WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நாட்டின் உயர்சிக்காகவும்¸ மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பனிப்போடு சேவையாற்றியர்கள் கௌரவிப்பும் டி. பி ஜாயா அவர்களின் நினைவு தின விழாவும்

    பா.திருஞானம் கண்டி: மலையக கலை கலாச்சார சங்க ஏற்பாட்டில் நாட்டின் உயர்சிக்காகவும்¸ மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பனிப்போடு சேவையாற்றும்¸ மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மனிதநேயமிக்கவர்களை கௌரவிக்கும் தேசிய கௌரவ பட்டமளிப்பு விழாவும¸ அமரர். டி. பி ஜாயா அவர்களின் நினைவு தின விழாவும் – கண்டி கெப்பெட்டிபொல ஞாபகார்த்த மண்டபத்தில் மலையக கலை கலாசார சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

  • இரத்ததான நிகழ்வு

    அனுராதாதபுரம்: இலங்கையில் இரத்தானானத்தில் முதல் நிலை வகிக்கும் அமைப்பான ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நேகம கிளை 7வது முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபொரும் இரத்த தான நிகழ்வு இன்று (22.01.2017) காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை நேகம முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

  • “இஸ்லாமிய பயங்கரவாதத்தை உலகிலிருந்து அகற்றுவேன்”-ட்ரம்ப்

    வோஷிங்டன் DC: அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவின் துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுள்ளார். தனது தொடக்க உரையில், பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமா, ஆட்சி மாற்றத்தைக் கையாண்ட விதம் குறித்து பாராட்டினார். இந்த ஜனவரி 20ம் தேதி, மக்கள் நாட்டின் ஆட்சியாளர்களாக மீண்டும் மாறிய நாளாக நினைவு கூரப்படும் என்று அவர் கூறினார்.

  • தென்னாபிரிக்கா அபார வெற்றி!

    சென்டுரியன்: தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் சற்று முன்னர் விறுவிறுப்பாக இடம்பெற்ற 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட முதலாவது இருபது20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி அபாரமாக விளையாடி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. முதலாவது இணைப்பாட்டத்தில் அபாரமாக விளையாடிய இலங்கை அணி, பின்னர் அடுத்தடுத்து விக்கட்டுக்கள் வீழ்ந்ததால், வெற்றி நோக்கிச் சென்று பின்னர் தோல்வியைத் தழுவியது.

  • சாதனை படைத்த பாகிஸ்தான் இளம் வீரர் பாபர்

    பேர்த்: அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிபேர்த்  மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடு்த்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசம் 84 ஓட்டங்கள் எடுத்தார்.

  • கிடார் வாசித்து மக்களை வியப்பில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி..!

    கென்கல்லை: “ஒரு நிலையான பள்ளி சமூக திட்டத்தை நிறுவும் வேலைத்திட்டம்” நேற்று ஜனாதிபதி தலைமையில் கென்கல்லை மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வின் ஜனாதிபதி பாடசாலை மாணவர்களுடன் சகஜமாக உரையாடியதோடு, பேன்ட் வாத்தியக் குழு மாணவி ஒருவரின் கிடார் ஒன்றினை ஜனாதிபதி வாசித்ததோடு பாடலையும் பாடியுள்ளதாக கூறப்படுகின்றது.

  • எலக்ரோ மக்னடிக் பல்ஸ்- அமெரிக்காவின் புதிய ஆயுதம் அறிமுகம்!!

    லண்டன்: அமெரிக்கா இரகசியமான முறையில் தயாரிக்கும் ஆயுதம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகவும் இரகசியமான முறையில் தயாரிக்கபடும் இந்த ஆயுதத்தை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், எந்த ஒரு உயிர்சேதமும் ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், இந்த ஆயுதத்தைக்கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அந்த இடம் முழுவதுமாகவே , ஸ்தம்பித்து போய்விடும் என கூறப்படுகின்றது.

  • தமிழக உணர்வுக்கு ஆதரவாக விரதமிருக்கிறார் ஏ. ஆர். ரஹ்மான்!!

    சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக இன்று (வெள்ளிக்கிழமை) விரதம் இருக்கப் போவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக (19/01)  ஏ. ஆர். ரஹ்மான் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், ”தமிழகத்தின் உணர்வினை ஆதரிக்கும் விதமாக நான் நாளை விரதம் மேற்கொள்ள இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

  • ஏறாவூர் சவுக்கடி பள்ளிவாயல் வியாழேந்திரனின் எம்.பி.யின் ஆதரவாளர்களால் எரிக்கப்பட்டதா? விளக்கமளிக்கின்றார் வியாழேந்திரன் (காணொளி)

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று- செங்கலடி பிரதேச செயலகம் பிரதேச சபை, நிருவாக எல்லைகளுக்கு உட்பட்ட தன்னாமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் உள்ள மீள் குடியேற்ற பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் யுத்தகாலங்களில் கைவிடப்பட்ட காணிகளை மீண்டும் வேலிகள் அமைத்து அடைத்துக்கொண்டிருந்த பொழுது அங்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினரும், அவருடைய ஆதரவாளர்களும் வேலிகளை உடைத்து அங்கு தொழுகைக்காக தற்காலிகமாக கட்டப்படிருந்த பள்ளிவாயலினை தீவைத்து கொழுத்தியதாக முக நூல்களிலே புகைப்படங்களுடன்…

  • உன்னிச்சை இருநூறுவில் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் உன்னிச்சை: மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உன்னிச்சை இருநூறுவில் மக்களது நீண்ட கால தேவையாக காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு எட்டியுள்ளது.

  • சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் மாணவ தலைவர்ளுக்கான தேசிய மாநாடு

    ஏ.எல். டீன்பைரூஸ் கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா  குமாரதுங்க தலைமையின்கீழ் செயல்படும் ‘தேசிய ஒருமைப்பாட்டிக்கும் நல்லினத்துக்குமான அலுவலகம்’ ஏற்பாடு செய்திருந்த தேசிய ஒருங்கிணைப்பு நல்லினக்கத்தையேட்டி மாணவ தலைவர்களுக்கான தேசிய மாநாடு சந்திரிக்கா  குமாரதுங்க தலைமையில் (13.01.2017 வெள்ளி) பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் முழு நாள் நிகழ்வாக நடைபெற்றது.

  • “கடல் பிரித்தாலும் உயிர் துடிக்கும்”- யாழ்ப்பாணத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம்

    யாழ்ப்பாணம்: தமிழகத்தின் ஜல்லிக்கட்டு கோரிக்கையை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

←Previous Page
1 … 145 146 147 148 149 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar