உயர்தர பரீட்ச்சையில் தேசியத்தில் சாதனை படைத்துள்ள நூற்றாண்டை கொண்டாடும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

img_6441இன்று வெளியகியுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சையில் இவ்வருடம் நூற்றாண்டினை கொண்டாட இருக்கும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற ஓட்டமாவடி எஸ்.எம்.ரி.ஹாஜியார் வீதியில் கூலி தொழில் செய்யும் சாதாரண குடும்பத்தில் வசிக்கும் இல்யாஸ் பாத்திமா அரூஸா உயிரியல் தொழில் நுட்ப பிரிவில் மூன்று A சித்திகளுடன் மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீத்தியில் மூன்றம் இடத்தினையும் பெற்று ஓட்டமாவடி பிரதேசத்திற்கும், மாவட்டத்திற்கும், தேசியத்திற்கும் நூற்றாண்டினை கொண்டாட இருக்கும் பாடசாலைக்கு நற் பெயரினை தேடிக்கொடுத்துள்ளர். இது பிரதேச மக்களினால் பெரிதும் பாராட்டப்படக் கூடிய விடயமாகவும் உள்ளது.

மேலும் வைத்திய துறைக்கு நாசர் றினோ என்ற மாணவியும், பொறியல் துறைக்கு றம்சீன் என்ற மாணவனும் தெரிவாகியுள்ளதோடு குறித்த இரண்டு பிரிவுகளிலும் ஏனைய துறைகளுக்கு 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலை கழக அனுமதி பெற்றுள்ளனர். அத்தோடு வர்த்தக பிரிவில் ஆறு மாணவர்கள் முகாமைத்துவத்திற்கு பல்கலை கழக அனுமதிக்காக தெரிவாகியுள்ளதோடு அதில் மூன்று மாணவர்கள் மூன்று பாடங்களிலும் A தரத்தில் சித்தியடைந்துள்ளமை விஷேட அம்சமாக பார்க்கப்படுகின்றது.

img_6441

மொத்தமாக இவ்வாண்டு ஓட்டமாவடி பிரதேசத்தின் வரலாற்றில் நூற்றாண்டினை கொண்டாட இருக்கும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் சகல பிரிவுகளிலும் இருந்தும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் வெவ்வேறு துறைகளுக்கு பல்கலை கழக அனுமதியினை பெற்றுள்ளமையானது பெரிதும் பாராட்டப்படக்கூடிய விடயமாக உள்ளது என தெரிவித்த கல்லூரியின் அதிபர் ஹலீம் இஷ்ஹாக் கற்பித்த ஆசிரியர்களுக்கும், சாதனை படைத்துள்ள மாணவி

அரூஸாவிற்கும், ஏனைய துறைகளில் பல்கலை கழக அனுமதி பெற்றுள்ள மாணவர்களுக்கும், உயர்தர விஞ்ஞான, கணித தொழில் நுட்ப துறையினை பல சவால்களுக்கு மத்தியில் முன்கொண்டு செல்லும் ECGO அமைப்பிற்கும், அதனை வழி நடாத்தும் விஞ்ஞான பிரிவின் பகுதி தலைவர் எம்.எம்.நவாஸ் ஆசிரியருக்கும் மிக முக்கியமாக தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் சாதனை படைத்த மாணவியினதும், அவருடைய பெற்றோர்களினதும், அதிபரினதும் குறித்த சாதனை சம்பந்தமான கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s