டொனால்ட் டிரம்ப்: யாருக்குக் கவலை, யாருக்கு மகிழ்ச்சி?

USA வோஷிங்டன்DC: குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்பை அமெரிக்காவின் 45-வது அதிபராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.நேற்று வெளியான அமெரிக்க தேர்தல் முடிவுகள் பலருக்கும் மகிழ்ச்சியளித்தாலும், வேறு பல மில்லியன் மக்களைக் கவலையுறவும் செய்துள்ளது.

டிரம்பின் வெற்றி குறித்து மேலும் படிக்க: டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கான ஐந்து காரணங்கள்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் போது பலனடைவது யார்? இழப்பது யார்?

பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரச்சார உரைகளை வைத்து அவரின் கருத்துக்கள், கொள்கைகள் என்னவென்பதை நாம் சற்று தெரிந்து கொள்ளலாம். மேலும், இவை துணை அதிபராகவுள்ள ப்ரொடெஸ்டண்ட் கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்தவரும், இந்தியானா மாநில ஆளுநருமான மைக் பென்சின் கருத்துக்களாகவும் கருதப்படுகிறது.

பெண்கள்

தங்கள் நாட்டின் முதல் பெண் அதிபரை அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்களா என்ற கேள்வி நிலவியதால், முன்னெப்போதும் இல்லாத வகையில் , நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், பாலினம் என்ற அம்சம் ஒரு முக்கிய அங்கம் வகித்தது.

பெண்கள் மீது அடக்குமுறை பிரயோகித்தவர் என்று டொனால்ட் டிரம்பின் மீது நிலவி வந்த விமர்சனத்தை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி வாரத்தில் பயன்படுத்திக் கொள்ள முயன்றார்.

பெண்களைக் குறைவாக எடை போடுபவர், இழிவுபடுத்தியவர் மற்றும் தாக்கியவர் என்று டிரம்ப் மீது 30 ஆண்டு குற்றச்சாட்டு உள்ளது வரலாறு என்று தெரிவித்த ஹிலரி, பெண்களைக் கொடுமைப்படுத்துபவர் என்று டிரம்ப் குறித்து விவரித்து குறிப்பிடத்தக்கது.ஆனால், தேர்தல் முடிவுகள் ஹிலரியின் கூற்றினை நிராகரித்தாகவே தெரிகிறது. டொனால்ட் டிரம்பை 42% பெண்கள் ஆதரித்தாக கருத்துக் கணிப்புகள் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளன.

தற்போது டிரம்ப் அமெரிக்க அதிபராகியுள்ள சூழலில், பெண்களின் எதிர்பார்ப்பு என்ன?

ஹிலரி குறித்த டிரம்பின் கருத்துக்களை படிக்க : ஹிலரி கிளிண்டனை ”சாத்தான்” என்று அழைத்த டொனால்ட் டிரம்ப்

வெற்றி பெறுபவர்கள்

கர்ப்பிணி பெண்கள் மற்றும் மூத்த பெண்மணிகள் டிரம்ப் நிர்வாகத்தில் பலனடைவோம் என்ற நம்பிக்கையில் காணப்படுகின்றனர்.

கர்ப்பிணி பெண்களுக்கு, ஆறு மாத பேறு கால விடுமுறையை அவர்களின் பணியாளர்கள் அளிக்கா விட்டாலும் அரசு வழங்கும் திட்டத்தை, டிரம்பின் மகளான இவான்கா, தன் தந்தையிடம் எடுத்துரைத்து அவரின் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறச் செய்தார்.

கண்ணுக்கு தெரியாத காயங்களான மனஉளைச்சல் சீர்கேடு மற்றும் மன பாதிப்பு ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனது அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என்ற டிரம்பின் வாக்குறுதி, பெண்களின் சுகாதாரத்தில் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்ற வாக்குறுதி ஆகியவை வயது மூத்த பெண்மணிகளை கவர்ந்த அம்சங்களாகும்.

