-
அல்அதர் மீடியா
காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் கீழ் இயங்கும் அல் குர்ஆன் மத்ரஸாவில் சென்ற வருடம் (2016) புனித அல்குர்ஆனை ஓதி பரீட்சையில் சித்தியடைந்து வெளியேறும் மாணவர்களையும் அவர்களை கற்பித்து நெறிப்படுத்திய முஅல்லிம்களையும் மற்றும் தாருல் அதர் ஹிப்ழ் மனனப் பிரிவில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு இன்று (03) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையின் பின் காத்தான்குடி ஜாமியுல் அதர் ஜும்ஆ பள்ளிவாசலில் அதன் தலைவர் வை.பீ.ஏ. றஊப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் புனித அல்குர்ஆனை ஓதி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் நினைவுச் சின்னமும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் முஅல்லிம்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இஸ்லாமிய அழைப்பாளர் மெளலவி ஏ.எம். கனி (ஹாமி) அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இக்கெளரவிப்பு நிகழ்வில் அல் குர்ஆன் மத்ரஸா மாணவர்கள், பெற்றோர்கள், ஜமாத்தார்கள் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.