-
பிரித்தானிய மகாராணி இறந்தால் எவ்வாறு அறிவிப்பார்கள்?
லண்டன்: பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணி மரணமடைந்தால் London Bridge is down என அறிவிப்பார்கள் என தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் மகாராணிக்கு தற்போது 90 வயது ஆகிறது, அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.பிற்காலத்தில் அவர் உயிரிழந்தவுடன் வெளியுலகிற்கு அறிவிக்கும் முறைகள் தற்போது தெரியவந்துள்ளது.
-
மகப்பேறின்மை சிகிச்சை பெற ஓராண்டு ஊதியமில்லா விடுமுறை
கொழும்பு: அரசுபணிகளிலுள்ள பெண்கள் மகப்பேறின்மை தொடர்பான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுவதற்காக சலுகை விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி குறிப்பிட்ட பெண் அரசு அலுவலர் ஒருவர் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ சிகிச்சை பெறும் வகையில் ஒரு வருடத்திற்கு சம்பளமற்ற விடுமுறை எடுத்துகொள்ள முடியும்.
-
“ஐ. எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் இருப்பின் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்”- SLTJ
கொழும்பு: கடந்த 10/03 அன்று காத்தான்குடியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலுக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அத்தடன் இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் இருப்பின் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் ஏ.கே. ஹிஷாம் தெரிவித்தார்.
-
வரலாற்றுத் துரோகமிழைத்த அதாஉல்லாவின் அழைப்பை நிராகரிப்போம் – பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்
அம்பாரை: சரிந்து விழுந்த தனது அரசியல் கோட்டையை தூக்கி நிறுத்தவும் தான் முற்றாக இழந்த மக்கள் ஆதரவை மீண்டும் தேடிப்பிடித்துச் சேர்க்கவும் ‘வரலாற்றுத் தேவைக்காக ஒன்றுபடுவோம்’ என்று முஸ்லிம் அரசியலுக்கு வரலாற்றுத் தவறிழைத்த அதாஉல்லா மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார். இதைப் பார்க்கும் போது ஆடு நணைகிறது என்று ஓநாய் அழுத கதை நினைவுக்கு வருகிறது என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
-
உலக பல்கலைக்கழக(அமெரிக்க) விருது பெறும் எழுத்தாளர் வஸீலா ஸாஹிர்
எம்.எஸ்.எம்.ஸாகிர் மினுவாங்கொடை: இலங்கைப் பெண் எழுத்தாளர் வஸீலா ஸாஹிர் எழுதிய ‘மொழியின் மரணம்’சிறுகதை நூலுக்கு உலகத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் விருது கிடைக்கவுள்ளது. இந்நூல் கடந்த 2016 டிசம்பர் 03ஆம் திகதி இந்தியாவில் வெளியீட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள விருது வழங்கும் நிகழ்வின் போதே இந்த நூலுக்கும் விருது கிடைக்கவுள்ளது.
-
கிழக்கில், டெங்கு நோயாளர்கள் 3821 பேர் பாதிப்பு
திருகோணமலை: கிழக்கு மாகாணத்தில் இதுவரைக்கு 3821பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளானதாகவும், அதில் திருகோணமலையில் 2088பேரும், மட்டக்களப்பு பிராந்தியத்தில் 900பேரும், கல்முனை பிராந்தியத்தில் 733பேரும், அம்பாறை பிராந்தியத்தில் 100பேர் பாதிப்புக்குளானதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
-
காத்தான்குடியில் 40 வருடங்களைத் தொடும் மார்க்கப் பிளவுகள்….
காத்தான்குடி: 1979இல் காத்தான்குடியில் ஜம்மிய்யத்துல் உலமா சபையினருக்கும், மௌலவி அப்துர் ரஊப் மிஸ்பாஹி தரப்பினர்களுக்குமிடையில் ஏற்பட்ட மார்க்கப்பிளவுகள் தற்பொழுது சுமார் வருடங்கள் 40 ஐத் தொட்டுக்கொண்டிருக்கின்றது.
-
சூதாட்ட சர்ச்சை: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் இடைநிறுத்தம்!
லாஹூர்: பாகிஸ்தான் வேகப்பந்து ளரான முகமட் இர்பான், அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.. விதிமுறைகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கின் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-
சாரதி அனுமதி பத்திரம் கேட்ட அதிகாரியை காரால் அடித்து இழுத்துச் சென்ற பெண்
கொழும்பு: கடந்த தினங்களுக்கு முன்னர் இரவு 11.30 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரகரி வீதியில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய அதிகாரியான உபுல், பிரதீப் ஆகியோர் போக்குவரத்து கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.இதன்போது பாதை விதிமுறைகளை மீறிய டப்ளியூ.பி.சி.ஏ.எச். 9280 எனும் காரினை பொலிஸார் நிறுத்தி அவரின் சாரதி அனுமதி பத்திரத்தை கோரியுள்ளனர்.
-
ஸ்கொட்லாந்து விடுதலைக்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு
லண்டன்: ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாகும் நோக்கில் புதியதொரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் பெற விரும்புவதாக ஸ்ட்கொலாந்து முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜக்கிய ராஜ்ஜியம் வெளியேறுவதற்கு முறையான நடவடிக்கைகளை தொடங்குகின்ற வரைவு மீது வாக்கெடுப்பு நடத்த பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தயார் செய்து வருகையில் ஸ்டர்ஜன் இவ்வாறு அறிவித்திருக்கிறார்.
-
மஸ்ஜித் நபவியை துப்பரவு செய்யும் மக்கா இமாம் ஸூதைஸ்
மாஷா அல்லாஹ்! உன்மையான ஒரு அல்லாஹ்வின் மாளிகையின் நிருவாகி எப்படி தன் பொறுப்பை நிறைவேற்றவேண்டும் என்பதில் இரு ஹரம்களின் தலைமை நிருவாகி அஷ்.ஷெய்க்.அப்துர் ரஹ்மான் ஸுதைஸ் அவர்களின் ஒவ்வொரு முன்னெடுப்புக்களிலும் முன்மாதிரி அமைந்துள்ளது.
-
இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் மாணவியின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுமாறு பிரதம நீதியரசர் உத்தரவு!
அஸ்லம் எஸ்.மௌலானா கொழும்பு: மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மாணவியின் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜீ.சி.ஈ.உயர்தர பரீட்சை பெறுபேறுகளை உடனடியாக வெளியிடுமாறு பிரதம நீதியரசர் பிரசாத் டெப் உத்தரவிட்டுள்ளார். சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் ஊடாக குறித்த மாணவி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே பிரதம நீதியரசர் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.