இக்றா பாடசாலை உயர்தர மாணவர்களுக்கான பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் இரண்டாம் கட்ட புலமைப்பரிசில்

  • எம்.ரீ. ஹைதர் அலி

poonochimunai-iqraபூநொச்சிமுனை: பூநொச்சிமுனை கிராமத்தில் அமைந்திருக்கும் இக்றா பாடசாலை மாணவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பாடசாலை வரலாற்றில் சிறந்ததோர் சாதனையினை நிலைநாட்டி இருந்தனர். மிகவும் வறிய நிலையிலுள்ள இப்பாடசாலை மாணவர்கள் தமது உயர்தர கல்வியினை தொடர்வதில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கிய நிலையில் இம்மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

இப்பாடசாலையில் உயர்தர கல்வியினை தொடரும் மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான புலமைப்பரிசில் தொகையாக விஞ்ஞான துறையில் கல்வி கற்கும் 3 மாணவர்களின் கல்வி செலவுகளுக்காக மாதாந்தம் 1000.00 ரூபா வீதமும் மற்ற துறைகளில் கல்விகற்கும் ஏனைய 5 மாணவர்களின் கல்வி செலவுகளுக்காக மாதாந்தம் 500.00 ரூபா வீதமும் தனது சொந்த நிதியிலிருந்து வழங்குவதற்கு உறுதியளித்தார்.

இதற்கமைவாக கடந்த ஏப்ரல் மாதம் இக்றா பாடசாலையில் இடம்பெற்ற கா.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு உறுதுணையாக அமைந்த ஆசிரியர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வுவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தாம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக முதற்கட்டமாக உயர்தர மாணவர்களுக்கான மூன்று மாத உதவித் தொகையை வழங்கிவைத்தார்.

poonochimunai-iqra

மேலும் உயர்தர மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட புலமைப்பரிசில் தொகை வழங்கும் நிகழ்வு அன்மையில் இக்றா பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் உயர்தர மாணவர்களுக்கான ஐந்து மாத உதவித்தொகையினை இதன்போது வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

வெறுமனே கல்வி மாத்திரம் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு காரணமாக அமையாது. கடந்த யுத்த காலங்களில் இல்லாததை விட அதிகமான அளவு தற்போது காலச்சார சீரழிவுகள் இடம்பெறுகின்றன. ஒரு மனிதனை இன்னுமொரு மனிதன் அநியாயமான முறையில் கொலை செய்யும் அளவு மிக மோசமான ஒரு நிலை எமது சமூகத்திற்கு மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே கல்வியுடன் கூடிய ஒழுக்கமான ஒரு சமூகத்தினை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் அர்பணிப்புடன் செயற்பட வேண்டும். மார்க்க விடயங்களிலே நாம் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும். யாரிடத்தில் மார்க்கம் இருக்கின்றதோ அவரிடத்தில் சிறந்த ஒழுக்கம் இருக்கும்.

shibly

மேலும் வறுமை என்பது எந்த மாணவர்களின் கல்விக்கும் தடையாக அமைந்துவிடக் கூடாது. எவ்வாறான ஒரு சூழ்நிலையிலும் கல்வியினை தொடர்வதை நிறுத்தி விடக்கூடாது. குறைந்த பட்சம் உயர்தரம் வரையிலாவது தமது கல்வியினை தொடர வேண்டும். அதற்கான அனைத்து விதமான முயற்சிகளை செய்வதற்கும் நாங்கள் தயாராகவுள்ளோம்.

உண்மையில் இப்படசாலைக்கான மலசலகூட வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற விடயம் இதுவரை காலமும் எனது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை. இந்த வருடத்திற்குள் அல்லது அடுத்த வருட மாகாண சபை நிதியினூடாக இப்பாடசாலைக்கான மலசல கூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், முடிவுறாத நிலையில் காணப்படும் இப்பாடசாலையின் கட்டடத்தை அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2500 மில்லியன் நிதியூடாக பூரனப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், பௌதீக ரீதியில் மட்டுமல்லாது தற்போது பாரிய பிரச்சினையாகவுள்ள ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கும் நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். எமது மாகாணத்தில் மாத்திரம் 5021 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதற்காக 1172 பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க நாம் முயற்சித்த போது துரதிஸ்ட வசமாக மத்திய அரசாங்கம் 384 பட்டத்தாரி ஆசிரியர்களை மாத்திரமே எமது மாகாணத்திற்கு அனுமத்தித்திருக்கின்றது. இருந்த போதும் நூறு வீதம் ஆசிரியர் பற்றாக்குறையினை தீர்க்க முடியாவிட்டலும் நாங்கள் மேலதிக முயற்சியினை மேற்கொண்டு அதிகளவான ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். எனவே மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி சிறந்த எதிர்கால சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s