6வது வெற்றி வருடத்தில் கால் பதிக்கிறது யுவர்காத்தான்குடி!

Thank-You[1]அன்புள்ள வாசகர் நெஞ்சங்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

இதே போன்றதொரு இலங்கையின் சுதந்திர தினமான 04-02-2012 இல் www.yourkattankudy.com எனும் எமது தளம் இணையம் ஊடாக உலகை முதன் முதலில் வலம் வந்தது. ஓர் புகழ்பெற்ற நகரத்திற்குரிய அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி, எமது ஊரின் தனித் தகவல் தளமாகவே எமது இணையத்தளம் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டது.

காலத்தின் தேவை கருதி பின்னர் செய்தித்தளமாக அன்றிலிருந்து இன்றுவரை அல்லாஹ்வின் உதவியால் தடைகளின்றி எமது தளம் சிறப்பாக இயங்கி வருகிறது.

அடுக்கடுக்காக செய்தி என்ற போர்வையில் ஊர்ஜிதமற்ற முகநூல் பதிவுகளையும், தனிநபர்களது சொந்தப்பதிவுகளையும் செய்திகளாகத் தொகுத்து பிரசுரிப்பதில் எந்த அக்கறையும் எமக்கில்லை.

Thank-You[1]

சமூகத்துக்குத் தேவையான அத்தியவசிய விடங்களை மாத்திரம் செய்திகளாகவோ, தகவல்களாகவோ பதிவேற்றுவதில் எமது கவனம் தொடர்ந்தும் நிலைநாட்டப்படும்.

அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிக்காமல், தனிவழியில் எமது பயணம் தொடரும். சுட்டடிக்காட்ட வேண்டிய விடயங்களும், கண்டிக்க வேண்டிய விடயங்களும் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படும்.

எம்மோடு என்றும் தோள் கொடுக்கும் எமது அன்பு வாசக நெஞ்சங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், எம் தளத்திற்காக கடமை புரிந்தவர்களுக்கும் இந்நேரத்தில் தொடர்ந்தும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்!

நன்றி

என்றென்றும் அன்புடன்

YOURKATTANKUDY

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s