சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய நிருவாக சபை தெரிவு

ஏ.எல்.டீன்பைரூஸ்

Sunrise காத்தான்குடி: காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும் கடந்த 10/02/2017 வெள்ளி பி.ப 7.00 மணிக்கு காத்தான்குடி கடற்கரை ”ஒரேன்ஞ் பிளேசில்” தலைவர் எஸ்.எம்.பீ.எம். றமீஸ் தலைமையில் இடம் பெற்றது நிகழ்வின் விஷேட அதிதிகளாக காத்தான்குடி நகரசபையின் செயலாளர் எம்.எஸ்.எம். ஸபி ,காத்தான்குடி மின்சார சபையின் மின் அத்தியட்சகர் பொறியியலாளர் எம்.எம்..நவ்பல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பமாக ”இஸ்லாமிய நெறிப்படுத்தலில் விளையாட்டு எவ்வாறு அமையவேண்டும்” எனும் தலைப்பில் மார்க்க உபன்னியாசம் இடம்பெற்றது மேற்படி உரையினை அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.அஸ்பர் (பலாஹி) (பேஸ்இமாம் தாருல்அதர் அத்அவிய்யா) நிகழ்த்தினார்.

காத்தான்குடி சன்றைஸ் கழகத்தின் சிரேஷ்ட்ட உறுப்பினரும், உப தலைவரும், காத்தான்குடி கால் பந்தாட்ட சங்கத்தின் தலைவருமான என்.ரீ.பாறூக் அவர்களால் “விளையாட்டும் ஒழுக்கமும்” எனும் தலைப்பில் வீரர்களுக்கான விசேட சொற்பொழிவு ஒன்று நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட்ட,கனிஷ்ட்ட வீரா்களின் அதிகப்படியான பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற மேற்படி நிகழ்வின் போது 2016ஆம் ஆண்டில் கழகத்தின் வெற்றிக்காக பல்வேறுவகையில் பங்காற்றிய கழக வீரர்கள் சகலரும் பாராட்டப்பட்டதுடன் விசேடமாக கழக வீரா்களான SM.பாயிஸ்,MIM.மஹ்சூக்,M.சபான், M.மிஸ்ரத், MIM,பைசர், Mசாகிர் ,ABM.நியாஸ் ,MM.நூர்தீன்,MSM.அஸ்ஹர் ஆகியோருக்கு ”PRESIDENT HONOUR” நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Sunrise

காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் 2017/2018 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்யும் பொறுப்பு காத்தான்குடி நகர சபையின் செயலாளர் எம்.எஸ்.எம். ஸபியிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் தலைமையில் புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது அதனடிப்படையில்

காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் புதிய தலைவராக எஸ்.எம்.பீ.எம். றமீஸ் (றமீஸ் ராஜா) மீண்டும் தெரிவானார்.

Sunrise

கழகத்தின் பொதுச் செயலாளராக எம்.எஸ்.எம். அஸ்ஹர்
உபசெயலாளராக எம்.ஜ.எம். அதீக் அஹமட்
பொருளாளராக எம்.ஜ.எம்.பைசர்
உபதலைவர்களாக என்.ரீ..பாறூக், ஏ.சீ.ஏ. சமட்
விளையாட்டு தலைவராக எம்.ஜ.எம். நூர்தீன் ஆகியோர்களும்
உறுப்பினர்களாகஎஸ்எம்.பாயிஸ்ஏ.பீ.எம்.நியாஸ்,எச்எம்.ஹசிமுதீன்,எம்.ஜே.சஜா,எம்.ஜ.எம்.மஹ்சூக், ஆகியோர் தேரி செய்யப்பட்டதுடன் அணியின் முகாமையாளராக எச்எம். ஹஸிமுதீன் அணியின் பயிற்றுவிப்பாளர்களாக எஸ்எம்.பாயிஸ், ஏ.பீ.எம். நியாஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

Sunrise
கழகத்தின் சிரேஷ்ட்ட,கனிஷ்ட்ட வீரா்கள், அங்கத்தவர்கள்,ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் இராப்போசனத்துடன் கூட்டம் இரவு 11.30 மணியழவில் முடிவடைந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s