-
மூன்று மணித்தியாலங்கள் மாத்திரமே பயணிக்கும் லண்டன்-நியுயோர்க் விமானசேவை
லண்டன்: “பேபி பூம்” என பெயரிடப்பட்டுள்ள விமானத்தை அமெரிக்காவின் வெர்ஜின் தொழில் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் தயாரிக்கிறார். தற்போது குறித்த விமானத்தின் என்ஜினீயரிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், அந்த பணிகள் விரைவில் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா நோன்பு நோற்குமாறு வேண்டுகோள்
– எம்.ஐ.அப்துல் நஸார் காத்தான்குடி: காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொதுமக்கள் அனைவரையும் திங்கட்கிழமையன்று (27) நோன்பு நோற்குமாறு கேட்டுள்ளது. காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி எம்.ஐ. அப்துல் கையூம் ஷர்க்கீ மற்றும் அதன் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம். றிஸ்வான் மதனி ஆகியோரால் ஆத்மீக வழிகாட்டலும் விஷேட நோன்பு நோற்றலும் என்ற தலைப்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேய திங்கட்கிழமையன்று நோன்பு நோற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
ராணுவ ஆக்கிரமிப்பில் கரிமலையூற்று பள்ளிவாசல்
திருகோணமலை: திருகோணமலை மாவட்டம் சீனன்குடா பகுதியில் பாரம்பரியமாகக் கருதப்படும் கரிமலையூற்று பள்ளிவாசல் தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. கரிமலையூற்று பகுதியில் 4. 65 ஹெக்டெயர் பரப்பளவு காணி பாதுகாப்பு அமைச்சின் தேவை கருதி சுவீகரிப்பு தொடர்பான அறிவிப்பு திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளரினால் காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
-
யார் இந்த காலித் மசூத்?
லண்டன்: லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட நபர் 52 வயதுள்ள காலித் மசூத் என்று அடையாளம் கண்டுள்ள போலீசார், அவரது பெயரில் பல குழப்பங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். காலித் மசூத், மூன்று குழந்தைகளின் தந்தை என்று நம்பப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் ஆட்ரியன் ரஸல் அஜோ என்ற பெயரில் இருந்ததாகக் கூறும் பெருநகர போலீசார், பல்வேறு மாற்றுப் பெயர்கள் அல்லது அழைக்கப்படும் பெயர்களைக் கொண்டிருப்பதால் பெரும் குழப்பமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
-
முப்பத்தெட்டாயிரம் ரூபா பணத்துடன் காணாமல் போன பெண் ஒருவரின் பணப் பையை கண்டெடுத்து ஒப்படைத்த பொலிஸ் உத்தியோகத்தர் சுபியான்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கடந்த 17ம் திகதி மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் 61217 -பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.ரீ.எம்.சுபியானினால் கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் பணப்பை நேற்று 23 வியாழக்கிழமை கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஏ.ரஹீம் முன்னிலையில் உரிய பெண்ணிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
-
அமெரிக்காவை அடுத்து பிரிட்டனும் விமானங்களில் மின்னனு சாதனங்களுக்கு தடை
லண்டன்: துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிஷியா மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து நேரடியாக பிரிட்டனிற்கு வரும் விமானங்களில், பயணிகள் தங்களுடன் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் மடிக்கணினிகளுக்கு தடை விதித்து பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தடை டேப்லட் மற்றும் டிவிடி சாதனங்களுக்கும் பொருந்தும்.
-
காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் இன்றும் ஆரம்பம்
எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதமாகவும் வினைத்திறன் மிக்கதாயும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று 2017.03.21ஆந்திகதி-செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் மாகாண சபைக்ககட்டடத்தில் நடைபெற்றது. இவ்டெங்கு ஒழிப்பு பணியில் முப்படையினரும் ஈடுபட வேண்டுமென்ற தீர்மானம் ஒன்றும் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.
-
இலங்கை வரைபடத்தில் மாற்றம்
கொழும்பு: இலங்கையின் வரைபடத்தில் விரைவில் மாற்றம் ஏற்படும் என அளவீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலிமுகத்திடலில் உருவாகும் துறைமுக நகரத்தை நிர்மாணித்த பின்னர் குறித்த மாற்றம் ஏற்படவுள்ளதாக அளவீட்டுத் திணைக்களத்தின் அதிபதி பீ.எம்.பீ. உதயகாந்த குறிப்பிட்டார்.இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
-
சுற்றுலா ஜோடியை நடுவீதியில் இறக்கிவிட்டுச் சென்ற சாரதி: இலங்கைக்கு அவப்பெயர்..?
கொழும்பு: இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவரையும் அவருடன் வந்த ஒருவரையும் இலங்கைச் சாரதி ஒருவர் தகாத வார்த்தைகளில் திட்டி நடு வீதியில் இறக்கி விட்டு செல்லும் காணொளி தற்போது வேகமாக பரவி வருகின்றது.
-
கோத்தபாயவின் மரணப்படை
கொழும்பு: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையின் கீழ் செயற்பட்ட இரகசிய மரணப்படை குழுவினரே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்திருப்பதாகவும், இதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து செயற்பட்ட இந்தப் படை பிரிவு, இராணுவ கட்டளை அமைப்புக்கு வெளியே செயற்பட்டுள்ளதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
-
சம்மேளனத்தின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு தொடர்பான அவசர கலந்துரையாடல்
– எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி: தற்போது கிழக்கு மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் காத்தான்குடி பிரதேசத்தில் 17.03.2017ஆந்திகதி நேற்று 9 வயதுடைய சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது கவலைக்குரிய விடயமாகும்.
-
ஹஜ்: “ஈரான் யாத்திரிகள் கலந்து கொள்வார்கள்”- சவுதி அரேபியா
றியாத்: இந்த ஆண்டு ஹஜ் புனித பயணத்தில் ஈரான் யாத்ரிகர்கள் கலந்து கொள்வார்கள் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.கடந்த வருடம், ஈரான் யாத்ரிகர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதால், தங்கள் நாட்டு பிரஜைகள் ஹஜ் யாத்திரைக்கு செல்வதை ஈரான் அதிகாரிகள் தடுத்தனர்.