வீசா நடைமுறைகளை மீறிய 250 வெளிநாட்டவர் நாடுகடத்தல்

கடந்த ஐந்து மாதங்களில் நாட்டின் வீசா நடைமுறைகளை மீறிய 250 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

137 இந்தியர்களும், 38 பாகிஸ்தானியர்களும், 17 தாய் நாட்டவர்களும் இதில் அடங்குவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கண்காணிப் புப் பிரிவின் தலைவர் அமித்த பெரேரா தெரி வித்தார்.

உரிய காலம் கடந்த பின்னர் நாட்டில் தங்கி இருந்தோரும், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோருமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் ஆவர்.

நாட்டில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் வீசா காலம் முடிந்த பின்னரும் இலங்கையில் தங்கி இருக்கலாம் என குடிவரவு குடியகல்வு திணை க்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தெற்காசிய, கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களே வீசா விதிகளை மீறி நீண்ட நாட்கள் நாட்டில் தங்கி இருப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலும் இவர்களுள் சிலர் சம்பந்தப்பட்டவர்கள்.

உல்லாச பிரயாண வீசாவில் வந்த சிலர் தொழி ல்களிலும் வியாபார நடவடிக்கைகளிலும் ஈடு பட்டவர்கள். வெளிநாட்டவர்கள், ஹோட்டல்களிலும், ஆபரணக் கடைகளிலும், நிர்மாண வேலைத் தளங்களிலும், ஆலைகளிலும், வீதியோரக் கடைகளிலும் வேலை செய்தமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

2011 இல் 366 வெளிநாட்டவர்கள் வீசா நடைமுறைகளை மீறியதால் நாடு கடத்தப்பட்டனர்.

2009, 2010 ஆம் ஆண்டுகளில் 300 க்கும் மேற்பட்டோர் நாடுகடத்தப்பட்டனர்.

கூடுதலான நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த, சட்டவிரோதமாக வியாபாரம், தொழில்களைப் புரிந்த 400 வெளிநாட்டவர்கள் 2006 இல் கைதாகினர்.

2007, 2008 ஆம் ஆண்டுகளில் 400 பேர் கைதாகி நாடு கடத்தப்பட்டனர்.

வீசா காலாவதியான பின்னரும் கூடுதலாக நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருப்போரை அடையாளம் காண விரிவான தரவு முறையொன்றை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நடைமுறைப்படுத்தும்.

-Thinakaran

Published by

Leave a comment