WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய நிருவாக சபை தெரிவு

    – ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும் கடந்த 10/02/2017 வெள்ளி பி.ப 7.00 மணிக்கு காத்தான்குடி கடற்கரை ”ஒரேன்ஞ் பிளேசில்” தலைவர் எஸ்.எம்.பீ.எம். றமீஸ் தலைமையில் இடம் பெற்றது நிகழ்வின் விஷேட அதிதிகளாக காத்தான்குடி நகரசபையின் செயலாளர் எம்.எஸ்.எம். ஸபி ,காத்தான்குடி மின்சார சபையின் மின் அத்தியட்சகர் பொறியியலாளர் எம்.எம்..நவ்பல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • சு கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி‌யை ஆரம்பித்தார் கருணா

    மட்டக்களப்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்கு கட்டளைத் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

  • கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் GFK Gala Day – 2017 ஒன்றுகூடல்

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு ! கத்தார் தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு (Sports Day) கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான விசேட ஒன்றுகூடல் GFK Gala Day – 2017 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, 14-02-2017 காலை 08:00 மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரை அஷ் ஷஹனிய்யாஹ்வில் அமைந்துள்ள “டொசாரி பார்க்”யில் (Al Dosari Zoo And Game Reserve.) ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வில் கத்தார் வாழ் கல்முனை சகோதரர்கள்…

  • அமெரிக்காவில் சிக்கிய இலங்கை அதிகாரிகள்

    லொஸ்ஏஞ்சல்ஸ்: கடந்த ஆட்சியின் போது அமெரிக்க லொஸ்ஏஞ்சல்ஸ் தூதரக அலுவலகத்திற்கு என கூறி குத்தகைக்கு சொகுசு வீடொன்றை பெற்றுக்கொண்ட போதும், அது கோத்தபாயவின் மகனின் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

  • கி.மு 701 ஆண்டில் வாழ்ந்த ஆதிகுடிகளின் மயானம்!

    தம்புள்ளை: இப்பன்கட்டுவ, மெகலிதிக வரலாற்று சிறப்பு மிக்க மயானம் சுற்றுலாப் பார்வையாளர்களுக்காக நேற்று (11) திறந்து வைக்கப்பட்டது. மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் பிரசாந்த குணவர்தனவின் தலைமையில் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. கிறிஸ்துவிற்கு முன் சுமார் 701 நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த ஆதிகுடிகளின் மயான சம்பிரதாயங்கள் தொடர்பான பல முக்கிய சான்றுகள் இந்த மயானத்தில் காணக்கூடியதாக உள்ளன.

  • “அல்மனார் கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்களமாக இதை மாற்றவே ஜூம்ஆ நடாத்த ஆரம்பித்தோம்” -அஷ்ஷெய்ஹ் ஏ எல் மும்தாஸ் மதனி

    – எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: அல்மனார் கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்களமாக இதை மாற்றவும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பயன்பெறவும் கடற்கரை வீதியிலிருந்து ஆற்றங்கரை வரை இவ்வீதியில் எவ்வித ஜூம்ஆவும் இடம்பெறுவதில்லை என்பதாலும் இந்த அல்மனார் கல்லாரியில் அமைந்துள்ள ஜாமியுல் கைதரி ஜூம்ஆப்பள்ளிவாயலில் ஜூம்ஆ நடாத்த எமதுநிருவாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

  • பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கட் அணித் தலைவராக சர்ஃப்ராஸ் அகமட் நியமனம்

    லாஹூர்: பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான அசார் அலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் 4-1 என்ற கணக்கில் இழந்தது, இதுமட்டுமின்றி சமீபகாலமாகவே அசார் அலி தலைமையிலான அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்தது.

  • இலங்கைக்கு 3ம் இடம்

    லண்டன்: தகவல் அறியும் சட்ட வரைவை வலுப்படுத்திய நாடுகள் இடையில் உலகில் இலங்கை மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளதாக கனேடிய அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கைக்குள் தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு இருக்கும் உரிமையானது உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை உயர்மட்டத்தில் இருப்பதாக கனேடிய சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்காக நிலையம் தெரிவித்துள்ளது.

  • ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் லண்டன் பயணித்த தீவிரவாதி

    லண்டன்: லண்டன் – ஸ்டேன்டட் விமான நிலைத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபர் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த செவ்வாய்கிழமை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான 330ஏ எயார் பஸ் விமானம் லாகூரில் இருந்து பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி பயணித்தது.

  • அட்டாளைச்சேனையில் விபத்து

    எஸ்.என்.எஸ்.றிஸ்லி அட்டாளைச்சேனை: கல்முனை இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த கார் ஒன்று அதே வழியால் சென்ற உழவு இயந்திரமொன்றுடன் மோதுண்டே இவ் விபத்து (09) நிகழ்ந்துள்ளது. குறித்த உழவு இயந்திரமும் காரும் ஒன்றன் பின் ஒன்றாக பயணித்த வேளை திடீரென உழவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதையிலே நின்றுவிட்டதாகவும் இதனை எதிர்பாராமல் பின்னால் வந்த கார் மெசினுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • கட்டுநாயக்க விமான நிலையத்தை 15 மில்லியன் பயணிகளின் வருகையாக அதிகரிக்கத் திட்டம்

    கொழும்பு: கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை, கடந்தாண்டில் 9.5 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் 14.5 மில்லியன் விமான பயணிகள், விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அமெரிக்காவுடன் மோத சீனா 500 போர்க்கப்பல்களுடன் பயிற்சி!

    பீஜிங்: அமெரிக்காவுடனான போருக்கு சீனா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக 500 க்கும் மேற்பட்ட யுத்தக் கப்பல்களுடன் சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 20ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

←Previous Page
1 … 140 141 142 143 144 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar