-
‘முஹாஷபா நெட்’ இணையத்தள அறிமுகம்
உலகில் பல இடங்களிலும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம் உம்மத்தினர்களுக்காக இஸ்லாம், ஆன்மீகம் மற்றும் உலகச் செய்திகளையும் நடைமுறைத் தகவல்களையும் உடனுக்குடன் அறியத் தரும் ‘முஹாஸபா நெட்’ இணையத்தளமானது தற்பொழுது உதயமாகி இயங்கிவருவதை தமிழ் பேசும் உலக முஸ்லிம்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இன்ஷா அல்லாஹ் விரைவில் எமது இணையத்தளமானது வானொலி சேவையாக வெளிவர இருப்பதையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். Web: www.muhasabanet.wordpress.com நன்றி. இவ்வண்ணம், நிருவாகக் குழு முஹாஷபா நெட்
-
ஒலிம்பிக் போட்டிக்கான பார்வையாளர் விசா விண்ணப்பம்
லண்டனில் இவ்வருட கோடைக்காலத்தில் (Summer) நடைபெற இருக்கும் ‘ஒலிம்பிக்’ விளையாட்டுப் போட்டிகளையும் ‘பராலிம்பிக்’ (Paralympic) போட்டிகளையும் கண்டு களிப்பதற்குச் செல்லவிருக்கும் ஒலிம்பிக் பார்வையாளர்களுக்கான ஐக்கய இராச்சியத்துக்கான விசா விண்ணப்பங்கள் இவ்வருட ஆரம்பம் முதல் உலகின் பல நாடுகளிலும் ஏற்கப்பட்டு வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 27ம் திகதியும் ‘ Paralympic’ என அழைக்கப்படும் வலது குறைந்தோருக்கான போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 29ம் திகதியும் லண்டனிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் நடைபெற உள்ளன.
-
ஈரான் மீதான போர் அமெரிக்காவின் அழிவு
‘ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டால் அது அமெரிக்காவுக்கான முடிவு காலம்’ என துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியான ‘நாமிக் கமால் செய்பக்’ அமெரிக்காவுக்கும் உலக செய்தி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் 1980 தொடக்கம் 1989 வரை ஈராக்குடனான போரில் அதிக அனுபவங்களைப் பெற்றிருப்பினும் தற்போதைய உலக பாதுகாப்பு சவால்களைத் தனித்து நின்று சந்திக்கக்கூடிய வளங்களையும் திடகாத்திரமான இஸ்லாமிய குடியரசையும் ஈரான் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில் ‘ஈரான் யுரேணிய உற்பத்தியை நிறுத்தாதவிடத்து அது ஒரு தாக்குதலாகவே மாறும்’…
-
இங்கிலாந்தில் புழக்கத்தில் வந்துள்ள கள்ள நோட்டுக்கள்
உலகில் பல நாடுகளிலும் கள்ள நோட்டுக்கள் அச்சிட்டு வெளியாகுவதும் பின்னர் அவை பிடிபடுவதும் ஒன்றும் புதிதான விடயமல்ல. இவ்வாறான கள்ள நோட்டுக்கள் தற்பொழுது இங்கிலாந்திலும் அதன் சூழவுள்ள பகுதிகளிலும் அதிகமாக புழக்கத்தில் வந்திருப்பதால் வங்கிகளும் வியாபார நிலையங்களும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக இங்கிலாந்து உள்ளுர் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. இவ்வாறு இந்நாட்டில் இத்தகைய கள்ள நோட்டுக்கள் வெளியாகுவது இது ஒன்றும் முதற்தடவையல்ல. இரண்டாயிரம் ஆண்டின் ஆரம்பக் காலப்பகுதியிலும் பின்னர் 2008-2009 காலப்பகுதியிலும் அதிகமான…
-
ஐந்து வருட தடையும் சிறையில் மலர்ந்த காதலும்
சர்வதேக கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஐந்து வருட தடை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரானா முகம்மட் ஆமிர் தனக்கு விதிக்கப்பட்டிருந்து 6 மாதகால சிறைத் தண்டனையை நிறைவேற்றி முடித்த பின்னர் நாடு திரும்பியிருக்கிறார். இந்நிலையில். இவரது இலஞ்ச ஊழல் உத்தியோகபூர்வமாக உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இவருக்கு ஏற்கனவே சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் விதித்திருந்த ஐந்து வருட சர்வதேச கிரிக்கட் தடையை தான் மீண்டும் மேன்முறையீடு செய்யப்போவதில்லை என சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்திற்கு உத்தியோக பூர்வமா…
