கோத்தபாயவின் மரணப்படை

கொழும்பு: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையின் கீழ் செயற்பட்ட இரகசிய மரணப்படை குழுவினரே ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்திருப்பதாகவும், இதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து செயற்பட்ட இந்தப் படை பிரிவு, இராணுவ கட்டளை அமைப்புக்கு வெளியே செயற்பட்டுள்ளதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கோத்தபாய ராஜபக்ச தேசிய புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஊடாக இரகசிய சிறப்பு படை பிரிவு ஒன்றை இயக்கியதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சாட்சியம் வழங்கியுள்ளார்.

குறித்த இரகசிய பிரிவானது தனது அதிகாரத்துக்கு அப்பால் செயற்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா சாட்சியம் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s