USA

அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை மீண்டும் மீட்கப் போவதாகவும், வெள்ளை இனத்தை சேர்ந்த நடுத்தர பணியாளர்களின் வாழ்வில் செல்வ செழிப்பை உண்டாக்குவது மற்றும் தங்களின் உப பொருட்களை வெளிநாட்டில் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அபராதம் என்ற நிபந்தனை ஆகியவை டிரம்பை பல பெண்களும் ஆதரிக்க காரணங்களாக உள்ளன.தற்போது அமலில் உள்ள அமெரிக்கக் கருக்கலைப்பு சட்டத்தை டிரம்ப் எவ்வாறு கையாள்வர் என்பது குறித்து பல பெண் ஆர்வலர்களும் குறிப்பாக கவலை தெரிவித்துள்ளனர்.

கருக்கலைப்பு சட்டவிரோதமாக மாற்றப்பட்டால், கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு ஒரு வகையான தண்டனை அளிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று அவர் அச்சுறுத்தியது பல பலரின் புருவங்களையும் உயர்த்துச் செய்தது.

ஆனால், பின்னர் தன் நிலையை சற்று மாற்றி கொண்டு கருக்கலைப்பு செய்யயும் மருத்துவர்கள்/ பணியார்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறினார்.

அமெரிக்கா மற்றும் உலகெங்குமுள்ள முஸ்லீம்கள்.

அமெரிக்காவில் உள்ள மசூதிகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், தனது கூற்று அரசியல் ரீதியாக தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் அதனை பற்றி தான் கவலைப் படப்போவதில்லை என்றும் முன்பு டிரம்ப் வெளியிட்ட அறிக்கை அமெரிக்க முஸ்லீம்களை மிகவும் கவலையடைச் செய்யும் ஒன்றாகும்.

மேலும், முஸ்லீம்களை , பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற வகையில், சட்ட அமலாக்கம் மூலம் கண்காணிக்க வேண்டும் என்று டிரம்ப் பரிந்துரைத்தார்.
அமெரிக்காவில் வாழும் அனைத்து முஸ்லீம்கள் குறித்தும் ஒரு தகவல் கையேட்டினை உருவாக்க டிரம்ப் விரும்புகிறார் என்ற தகவல்கள் முன்பு பரவலாக வெளிவந்தன. ஆனால், டிரம்பின் கட்சியான குடியரசுக் கட்சி இக்கூற்றினை மறுத்தது.

வெற்றி பெறுபவர்கள்

இந்த தேர்தல் முடிவிலிருந்து இஸ்லாமிய சமூகத்தினருக்கு, டிரம்பின் நிர்வாகம் மூலம் விளையும் வெளிப்படையான நன்மைகள் எதனையும் சுட்டிக்காட்டுவது மிகவும் கடினமாகும்.

தனது தேர்தல் பிரச்சாரம் மற்றும் முந்தைய உரைகளில் இஸ்லாமிய சமூகத்தினரின் நம்பிக்கையை பெறுவதற்கு மட்டும் டிரம்ப் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள சில அமெரிக்க இஸ்லாமிய எழுத்தாளர்கள், தங்கள் சமூகத்தினரின் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.

தோல்வியடைபவர்கள்

இஸ்லாம் மதம் குறித்த அச்சத்தை தனது நலனுக்காக பயன்படுத்தியதாகவும், அமெரிக்க மண்ணில் எதிர்காலத்தில் தீவிரவாத செயல்கள் நடக்கக்கூடும் என்று அச்சப்படுபவர்களின் வாக்குகளை பெற எதிர்மறை கருத்துக்களை இஸ்லாமிய சமூகம் குறித்து தெரிவித்தாகவும் பெரும் வணிகரான டிரம்ப் மீது விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஜனநாயக கட்சியின் மாநாட்டில் இராக் போரில் கொல்லப்பட்ட இஸ்லாமியரான அமெரிக்க ராணுவ கேப்டன் (தலைவர்) ஹுமாயுன் கானின் தாய் கஜாலா கான் உரையாற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப், அவரது மத நம்பிக்கையால் தான் அவர் அங்கு உரையாடவில்லை என்று தெரிவித்தார்.

