சர்வதேக கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஐந்து வருட தடை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரானா முகம்மட் ஆமிர் தனக்கு விதிக்கப்பட்டிருந்து 6 மாதகால சிறைத் தண்டனையை நிறைவேற்றி முடித்த பின்னர் நாடு திரும்பியிருக்கிறார்.
இந்நிலையில். இவரது இலஞ்ச ஊழல் உத்தியோகபூர்வமாக உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இவருக்கு ஏற்கனவே சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் விதித்திருந்த ஐந்து வருட சர்வதேச கிரிக்கட் தடையை தான் மீண்டும் மேன்முறையீடு செய்யப்போவதில்லை என சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்திற்கு உத்தியோக பூர்வமா இவர் அறிவித்ததைத் தொடர்ந்து. இத்தடையை தற்பொழுது ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.
இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தவிசாளர் ‘சகா அஷ்ரப்’ (Zaka Ashraf) கூறுகையில் ‘ஆமிருக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஐந்து வருடகால தடை முடிந்த பின்னர் அவரை மீண்டும் அணியில் சேர்ப்பது பற்றி ஒரு முறை ஆலோசிப்போம் எனவும் சிறந்த எதிர்காலம் கொண்ட ஆமிர் தனது எதிர்காலத்தையும் புகழையும் அவராகவே பாலாக்கிக் கொண்டதாகவும்’ வருத்தம் தெரிவித்திருந்தார். ஆமிருக்கான இத்தடையானது செப்டம்பர் மாதம் 2015ல் நிறைவடையும்.
இந்நிலையில் தான் சிறை வகித்த காலப்பகுதியில் இங்கிலாந்தில் தனக்கு வழக்கறிஞராக இருந்து பல வகையிலும் உதவிபுரிந்த ஸாஜிதா மலிக் எனும் பெண்ணுக்கும் ஆமிருக்கும் இடையில் சிறைக் காதல் வளர ஆரம்பித்திருந்தமை கவலையிலும் சந்தோசமான ஒரு நிகழ்வாக இருந்தது. தன்னை விட வயது கூடியவரான ஸாஜிதா மலிக் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து பிரித்தாணிய குடியுரிமை பெற்றவர். இருவரினரது காதலுக்கும் இரு வீட்டாரும் சம்மதிக்கவே ஆமிர் தனது வருங்கால மனைவியுடன் பாகிஸ்தான் சென்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இருந்தும், பாகிஸ்தான் திரும்பிய ஆமிர் பொதுவான தகவல் எதனையும் இது வரைக்கும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
![93ed1afccb4e7bbc9d6c61fe1a3506e1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/93ed1afccb4e7bbc9d6c61fe1a3506e11.jpg?w=300&h=171)
Leave a comment