக்கு மாகாண சபையினூடாக மாத்திரம் நாங்கள் மிக அண்மைக்காலமாக மாகாணத்தின் அபிவிருத்திக்காக செலவு செய்து கொண்டிருக்கின்றோம். உங்களுக்கு தெரிந்திருக்கும் நோன்பு காலத்திற்கு முன் பாடசாலை சார்ந்த அபிவிருத்தி பணிகள், வீதி அபிவிருத்தி பணிகள் என பல அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தோம். அதற்கு மேலாக சென்று வைத்தியசாலை அபிவிருத்தி பணி பொதுத்தேவை அபிவிருத்தி பணி என்று எங்களுடைய அபிவிருத்தி பணி மேலோங்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

இவ்வாறான விடயங்கள் நடக்கக்கூடாது. எவ்வழியிலாவது இதனை தடுத்து நிறுத்த வேண்டுமென்கின்ற சிந்தனை இப்போது ஒரு சிலரிடத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இன்ஷாஅல்லாஹ் எங்களுடைய அபிவிருத்தி பணிகளை அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நாங்கள் மக்களின் நலன்கருதி என்னென்ன திட்டங்களுக்கு நிதிகளை ஒதிக்கீடு செய்கின்றோமோ அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு முற்று முழுதாக அதனை நிறைவேற்றுவோம்.

ஏன் இதனை நாங்கள் சொல்லுகின்றோம் என்றால் பொதுவாக ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தி பணிகளுக்காக நாட்டுகின்ற கல்லு முளைக்காது அவ்வாறு ஒரு அபிப்பிராயம் இருக்கின்றது. அவ்வாறான அமைச்சர்கள் ஆரம்பத்தில் இருந்தார்கள். ஒரு வண்டியில் கற்களை ஏற்றிக்கொண்டு எங்கெயெல்லாம் கற்களை நாட்ட வேண்டுமோ அங்கேயெல்லாம் நாட்டிவிட்டு பிறகு தேர்தல் காலத்தில் மாத்திரம் சென்று வாக்கு கேட்பது. மக்கள் மத்தியில் ஒரு பார்வை வந்துவிட்டது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வைக்கின்ற கல் முளைக்காது என்று ஆனால் நாங்கள் நிதிகளை கொண்டு வந்து கொந்தராத்துக்களை கொடுத்துவிட்டுத்தான் கற்களை வைக்கின்றோம்.

ஏனென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற சக்தி இப்பொழுது மிகப்பெரும் விருட்சமாக வளர்ந்து கொண்டு வருகின்றதென்பதனை மற்றவர்களால் ஜீரனித்து கொள்ள முடியாமல் இருக்கின்றது. கிழக்கின் எழுச்சியென்று ஒன்றை உருவாக்கினார்கள். அது பழிக்கவில்லை. இப்போது ஓடி ஒழிந்து விட்டார்கள். கட்சிக்குள்ளே ஏதாவது உட்பூசலை உருவாக்க வேண்டும் அதற்குள் பொதுச்செயலாளர் அல்லது தவிசாளர் அவர்களுக்குள் ஏதாவது பிரச்சினைகளை உருவாக்க வேண்டுமென்று கங்கனம்கட்டி செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு வளர்ந்த இந்த சக்தி அதன்வளர்ச்சிக்கு முன்னால் அவர்கள் தோற்று போனார்கள்.

இந்த சக்தியை வளர்க்கின்ற பெருமை வளர்த்த பெருமை இந்த கல்குடாவுக்கு இருக்கின்றது. நான் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நழிவடைந்து செல்லுகின்றபோது அதனை அரவனைத்து வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்ற பெருமை கல்குடாவைத்தான் சாரும் என்பதை எல்லோரும் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆக மொத்தத்தில் இன்ஷாஅல்லாஹ் எதிர்காலத்தில் இதனை விட பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் கொண்டு வர இருக்கின்றோம்.

மாகாணத்தினுடைய கௌரவத்தினை பாதுகாக்க வேண்டும். அதனுடைய வலிமையை கூட்டிக்கொள்ள வேண்டுமென்ற விடயத்தில் கௌரவ முதலமைச்சர் அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுத்தது கிடையாது. பாடசாலை, வீதி, மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தியென்று இன்னும் எத்தனையோ அபிவிருத்திகள் மாகாணத்திற்குள்ளே செய்ய வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. அந்த வகையில் மாகாணத்திற்குள் ஒதுக்கப்பட்டுள்ள நிதி கிட்டத்தட்ட இன்னும் 8000 மில்லியன் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கின்றது அதாவது 800 கோடி ரூபாய் மிக விரைவாக செலவு செய்ய வேண்டியிருக்கின்றது.

கல்குடா என்பது மிகவும் தேவையுடைய ஒரு பிரதேசமாக இருக்கின்றது. அந்த பிரதேசத்திற்கு எங்களால் முடிந்த அளவு கூடிய நிதியினை இங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. அந்த வகையில் இன்ஷாஅல்லாஹ் நீங்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பின் காரணமாக எமக்கொரு சுருசுருப்பான முதலமைச்சர் கிடைத்ததன் காரணத்தினால் இவற்றை நாங்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றோம். இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் காலங்களிலும் எமது கட்சியினுடைய செயற்பாட்டினை மிகவும் வீரியமாக கொண்டு செல்ல வேண்மாக இருந்தால் நாங்கள் வெறுமெனே ஒன்றும் செய்ய இயலாத கட்சிக்கு பின்னாள் நிற்பதை விட இந்த கட்சியினுடைய பலத்தினை அதிகரிப்பதனூடாக ஒட்டுமொத்த முஸ்லிம்களுடைய ஒரு எழுச்சிக்குரலாகவும் அபிவிருத்தியினுடைய நல்லதொரு பாதையில் நாங்கள் வீரு நடைபோடுவதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேணடுமென கேட்டு விடைபெறுகின்றேன் என தனதுரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களும், விஷேட அதிதிகளாக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எச்.எம். இஸ்மாயில், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ். ஹமீட், காத்தான்குடி நகரசபை செயலாளர் எஸ்.எம். ஸபி மற்றும் பொதுமக்கள் என பலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s