32 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த மண்ணில் அவமானப்பட்ட அவுஸ்திரேலியா

cricketமெல்பேர்ன்: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 85 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த அவுஸ்திரேலியா அணி 32 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த மண்ணில் அவமானப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிளாண்டரின் அசுரவேகத்தில் அவுஸ்திரேலியா அணி 85 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

அவுஸ்திரேலியா அணி தரப்பில் அணியின் தலைவர் ஸ்மித் 48 ஓட்டங்களும், மென்னி 10 ஓட்டங்கள் குவித்ததே அணியின் அதிகபட்ச ஓட்டமாகும். அவுஸ்திரேலியா அணியின் இந்த நிலைமைக்கு காரணம், தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த பிளாண்டர் தான். இவர் 10.1 ஓவர் மட்டும் வீசி 21 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார்.

cricket

85 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த அவுஸ்திரேலியா அணி கடந்த 32 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு சொந்த மண்ணில் மிகக் குறைவான ஓட்டங்களை பதிவு செய்துள்ளது.

இதற்கு முன்னர் 1984 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக பேர்த்தில் நடந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி, 76 ஓட்டங்களுக்குள் சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s