Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நடவடிக்கையே ஐரோப்பாவில் அகதிகள் வருவதற்கு காரணமாகும்” ட்ரம்பிற்கு மேர்கல் பதிலடி!

    பேர்லின்: டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துக்களுக்கு எதிரான சிறந்த தற்காப்பு என்பது ஐரோப்பிய ஒற்றுமைதான் என்று ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறியது குறித்து புகழ்ந்து பேசிய அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.

  • ஜனாதிபதியின் மட்டு விஜயம் தொடர்பில் காத்தான்குடியில் கலந்துரையாடல்

    காத்தான்குடி: கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மட்டக்களப்பு வருகை தொடர்பான கலந்துரையாடலொன்று (15) இடம்பெற்றது, காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் முதலமைச்சரின் செயலாளர் யூ எல் ஏ அசீஸ் உட்பட பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்,

  • “மனிதாபிமானமற்றவர்கள்”- 3 உயிர்களை காப்பாற்றிய விமானப்படை வீரரின் மனவேதனை

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு களப்பில் வீழ்ந்த முச்சக்கர வண்டியில் சிக்கியிருந்த 3 பேரை காப்பாற்றிய இளைஞர் ஒருவர் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது. குறித்த இளைஞர் மட்டக்களப்பு விமான படை முகாமில் சேவை புரிந்து வரும் தனுஸ்க என்ற வீரர் ஆவார். குறித்த நபர் அண்மையில் மட்டக்களப்பு நகரை நோக்கி சென்று கொண்டிருந்த போது களப்புக்கு அருகில் குறித்த விபத்தை கண்டு, அந்த இடத்திற்கு ஓடி சென்றுள்ளார்.

  • ஈரான் வாங்கிய முதல் எயார்பஸ் விமானம் தெஹ்ரானில் பத்திரமாக தரையிறங்கியது

    தெஹ்ரான்: எயார்பஸ் நிறுவனத்தின் பயணியர் விமானம் ஒன்றை ஈரான் வாங்கிய நிலையில் அது தெஹரானுக்கு வந்தடைந்துள்ளது. பல தசாப்தங்களில் மேற்குலக உற்பத்தியாளர் ஒருவரிடமிருந்து ஈரான் விலைக்கு வாங்கும் முதல் விமானம் இதுவாகும். பல தசாப்தங்களாக பொருளாதார ரீதியாக தனிமைப்பட்ட நிலையில் இருந்து, ஈரானின் மீண்டெழுந்து வருவதன் அடையாளமாக இந்த விமானத்தின் வரவு பார்க்கப்படுகிறது.

  • காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம் 2017

    ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார்,இமாம்கள் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் (12.01.2017 வியாழன்) புதிய காத்தான்குடி மட் அன்வர் வித்தியாலயத்தில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மௌலவி கே.எம்.எம் மன்சூர் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.

  • மியான்மாரை விட்டு வெளியேறும் ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    மியான்மார்: மியான்மாரிலிருந்து வெளியேறி வங்கதேசத்திற்குள் நுழையும் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் மட்டும் சுமார் 22 ஆயிரம் பேர் கிழக்கு வங்கதேசத்திற்குள் நுழைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

  • “கடந்த காலத்தில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் செய்த வேலைக்கு இப்போது நாங்கள் மேலதிகமாக செலவுசெய்யக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது”- சிப்லி

    – எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: கடந்த காலத்தில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் செய்த வேலைக்கு இப்போது நாங்கள் மேலதிகமாக செலவுசெய்யக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபைக்கு திண்மக்கழிவகற்றல் திட்டத்தினை மேலும் இலகுவாக்கும் நோக்கில் இரண்டு ட்ரக்டர்கள் வழங்கும் நிகழ்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் இவ்வாறு தெரிவித்தார்.

  • எதற்காக கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தினை விமர்சிக்க வேண்டும்?

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் 2016ம் ஆண்டு வெளியாகிய GCE உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஓட்டமாவடி எஸ்.எம்.டி ஹாஜியார் வீதியில் வசிக்கும் சாதாரன குடும்பத்தைச்சேர்;ந்த இல்யால் பாத்திமா அறூஸா எனும் மாணவி தொழிநுற்ப பிரிவு பரீட்சையில் தோற்றி மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 3ம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்த விடயமானது தேசியம் அறிந்த விடயம் என்பது சகல தரப்பினருக்கும் தெளிவானதாகும்.

  • கிழக்கு மெளலவி ஆசிரிய நியமன அமைப்பு

    காத்தான்குடி: கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட மெளலவி ஆசிரியர் பரீட்சையில் தோற்றி இதுவரை நியமனம் கிடைக்கப்பெறாத மெளலவி ஆசிரியர்கள் தமது நியமனம் கிடைப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி காத்தான்குடியில் பிரார்த்தனை!!

    – எம் எச் எம். அன்வர் காத்தான்குடி: ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நேற்று (08) புதிய காத்தான்குடி 167பி பிரிவில் சிரமதானம் மற்றும் துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றன. கிராம உத்தியோகத்தர் சில்மியா அன்ஸார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளிவாயல் மற்றும் நூறானியா பள்ளிவாயல் மையவாடி சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன் ஜனாதிபதியவர்களுக்கு ஆசி வேண்டி

  • வவுணியாவில் சோகம்! முதலாமிடம் பெற்ற மாணவி விபத்தில் பலி!!

    வவுனியா மாவட்டத்தில் கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்ற சிவதுர்க்கா சத்தியநாதன் என்ற மாணவி கடந்த வருடம் விபத்தில் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • உயர்தர பரீட்ச்சையில் தேசியத்தில் சாதனை படைத்துள்ள நூற்றாண்டை கொண்டாடும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை

    ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் இன்று வெளியகியுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சையில் இவ்வருடம் நூற்றாண்டினை கொண்டாட இருக்கும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற ஓட்டமாவடி எஸ்.எம்.ரி.ஹாஜியார் வீதியில் கூலி தொழில் செய்யும் சாதாரண குடும்பத்தில் வசிக்கும் இல்யாஸ் பாத்திமா அரூஸா உயிரியல் தொழில் நுட்ப பிரிவில் மூன்று A சித்திகளுடன் மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீத்தியில் மூன்றம் இடத்தினையும் பெற்று ஓட்டமாவடி பிரதேசத்திற்கும், மாவட்டத்திற்கும், தேசியத்திற்கும் நூற்றாண்டினை கொண்டாட இருக்கும் பாடசாலைக்கு நற் பெயரினை தேடிக்கொடுத்துள்ளர்.…

←Previous Page
1 … 146 147 148 149 150 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar