இங்கிலாந்தில் புழக்கத்தில் வந்துள்ள கள்ள நோட்டுக்கள்

உலகில் பல நாடுகளிலும் கள்ள நோட்டுக்கள் அச்சிட்டு வெளியாகுவதும் பின்னர் அவை பிடிபடுவதும் ஒன்றும் புதிதான விடயமல்ல. இவ்வாறான கள்ள நோட்டுக்கள் தற்பொழுது இங்கிலாந்திலும் அதன் சூழவுள்ள பகுதிகளிலும் அதிகமாக புழக்கத்தில் வந்திருப்பதால் வங்கிகளும் வியாபார நிலையங்களும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக இங்கிலாந்து உள்ளுர் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. இவ்வாறு இந்நாட்டில் இத்தகைய கள்ள நோட்டுக்கள் வெளியாகுவது இது ஒன்றும் முதற்தடவையல்ல. இரண்டாயிரம் ஆண்டின் ஆரம்பக் காலப்பகுதியிலும் பின்னர் 2008-2009 காலப்பகுதியிலும் அதிகமான கள்ள நோட்டுக்கள் புழக்கதில் இருந்து வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் மீண்டும் இக்காலப் பகுதியில் இந்த கள்ள நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன.

வாடிக்கையாளர்களிடமிருந்து பண நோட்டுக்களைப் பெறும்போது  ‘Money Tester’ எனும் பேனாவை உபயோகித்து இத்தகைய கள்ள நோட்டுக்களை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். இவ்வாறான பேனாக்கள் ஏற்கனவே வங்கிகளிலும் பல வியாபார நிலையங்களிலும் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment