-
மக்களின் மின்சார சிக்கனம்: ரூ. 15,000 மில். இ.மி.ச. சேமிப்பு
* நுரைச்சோலை 24 மணி நேரமும் செயற்பாடு * 900 சீனர்கள், 600 இலங்கையர் பணியில் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி வருவதன் காரணமாக இந்த வருடத்தில் மின்சார சபைக்கு 15 ஆயிரம் மில் லியன் ரூபாவை சேமிக்க முடிந்த தாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார். நுரைச்சோலை அனல் மின் நிலையம் 24 மணி நேரமும் இயங்குவதாலே மின்வெட்டு அமுல்படுத்தாமல் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க முடி ந்ததாகவும் 8 வீத…
-
மீட்டெடுத்த நாட்டை பயங்கரவாதிகள் மீண்டும் பறித்தெடுக்க இடமளியேன்
இலண்டனில் ஜனாதிபதி தெரிவிப்பு குரூர பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட நாட்டை மீண்டும் எந்தச் சக்தியும் பிரித்தெடுத்துக் கொள்ளுவதற்கு இடமளிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் லண்டனில் தெரிவித்துள்ளார். எதிர்கால சந்ததியினருக்காக எந்த அர்ப்பணிப்பையும் செய்து இலங்கையை உலகில் சிறந்த நாடாகக் கட்டியெழுப்புவதற்கு நான் எதிர்பார்க்கின்றேன் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
-
சனல் 4 அதிகாரியும் அவரது மனைவியும் தடைப்பட்டியலில் உள்ளனர் – இலங்கை
-BBC பிரிட்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சியின் மூத்த அதிகாரி ஒருவரை அவர் இலங்கையை வந்தடைந்து ஓரிரண்டு நாட்களுக்குள் வெளியேற்றிவிட்டதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. அதேவேளை, அவரது மனைவியான இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண்ணும் நாட்டுக்குள் அனுமதிக்கப்படாமல் விமானநிலையத்தில் வைத்தே திருப்பியனுப்பப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர். சனல் 4 தொலைக்காட்சியில் பன்முக நிகழச்சிகளுக்கான பிரிவின் தலைமை அதிகாரியான ஸ்டுவர்ட் கொஸ்க்ரோவ் நாடு கடத்தப்பட்டுவிட்டதாக இலங்கை அரசின் அதிகாரபூர்வ இணையதளமொன்று கூறியிருந்தது.
-
வவுணதீவில் இளம் ஜோடியின் சடலங்கள் மீட்பு!
-MMS மட்டக்களப்பு, ஆயித்தியமலைக்கும் வவுணதீவுக்கும் இடைப்பட்ட பகுதியான முள்ளாமுனை காட்டுப்பகுதியில் இன்று காலை குறித்த இளம் சோடிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்று வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட திக்கோடையை சேர்ந்த அழகதுரை மேகலா (22வயது) எனவும் மற்றவர் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட களுதாவளை 38ஆம் கொலணியை சேர்ந்த அரசரெட்னம் இளங்கோ (34வயது) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-
பள்ளிகள் குறித்து தகவல் சேகரிக்கப்படவில்லை
முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தின் ஊடாக குற்ற விசாரணை திணைக்களத்தினர் முஸ்லிம் பள்ளிகள் குறித்து தகவல் சேகரித்து வருவதாகக் கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் எவரும் முஸ்லிம் பள்ளிகள் குறித்து தகவல் சேகரிக்கவில்லை என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
வீசா நடைமுறைகளை மீறிய 250 வெளிநாட்டவர் நாடுகடத்தல்
கடந்த ஐந்து மாதங்களில் நாட்டின் வீசா நடைமுறைகளை மீறிய 250 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 137 இந்தியர்களும், 38 பாகிஸ்தானியர்களும், 17 தாய் நாட்டவர்களும் இதில் அடங்குவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கண்காணிப் புப் பிரிவின் தலைவர் அமித்த பெரேரா தெரி வித்தார். உரிய காலம் கடந்த பின்னர் நாட்டில் தங்கி இருந்தோரும், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோருமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் ஆவர்.
-
மஹிந்த உரையாற்றவிருந்த கூட்டம் ரத்து
-BBC/Tamil பிரிட்டிஷ் மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில் இலங்கை ஜனாதிபதி பங்குபெறவிருந்த ஒரு அமர்வு ரத்தாகியுள்ளது. புதன்கிழமை(6.6.12) அன்று காலை காமன்வெல்த் பொருளாதார அமைப்பின் சார்பில், உலகம் வளமாக மற்றும் நிலைத்திருக்க கூடிய வகையில் முதலாளித்துவத்தை வடிவமைப்பது என்பது தொடர்பிலான ஒரு கருத்தரங்கு நடைபெறவிருந்தது.
-
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சான்றிதழ் வழங்கும் விழா முதற் தடவையாக செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. கடந்த காலங்களில் கொழும்பில் இடம்பெற்று வந்த சான்றிதழ் வழங்கும் வைபவம் முதற் தடவையாக இம்முறை மட்டக்களப்பி பிராந்திய கற்கைகள் நிலையத்தில் இடம்பெற்றுது.
-
கிறிஸ் கெய்ல் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கிறார்!
-MJ மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்கெய்ல் இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய கிரிக்கட் சபையினால் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றார். 32 வயதையுடைய கெய்ல் 1999ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். இறுதியாக 2011ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் (World Cup) விளையாடி இருந்தார். தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபைக்கும் கெய்லுக்கும் இடையே மனக்கசப்புக்கள் ஏற்பட்டு வந்திருக்கும் இந்நிலையில் கெயில் மீண்டும் விளையாட அழைக்கப்பட்டிருக்கின்றார்.…
-
தரம் குறைந்த மொன்டிசூரி பாலர் பாடசாலைகள் செயற்படுவதை அரசு தடைசெய்ய வேண்டும்
பாலர் பாடசாலைகளை நாம் பொதுவாக மொன்டிசூரி பாட சாலைகள் என்றே அழைக்கின்றோம். மரியா மொன்டிசூரி அம்மையார் பாலர்களின் மனோநிலையில் தாக்கத்தை ஏற் படுத்தாமல் அவர்களுக்கு பூரண சுதந்திரத்தையும் அவர்கள் விரும் பியவற்றை செய்வதற்கான அனுமதியை சில கட்டுப்பாடுகளுடன் கொடுக்கும் மொன்டிசூரி கல்வியை 1907 ஆம் ஆண்டில் ஆரம் பித்தார். இவர் பாலர்களையும் சுற்றாடலுடனான தனது அனுபவத்தை யும் மையமாக வைத்தே இந்த மொன்டிசூரி கல்விமுறையை நெறிப்படுத்தினார். 1911 ஆம் ஆண்டில் மொன்டிசூரி கல்விமுறை அமெரிக்காவில் பிரபல்யம் பெற்றிருந்தது.…