-
இலங்கை அணியின் போராட்டமும் இன்றைய வெற்றியும்
இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டியதன் காரணமாக CB கிண்ணத்துக்கான மூன்று இறுதிப் போட்டிகளைக் கொண்ட இறுதி தொடரில் அவுஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது. முதலாவது இறுதிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
-
மண்ணறை வாழ்க்கை
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ : உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, “மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென” அவர்கள் கூறுகின்றார்கள். நாமோ, “மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது” என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில்…
-
நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய எங்கள் உயிரிலும் மேலான நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் உபதேசம் அவர்கள் எங்களுக்கு வாழ்ந்துகாட்டிய வழிமுறையின் சாராம்சத்தை எடுத்துக் காட்டுகின்றது. ஜித்தாவில் இருந்து வெளிவரும் ‘சுவனப்பாதை மாத இதழ்’ வருடா வருடம் உலகளாவிய ரீதியில் நடாத்தும் எழுத்துப் புரட்சிப் போட்டியில் ஆறுதல் பரிசை வென்ற இக்கட்டுரை காலத்தின் தேவை கருதி எமது வாசகர்களுக்காகப் பதிவேற்றப்படுகிறது. எம்பெருமானார்(ஸல்) அவர்களின் முதல் மற்றும் இறுதி ஹஜ்ஜின் போது அராபாத் மைதானத்தில் லட்சக்கணக்கான உத்தம ஸஹாபாக்கள்…
-
7ம், 9ம் நூற்றாண்டு அல்குர்ஆன் பிரதிகள்.
7ம் நூற்றாண்டு காலத்தின் குர்ஆன்: இஸ்லாமிய வரலாற்றின் மூன்றாவது ஹலீபாவான உதுமான் (றழி) அவர்களது காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதியின் தொகுப்பு இதுவாகும். அல்குர்ஆனின் 7வது அத்தியாயமான ‘அல் அஃராப்’ இன் 86, 87வது வசனங்கள் இவையாகும்.
-
மாணவர் களம்
‘மாணவர் களம் -மாணவர்களுக்கான தனிக் களம்’ தற்பொழுது வடிவமைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் மாணவர்களுக்கான தகவல் களஞ்சியங்களும் பொது அறிவுத் தகவல்கள் மற்றும் பொது அறிவு-தகவல்களுக்கான இணையத்தளங்களின் முகவரிகளும் அறிவகம் பக்கத்தில் பதியப்பட்டு வருகின்றன என்பதையும், விளையாட்டு சம்பந்தமான பொதுஅறிவுகள் மற்றும் தகவல்கள் விளையாட்டு பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். நன்றி. என்றும் அன்புடன், இயக்குநர்.
-
CB கிண்ணத்துக்கான இறுதிப்போட்டிகளில் அவுஸ்திரேலியாவுடன் விளையாடப்போகும் அணி எது?
எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை கிரிக்கட் அணிக்கும் அதன் இரசிகர்களுக்கும் இலங்கையின் வெற்றியே குறிக்கோள் என்ற வாசகத்தைத் தவிர வேறொன்றும் இருக்கமுடியாது! இந்தியாவா? இலங்கையா? எனும் நிகழ்தகவில் அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் CB (Commonwealth Bank) கிண்ண முக்கோணத் தொடரின் ஆரம்பச் சுற்றின் இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே 19 புள்ளிகளுடன் முன்னணியில் இருக்கும் அவுஸ்திரேலியாவுடன் 15 புள்ளிகளுடன் இருக்கும் இலங்கை அணி சவாலைச் சந்திக்கவிருக்கின்றது.