-
ரொஹிங்கா மக்கள் மீது தாக்குதல் – மியான்மார் அரசு ஒப்புதல்
ரொஹிங்கா: நாட்டின் மேற்கு பகுதியில் ரொஹிங்கா முஸ்லிம் சிறுபான்மையினர் கிராமங்களில் தாக்குதல் நடத்த ஹெலிகாப்டர் குண்டுவீச்சு விமானங்களை பயன்படுத்தியதை மியான்மார் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. மியான்மார் ராணுவத்திற்கும் ரொஹிங்கா முஸ்லிம் குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 2 படையினர் உள்பட குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதை அடுத்து விமான தாக்குதல் ஆதரவு கோரப்பட்டதாக மியான்மார் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
-
நிலநடுக்கத்தை தொடர்ந்து நியுஸிலாந்தை தாக்கியது சுனாமி
கிறைஸ்ட்சர்ச்: நியுஸிலாந்தின் தெற்கு தீவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கி உள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது. கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் 7.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்த நூற்றாண்டுக்கான சிறந்த ஜோக்
லண்டன்: நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் எனவும் அவரது உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான் எனவும் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
-
32 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த மண்ணில் அவமானப்பட்ட அவுஸ்திரேலியா
மெல்பேர்ன்: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 85 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த அவுஸ்திரேலியா அணி 32 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த மண்ணில் அவமானப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிளாண்டரின் அசுரவேகத்தில் அவுஸ்திரேலியா அணி 85 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
-
“ஒரு டொலர் சம்பளமேனும் எனக்கு வேண்டாம்”- ட்ரம்ப்
வோஷிங்டன் DC: பெரும் சர்ச்சைக்குரிய நபர் ஒருவர் உலக வல்லாதிக சக்தியாக திகழும் அமெரிக்காவின் ஜனாதிபதினாது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. பல கருத்துக் கணிப்புக்களை பொய்யாக்கி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து வெற்றி கொண்டார். அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி ட்ரம்ப் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவரின் அடுத்த செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என ஊடகங்கள் பேசத் தொடங்கியுள்ளன.
-
சூஃபி தர்காவில் குண்டு வெடிப்பு; 30 பேர் பலி
கராச்சி: தெற்கு பாகிஸ்தானில் தொலைதூரத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒரு சூஃபி தர்காவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உள்ளூர் தொலைக்காட்சியில், துறைமுக நகரமான கராச்சியின் வடக்கு பகுதியில், நூற்றுக்கணக்கான மக்கள் தொலைவில் உள்ள ஷா நூரானி வழிபாட்டுத்தலத்தில் இருந்தனர் என்று கூறுகிறது.
-
மீண்டும் பட்டையை கிளப்ப போகும் சனத் ஜெயசூரியா
டுபாய்: இந்தியன் சாம்பியன் லீக் என்ற புதிய டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் தற்போது விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் என்று இந்த தொடரை நடத்தும் Magpie Sports Group (MSG) தெரிவித்துள்ளது.
-
ருஹுனு பல்கலைகழகத்தின் எரிபொருள் கண்டுபிடிப்பு!
கொழும்பு: தேங்காய் தூள் மற்றும் எல்கி பயன்படுத்தி ருஹுனு பல்கலைகழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தினால் புதிய எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டீசலுக்கு இணையான திறன் புதிய எரிபொருளில் உள்ளதாக விஞ்ஞான பீடத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சிரேஷ்ட விரிவுரையாளர் சின்னா ரூபசிங்கவின் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பு முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
-
“தன்னை எதிர்த்தவர்கள் நாட்டின் மீது உணர்ச்சி மிகுந்த பற்றுக் கொண்டவர்கள்” – ட்ரம்ப்
வோஷிங்டன் DC: அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, அவரது வெற்றிக்கு எதிராக , போராட்டக்காரர்கள் அவரை கடுமையாக தாக்கிப் பேசிய சில மணி நேரங்களில், டிரம்ப் அவர்களை நாட்டின் மீது உணர்ச்சி மிகுந்த பற்றுக் கொண்டவர்கள் என்று விவரித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் மற்றும் பெருமைப்பட வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டொனால்ட் டிரம்ப்: யாருக்குக் கவலை, யாருக்கு மகிழ்ச்சி?
வோஷிங்டன்DC: குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பை அமெரிக்காவின் 45-வது அதிபராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.நேற்று வெளியான அமெரிக்க தேர்தல் முடிவுகள் பலருக்கும் மகிழ்ச்சியளித்தாலும், வேறு பல மில்லியன் மக்களைக் கவலையுறவும் செய்துள்ளது.
-
SP வீதி மற்றும் அஜந்தா வீதி என்பன கழிவு நீர் தேங்கி காணப்படுவதனால் மக்கள் அவதி
எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி: காத்தான்குடி SP வீதியில் கழிவு நீர் செல்லுகின்ற குழாய்களுக்குள் அடைப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக கழிவு நீர் நிரம்பி வழிந்து SP வீதி மற்றும் அஜந்தா வீதி என்பன கழிவு நீர் தேங்கி காணப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுவதோடு, இவ்வீதியால் பயணிப்பவர்கள் மிகவும் அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர்.
-
சவுதி மன்னர் சல்மான், இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் ட்ரம்பிற்கு வாழ்த்து!
வோஷிங்டன் DC: மத்திய கிழக்கில் பாதுகாப்பையும், ஸ்திரதன்மையையும் கொண்டு வருவதில் வெற்றியடைய இரானின் பிராந்திய போட்டி நாடாக இருக்கின்ற சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான், டிரம்புக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ, இஸ்ரேலின் உண்மையான நண்பர் டிரம்ப் என்று விவரித்திருப்பது உற்சாகமான மறுமொழியாக அந்நாட்டிலிருந்து வந்திருக்கிறது.