-
விஞ்ஞானப் பிரிவில் காத்தான்குடி மாணவி றிஸ்மா ஜிப்ரி மாவட்டத்தில் முதலிடம்
காத்தான்குடி: கடந்த 2016 இடம்பெற்ற க.பொ.த. உ/த பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய காத்தான்குடி மீராபாலிகா வித்தியாலய மாணவி முகமட் ஜிப்ரி பாத்திமா றிஸ்மா 3 பாடங்களிலும் A சித்திபெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் அகில இலங்கை ரீதியில் 119வது இடத்தையும் பெற்று எம் மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
-
உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்கள்
கடந்த 2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பத்மனாதன் குருபரேஷன் தமிழ் மொழி மூலப் பரீட்சையில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவர் தொழில்நுட்பப் பிரிவில் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
-
பணம் பெற்றுக்கொண்டு கிழக்கு முதலமைச்சரிடம் வேலை வாய்ப்பு வேண்டித்தருவதாக ஏமாற்றப்பட்ட வாழைச்சேனை றிபாசிற்கான தீர்வு என்ன?
– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் வாழைச்சேனை: வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பதுரிய்யா பள்ளிவாயல் வீதியில் வசிக்கும் கடந்த ஆண்டு உயர்தர பரீட்சையில் தொழில் நுட்ப பிரிவில் மூன்று பாடங்கள் சித்தியடைந்திருக்கும் பெளசுல் அமீன் மொஹம்மட் றிபாஸ் எனும் இளைஞனிடம் ஆயுர்வேத வைத்தியசாலையில் கிழக்கு முதலமைச்சர் அல்-ஹாபிழ் நசீர் அஹமட்டினதும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரினதும் சிபார்சிற்கு அமைய ஊழியனாக பணி புரிய வேலை வாய்ப்பு பெற்று தருவதாக ஒரு வருடத்திற்கு முன்னர் ஓட்டமாவடி மீராவோடையில்
-
சவுதியில் ஊதியம் கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு சிறையும் கசையடியும்!!
மக்கா: கடந்த ஆண்டு தங்களுடைய ஊதியம் வழங்கப்படாதபோது, போராட்டங்கள் நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்கள் பலருக்கு சிறை தண்டனையும், கசையடிகளும் வழங்கப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சீனா-லண்டன் இடையே நேரடி சரக்கு ரயில் சேவை
பீஜிங்: சீனாவால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள சீனா மற்றும் லண்டன் இடையிலான நேரடி சரக்கு ரயில் சேவையின் பாதையில் முதல் ரயில் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. சீனாவின் கிழக்கில் உள்ள யீ வூ நகரிலிருந்து புறப்பட்டுச் சென்ற அந்த ரயில், துணிகள், பைகள் மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிச் சென்றது. இரண்டு வாரங்களில் அது லண்டன் சென்றடையும்.
-
முஸ்லிம் சமூகம் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள்ளே விழுந்து விட்டதா?
சுஐப் எம் காசிம் வில்பத்து சரணாலயத்தை விரிவு படுத்தி வன ஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை கைவிட வேண்டுமெனக் கோரி அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் தலைமையில் முஸ்லிம் எம் பிக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், முஸ்லிம் தேசிய கவுன்ஸில், தேசிய ஷூரா சபை ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் முக்கிய மூன்று தீர்மானங்கள் ஏகமனதாக எடுக்கப்பட்டன.
-
ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை காணவில்லை
சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத் ஒலுவில்: கடந்த 24ம் திகதி ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்களை இன்று வரை காணவில்லை என அவ் மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று மாலை அறிவித்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
-
கோமாவிலுள்ள அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்
ஜெம்சித் (ஏ) றகுமான் அம்பாறை: ஆட்சியின் பங்காளர்கள் நாம் என இனியும் மார்புதட்டி கொள்வதில் எந்த பயனுமில்லை. தாக்குதல்கள் இரண்டு வகைப்படும் நேரடித் தாக்குதல்,பதுங்கித் தாக்குதல்.மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட இனரீதியான வன்முறைகள் நேரடித்தாக்குதல் இதற்கான காரணத்தை யூகித்து கொள்ள முடியும்.நல்லாட்சி எனும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்படும் இனரீதியான வன்முறைகள் பதுங்கித் தாக்குவதாகும் இதனை யூகித்து கொள்வது கடினமானது.
-
வெளிநாட்டு மாணவிகளின் உயிரையும் மானத்தையும் பாதுகாத்த மட்டு அரச அதிபர்
மட்டக்களப்பு: கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற புகையிரதத்தில் வெளிநாட்டு பல்கலைகழக மாணவிகள் இருவரின் உயிரையும் மானத்தையும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ளஸ் பாதுகாத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
-
“2017 ஆம் ஆண்டில் தற்போதைய அரசை கவிழ்ப்பதே தமது நோக்கம்”- மஹிந்த
கொழும்பு: நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயமாக மஹிந்த கூறிய “2017 ஆம் ஆண்டில் தற்போதைய அரசை கவிழ்ப்பதே தமது நோக்கம்” என்ற கூற்றுதான் காணப்படுகின்றது. இதுவரை அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டுவந்த மஹிந்த, முதன்முறையாக அரசை கவிழ்ப்பேன் என்று கருத்து வெளியிட்டுள்ளார். இதனால் மஹிந்த தரப்பினர் உற்சாகத்திலும், அரசு தரப்பினர் சற்று குழப்பத்திரும் இருப்பதை காணக்கூடியதாகவே இருக்கின்றது.
-
காலியில் இடம்பெற்ற கோர விபத்து ; இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலி
காலி – நுகதுவ பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 22 மற்றும் 18 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். காரொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.