அதனை பின்னர் ஹுமாயுன் கானின் தாய் கஜாலா கான் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.கலிஃபோர்னியாவில் 14 பேர் பலியான பொது மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பத்திரிக்கை செய்தி வெளியிட்ட தெரிவித்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது, சர்வதேச அளவில் அவருக்கு பலமான கண்டனத்தை அளித்தது.

ஹிஸ்பானிக் சமூகத்தினர்

தனது தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கத்தில், மெக்சிகோ மற்றும் அமெரிக்க எல்லைக்கு இடையே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பப் போவதாக டிரம்ப் தெரிவித்தது சீற்றத்தை ஏற்படுத்திய பிரச்சார வாக்குறுதியாகும்.
முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் உள்ள 11 மில்லியன் மெக்சிகோ குடியேறிகளை நாடு கடத்தப் போவதாகவும் அவர் வாக்களித்திருந்தார்.
கடந்த ஜூன் 2015-இல் இது குறித்து டிரம்ப் கூறுகையில், ”நான் ஒரு மிகப் பெரிய மற்றும் சிறந்த தடுப்புச் சுவரை கட்டவுள்ளேன். என்னை விட வேறு யாரும் இதனை சிறப்பாக செய்து விட முடியாது.

இதற்காக ஆகும் செலவில் மெக்சிகோவையும் கட்ட வைப்பேன்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.

டொனால்ட் டிரம்பால் உலக அளவில் மாற்றங்கள் நிகழுமா என்பது குறித்து படிக்க: டொனால்ட் டிரம்ப்பால் உலக அளவில் நிகழ சாத்தியமுள்ள 5 மாற்றங்கள்

வெற்றி பெறுபவர்கள்

டொனால்ட் டிரம்பை மெக்சிகோ மக்களுக்கு ஒரு ஆபத்து என்று வர்ணித்துள்ள மெக்சிகோ அதிபர் அதிபர் என்ரிக் பினா நியேடோ, 8 பில்லியன் டாலர் செலவாகும் இந்த 2000 மைல் தொலைவிலான உத்தேச தடுப்புச் சுவருக்காக தன் நாட்டின் பங்காக நிதி அளிக்க தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் , லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்துள்ள மெக்சிகோ மக்களில் பலர் இந்த தடுப்பு சுவர் திட்டம் தொடங்கப்பட்டால், தங்களில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணுகின்றனர்.

அமெரிக்காவில் வாழும் லத்தீன் அமெரிக்க வம்சாவளியினரில் 29% டிரம்பை ஆதரித்துள்ளனர். இவர்களில் பலருக்கு குடியேற்றம் பெரிய பிரச்சனையில்லை. பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவையே இவர்களின் முக்கிய நோக்கமாகும்.

தோல்வியடைபவர்கள்

அமெரிக்காவில் பெரும்பாலும் சட்டவிரோதமாக தங்கியுள்ள 11 மில்லியன் குடியேறிகளில் உள்ள பல ஹிஸ்பானிக் சமூகத்தினர், டிரம்ப் அதிபரான பின்னர் கவலையடைவதற்கு பல காரணங்கள் உண்டு.

டிரம்ப் உத்தேசித்துள்ள தடுப்புச் சுவர் கட்டப்பட்டால் மெக்சிகோவை சேர்ந்த சுற்றுலாவாசிகள், மாணவர்கள் மற்றும் வணிகர்கள் என பலரும் இதனால் இழப்பை சந்திப்பர்.
ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்கள் தினமும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்கா செல்கின்றனர்.

மேலும், மெக்சிகோவில் அமெரிக்காவில் ஆறு மில்லியன் பணிகள் உருவாவதாகவும், அதனால் அமெரிக்க பொருளாதாரம் நன்மை அடைகிறது என்றும் சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மெக்சிகோ குடியேறிகள் குறித்து டிரம்பின் கருத்துக்களை படிக்க: நாட்டில் யாரை அனுமதிப்பது என்று முடிவெடுக்க அமெரிக்கர்களுக்கு உரிமையுண்டு: டிரம்ப்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s