WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சொந்த மண்ணில் ‌தென்னாபிரிக்காவைத் தோற்கடித்த இலங்கை

    கேப்டவ்ண்: முதல் இரண்டு போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்ததால், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் டிவில்லியர்ஸ் 63 ஓட்டங்களும், ஹெண்டிரிக்ஸ் 41 ஓட்டங்களும், மொசுல் 32 ஓட்டங்களும் எடுத்து அசத்தினர்.

  • கிழக்கு ஊடகவியலாளர்களின் வட மாகாணத்திற்கான மூன்று நாள் ஊடக பயணம் இன்று ஆரம்பம்

    காத்தான்குடி: கிழக்கு ஊடகவியலாளர்கள் வட மாகாணத்திற்கான ஊடக பயணமொன்றை  (26) வியாழக்கிழமை மேற்கொள்ள உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள இவ் ஊடக பயணத்தில் காத்தான்குடி மீடியா போரத்தினைச் சேர்ந்த 12 ஊடகவியலாளர்கள் பங்கு கொள்கின்றனர்.

  • கோஹ்லியின் சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்

    டுபாய்: இந்திய அணி வீரரான விராட் கோஹ்லி ஒற்றைத் தொடரில் மூன்று அரைசதங்கள் அடித்து சாதனை படைத்திருந்ததை, ஆப்கானிஸ்தான் வீரர் சாசத் தற்போது முறியடித்து சாதனை படைத்துள்ளார். துபாயில் ஐசிசி நடத்தும் “டெஸேர்ட் T20” போட்டி கடந்த ஜனவரி 14 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமட் ஷெஷாட் நான்கு அரைசதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

  • அமெரிக்காவிற்குள் நுழைய 7 நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு தடை

    வோஷிங்டன் DC: அமெரிக்காவில் புகலிடம் கோரி வரும் 7 நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக தடை விதிக்க உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்காவில் அகதிகள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பேன் எனவும், மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க எல்லையில் சுவரை எழுப்புவேன் எனவும் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்திருந்தார்.

  • ஸ்டேர்லிங் பவுண் வீழ்ச்சி

    லண்டன்: அமெரிக்க டொலருக்கு எதிராக பிரித்தானியா நாணயமான பவுண்டின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரெக்ஸிற் (BREXIT) தீர்மானம் பிரித்தானிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனையடுத்து அமெரிக்க டொலருக்கு எதிரான பவுண்ட் நாணய பெறுமதி 0.5% வீதத்தால் குறைவடைந்துள்ளது.

  • மஞ்சந்தொடுவாய் வாவிக்கரையில் 14 அடி நீளமான 600 கிலோ முதலை மடக்கிப்பிடிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பழைய – கல்முனை பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள வாவிக்கரையில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடமாடிய சுமார் 14 அடி நீளமும் சுமார் 600 கிலோ எடையும் கொண்ட முதலையை 25 இன்று புதன்கிழமை காலை அப்பகுதி மீனவர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

  • BREXIT- ‘நாடாளுமன்றத்துக்கே அதிக அதிகாரம்’-பிரிட்டன் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவிது தொடர்பான நடவடிக்கைகளை அரசு ஆரம்பிக்கும் முன்னர், அது குறிதது நாடாளுமன்றத்தின் ஆலோசனை பெறப்படவேண்டும் என்று நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  • அஞ்சலோ மேத்யூஸ் நாடு திரும்புவதற்கான அந்த இரு காரணங்கள்

    கேப்டவ்ன்: காயமடைந்த அணித் தலைவர் அஞ்சலோ மேத்யூஸ்  தென் ஆப்ரிக்காவிலிருந்து இலங்கைக்கு திரும்புகிறார். தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான சர்வதேச இரண்டாவது டி 20 நேற்று ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது, இதன்போது மேத்யூஸின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இவா நாடு திரும்புவதாக சில ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றது.

  • மலிங்கவுக்கு இப்படியொரு வாய்ப்பு

    மும்பாய்: இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு மும்பாய் இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் முக்கேஷ் அம்பானி விசேட விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். மலிங்கவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக அம்பானி இந்த விசேட விமானத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • 26 வருடங்களின் பின் வீடு திரும்பிய பெண் இவர்தான்

    நாவலப்பிட்டி: இலங்கையில் நிலவிய போர்ச் சூழலில் காணாமல்போன பெண் சுமார் 26 வருடங்களின் பின் திரும்பி வந்துள்ள நிலையில் அவர் குறித்து மேலும் ஒரு விடயம் தெரியவந்துள்ளது. திருமணமாகி மூன்றே மாதங்களில் கணவரை இழந்து வீட்டில் தனித்து இருந்த நிலையில் நாவலப்பிட்டியிலுள்ள கணவரின் உறவினர் வீட்டுக்கு சென்ற பெண்ணை கொழும்புக்கு அழைத்துச் சென்று வீடொன்றில் ஒப்படைத்தனர்.

  • பிரித்தானியாவில் மஞ்சள் எச்சரிக்கை!

    லண்டன்: பிரித்தானியாவில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டமான காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்துக்களில் பல்வேறு தடைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக பிரித்தானியாவின் தென்பகுதி கடுமையான உறைபனிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் ஹீத்ரோ விமான நிலையத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

  • மூதூர் ஹபீப் நகர் கடலில் மூழ்கி மூவர் பலி

    மூதூர்: திருக்கோணமலை மூதூர் பிரதேசத்தின் ஹபீப் நகர் பிரதேச கடலில் நீராடச் சென்ற மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிட்டம்புவ, திஹாரி பிரதேசத்தை சேர்ந்த குறித்த மூவரும், மூதூர் பகுதிக்கு வந்திருந்த வேளையில், இன்று (23) பிற்பகல் கடலில் குளிப்பதற்காகச் சென்ற வேளையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

←Previous Page
1 … 144 145 146 147 148 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar