-
கடவுள் வரம் தந்தாலும் …பூசாரி விடுவதில்லையாம்…..
கடவுள் வரம் தந்தாலும் …பூசாரி விடுவதில்லையாம்….. என்ற நிலையிலேயே தற்போதைய தம்புள்ளை பள்ளிவாயல் பிரச்சினை சென்றுகொண்டிருக்கின்றது. அரசாங்கமும் அதில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களும் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமாவும் இப்பள்ளிவாயல் விடயமாக சுமூகமான தீர்வை மேற்கொள்வதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் தம்புள்ளை சம்பவத்திற்கு பிரதான காரணமாக இருந்த பிக்குகளில் ஒருவரான இனாமலுவே சமங்கள தேரர் ஓர் ஆங்கிலப் பத்திரிகைக்கு இலங்கை முஸ்லிம்களை எச்சரித்து பேட்டியளித்துள்ளார்.
-
இன்று திறக்கப்பட்ட 18 வளைவு (දහ අට වංගුව) வீதியின் ஓர் தோற்றம்
படம்: தமிழ்மிரர்
-
15,000 ஆசிரியர்களுக்கு இதுவரை பதவி உயர்வு இல்லை
ஆசிரியர்களின் பதவி உயர்வை அதிகாரிகள் தாமதித்து வருவதாக கல்வி தொழிலாளர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு மேலாகா ஆசிரியர்கள் பதவி உயர்த்தப்படவில்லை என அந்த சங்கத்தின் செயலாளர் வசந்த தர்மசிறி தெரிவித்துள்ளார்.
-
ஹக்கீமின் அனுசரணை முயற்சியும் சம்பந்தனின் ஐக்கிய இலங்கையும்
-தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் தலையங்கம் இலங்கை வந்திருந்த இந்திய பாராளுமன்றக் குழுவிற்குத் தலைமை தாங்கியிருந்த இந்திய எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வைப்பதற்கு ஏற்பாட்டாளராகச் செற்பட்டு உதவுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் நேரடியாகவே கேட்டிருந்தார்.
-
அ.இ. ஜம்இய்யத்துல் உலமா தலைமையில் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுகூடி தீர்மானம்
முஸ்லிம்கள் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு ஒருமித்து குரல் அகில இலங்கை ஜம்இய்ய துல் உலமா தலைமையின் கீழ் முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரே குரலில் இயங்குவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு ள்ளது. இது தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது.
-
அரசாங்க சலுகைகளை அனுபவிப்பு; நாட்டு தேசிய கொடி மட்டும் தீட்டா?
சம்பந்தன் MP ஏந்திய தேசியக் கொடிக்காக மன்னிப்பு கோரிய மாவை; தமிழருக்கென வேறு தேசியக் கொடியை TNA வைத்திருக்கிறதா என கேள்வி * இராஜதந்திர கடவுச் சீட்டில் உல்லாச பயணம் * அரசாங்க புலமைப் பரிசிலில் உறவினர்களுக்கு சலுகை * பாராளுமன்ற வரப்பிரசாதமாக வீடு, வாகனம் * உயிரை பாதுகாக்க இலங்கை அரசின் பொலிஸார் * வருடா வருடம் ஐம்பது இலட்சம் நிதி ஒதுக்கீடு புலிகள் கூட தேசியக் கொடியை புறக்கணிக்கவில்லை புத்திஜீவிகள் கண்டனம்
-
‘தஹ அட வங்குவ’ (දහ අට වංගුව) என அழைக்கப்படும் 18வது வளைவு இன்று திறக்கப்படுகிறது
-MJ ‘தஹ அட பங்குவ’ (දහ අට වංගුව) என அழைக்கப்படும் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட கண்டி – மஹியங்கனை 18வது வளைவு மக்கள் பாவனைக்காக இன்று (06-05-2012) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் திறந்து வைக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 41 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாதை 5000 மில்லியன் ரூபா செலவில் மூன்று ஆண்டுகளாக விரிவுபடுத்தப்பட்டு வந்து.
-
பொறியியலாளர் அப்துல் ரகுமான் விபத்தில் காயம்
காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கட்சியின் தலைவர் பொறியியலாளர் அப்துல் ரகுமான் எராவூரில் விபத்தில் காயம் அடைந்ததில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் பயணித்த வாகனம் கடை ஒன்றில் மோதியதால் இவ் விபத்து ஏற்ட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
மட்/விண்சண்ட் உ/த பாடசாலையின் பிரதி அதிபர் விபத்தில் பலி
மட்டக்களப்பு-மைலம்பாவெளியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மட். விண்சன்ட் பெண்கள் உ/த பாடசாலையின் பிரதி அதிபரான தங்கேஸ்வரி நாகரெட்னம் (55வயது) என்பவர் உயிரிழந்துள்ளடன் அவரது மகனான நரேந்திரகுமார் (22வயது) என்பவர் படுகாயமடைந்துள்ளார். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மகன் நித்திரை தூக்கத்தில் மின்சார தூணில் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
-
குழந்தைகள் பால் மாவுக்கு 8ம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலை
இறக்குமதி செய்யப்படும் சகல குழந்தைகள் பால் மாக்களுக்கும் கட்டுப்பாட்டு விலை முறையை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 8ம் திகதி முதல் இக்கட்டுப்பாட்டு விலை முறை அமுலுக்குவரும் என்று கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று தெரி வித்தார். இறக்குமதி செய்யப்படும் குழந்தைகள் பால் மாக்க ளின் விலைகள் சந்தையில் வெவ்வேறு விதமாகக் காண ப்படுகின்றன. இது மக்களுக்கு சுமையாகவும் விளங்கு கின்றது.
-
நாடெங்கும் பசும்பால் கொள்வனவுக்கு ஜனாதிபதி பணிப்பு
பாற்பண்ணையாளர்களை பாதுகாக்க விசேட திட்டம் முதலில் நுவரெலியா மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவச பால் உள்நாட்டு பால் பண்ணையாளர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து பசும்பாலையும் கொள்வனவு செய்து பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
-
காத்தான்குடி நகரசபையில் புதிய உறுப்பினர் பதவிப்பிரமாணம்
-Tamilmirror மட்டக்களப்பு, காத்தான்குடி நகரசபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபில் காத்தான்குடி நகரசபை உறுப்பினராக இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.