-
நாங்கள் பிரிய விரும்புகிறோம்: பிரிட்டனுக்கு ஸ்கொட்லாந்து கடிதம்
எடின்ப்ரோ: பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் வேளையில், ஸ்கொட்லாந்து, பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான பொது வாக்கெடுப்பு மீண்டும் நடத்தப்பட உள்ளது. பிரித்தானியாவை விட்டு ஸ்கொட்லாந்து வெளியேறுவதற்கு, ஸ்கொட்லாந்து எம்பிக்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
வில்பத்து பிரச்சினையில் ஜமியத்துல் உலமா சபையின் தலையீடு அரசியல் சித்துவிளையாட்டுக்கு முடிவு கட்டும்
முகம்மத் இக்பால் சாய்ந்தமருது வில்பத்து பிரச்சினை சம்பந்தமாக ஆராயும்பொருட்டு அகில இலங்கை ஜமியதுல் உலமாசபயின் அழைப்பின்பேரில் நேற்று (3௦.03.2017) இரவு மக்ரிப் தொழுகையின் பின்பு உலமாசபையின் கட்டத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது.கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
-
அஷ்ஷெய்க் அப்துல் பாஸித் புகாரி கலந்து கொள்ளும் விஷேட மார்க்கப் பிரச்சார சொற்பொழிவுகள் கட்டாரில்
டோஹா: கட்டாரில் இயங்கும் SLDC – QATAR -ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் பிரபல மார்க்கப் பிரச்சாரகர் அஷ்ஷெய்க் அப்துல் பாஸித் புகாரி கலந்து கொள்ளும் விஷேட இஸ்லாமிய மார்க்கப் பிரச்சார சொற்பொழிவுகள் இன்று 30 வியாழக்கிழமை, நாளை 31 வெள்ளிக்கிழமை,நாளை மறுதினம் 01 சனிக்கிழமை ஆகிய தினங்களில் கட்டார் நாட்டில் இடம்பெறவுள்ளது.
-
இலங்கை மைதானங்களில் நாய்கள் நுழைதல்
தம்புள்ள: இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியின் போது தம்புள்ள மைதானத்திற்குள் நாய் ஒன்று திடீர் என நுழைந்தது. குறித்த நாயை மைதானத்தில் இருந்து விரட்டுவதற்காக வங்கதேச அணி வீரர் சிறிது நேரம் பெரும் முயற்சியை மேற்கொண்டிருந்தார். இதன் காரணமாக குறித்த போட்டிக்கு தடங்கல் ஏற்பட்டதுடன் சிறிது நேரம் போட்டியும் இடைநிறுத்தப்பட்டது.
-
லண்டன் தாக்குதல்: காலித் மசூத் இற்கும் ஐ.எஸ் அமைப்பிற்கும் தொடர்பு இல்லை
லண்டன்: லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் தாக்குதல் நடத்திய காலித் மசூதின் செயல்கள் தனக்கு சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறும் அவரது மனைவி, அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.காவல் துறையினர் மூலம் ரோஹே ஹிடாரா விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்திருக்கிறார்.
-
ரஜப் மாதத்தின் தலைப்பிறை பற்றி தீர்மானிக்கும் நாள் இன்று
எம்.எஸ்.எம். ஸாகிர் கொழும்பு: ஹிஜ்ரி 1438 புனித ரஜப் மாதத்தின் தலைப்பிறை பற்றி தீர்மானிக்கும் நாள் 29 ஆம் திகதி புதன்கிழமை மாலை வியாழன் இரவாகும். எனவே மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 06.21 மணி முதல் புனித ரஜப் மாதத்தின் தலைப்பிறையைப் பார்க்குமாறும், பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் நேரில் அல்லது கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களில் ஏதாவது ஒன்றின் மூலம் அறியத்தருமாறும் சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கிறது.
-
பசீருக்கு பின்னணியில் அமைச்சர் ரிசாத் உள்ளார் என்பது இன்று ஆதாரபூர்வமாக நிரூபணமானது
“தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்” என்ற தலைப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருட்டு புத்தகம் ஒன்று வெளியானது. விலை உயர்ந்த தரத்தில் அச்சிடப்பட்ட இந்த புத்தகத்தினை முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்கள்தான் இதனை அச்சிட்டுள்ளார் என்ற சந்தேகம் பரவலாக காணப்பட்டது.
-
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் 17 பேர் 9 சித்தி
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் (28) வெளியான 2016 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் ஆர்.வெஸ்லியோ வாஸ் தெரிவித்தார்.
-
கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் ஒரு சாதனை
கெக்கிராவ: வெளியிடப்பட்ட சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மொஹமட் ரமீஸ் மொஹமட் இஹ்ஸான் மற்றும் மொஹமட் நஸீர் பாத்திமா ஸஹ்ரா ஆகிய இரு மாணவர்களும் 9 A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். ரம்ஸீன் உபைதுர் ரஹ்மான் என்ற மாணவன் 8 A, 1 B சித்தியைப் பெற்றுள்ளார்.
-
சூடு பிடித்துள்ள காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயல்-சம்மேளன விவகாரம்: உறுப்புரிமையிலிருந்து நீங்குவதாக பள்ளிவாயல் கடிதம் மூலம் தெரிவிப்பு
ஏ.எல். டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் பல்வேறுபட்ட பணிகளில் அன்றுதொட்டு இன்றுவரை மிகக் கூடுதலாக பங்களிப்பினை செய்து வருகின்ற பெரிய பள்ளிவாயல்களில் ஒன்றான காத்தான்குடி முஹ்யித்தீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலானது தாங்கள் காத்தான்குடி சம்மேளன உறுப்புரிமையிலிருந்து நீங்குவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
-
அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம்
1 அனுகி சமத்கா பஸ்குவல் விசாகா பாலிகா வித்தியாலயம், கொழும்பு 05 2 எஸ்.எம். முணசிங்க மஹாமாயா பாலிகா வித்தியாலயம், கண்டி 3 ஆர்.எம். சுகத் ரவீந்திர சன்வர ஆனந்தா கல்லூரி, கொழும்பு 10
-
அபிநந்தன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில், அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தை கொழும்பு ஐந்து, விசாகா மகளிர் கல்லூரி மாணவி, அனுத்கி சமத்கா பஸ்குவல் பெற்றுள்ளார்.