சாரதி அனுமதி பத்திரம் கேட்ட அதிகாரியை காரால் அடித்து இழுத்துச் சென்ற பெண்

traffic-policeகொழும்பு: கடந்த தினங்களுக்கு முன்னர் இரவு 11.30 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரகரி வீதியில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய அதிகாரியான உபுல், பிரதீப் ஆகியோர் போக்குவரத்து கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.இதன்போது பாதை விதிமுறைகளை மீறிய டப்ளியூ.பி.சி.ஏ.எச். 9280 எனும் காரினை பொலிஸார் நிறுத்தி அவரின் சாரதி அனுமதி பத்திரத்தை கோரியுள்ளனர்.

அதில் 5 பெண்கள் இருந்துள்ளனர். காரினை கீதா எனும் பெண்ணே செலுத்தியுள்ளார். அனுமதி பத்திரத்தை வழங்காது காரினை இயக்கிய பெண் ஓட்டுனர் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளார். கார் மோதியதினால் காரின் பொனட் மீது அந்த உத்தியோகத்தர் விழவே தொடர்ந்தும் அப்பெண் முன்னோக்கி வேகமாக செலுத்தி சென்றுள்ளார்.

இதன் போது காரின் பொனட்டில் காயத்துடன் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் காரின் இரு பக்கங்களை பிடித்தவாறு உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடியுள்ளார். இதேவேளை, அவ்வீதியால் வேன் ஒன்றில் வந்த நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை காப்பாற்றியுள்ளார்.

மேலும், சம்பவத்தில் காரில் இருந்த நான்கு பெண்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன் காரைச் செலுத்திய பெண் தடுக்கி விழவே அவரை பொலிஸார் கைதுச் செய்துள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணையில், கைதான பெண் ஒரு நடமாடும் விபசார விடுதியை வாடகைக்கு எடுக்கும் வாகனங்களில் நடத்துபவர் எனவும், அது தொடர்பிலேயே பணத்துக்கு பெண்கள் சிலரை ஆடவருக்கு விற்பனைச் செய்ய செல்லும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பெண்ணை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஜயராம் டொஸ்கி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s