-
பிரிட்டனின் தேர்தல் முடிவுகளின் எதிரொலி: பவுண்ட் வீழ்ச்சி
லண்டன்: பிரிட்டிஷ் நாணயமான பவுண்ட், பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகள் தொங்கு நாடாளுமன்றத்துக்கு வழிவகுத்த நிலையில், கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. நேற்றிரவே பவுண்டின் மதிப்பு விழுந்திருந்த்து; ஆனால் இன்று லண்டனில் வர்த்தகம் தொடங்கியதும், அதன் மதிப்பில் மேலும் 2 சதவீதம் விழுந்து, ஒரு பவுண்டுக்கு அமெரிக்க டொலர் 1.27 என்ற அளவில் வந்த்து. பிரிட்டனில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மையைப் பற்றி சந்தைகள் கவலை அடைவதை இது காட்டுகிறது.
-
பிரிட்டனில் `தொங்கு நாடாளுமன்றம்`
லண்டன்: பிரிட்டனில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு நாடாளுமன்றம் உருவாகியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது பற்றி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்தவிருக்கும் பிரெக்ஸிட் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக தனது பெரும்பான்மையை அதிகரித்துக்கொள்ள தேர்தலை முன்கூட்டியே நடத்த உத்தரவிட்ட , பிரதமர் தெரீசா மே அவர் முயற்சியில் தோல்வியடைந்தார்.
-
இலங்கை மட்டைவீச்சாளர்களின் அதிரடியில் வீழ்ந்தது இந்தியா
லண்டன்: சம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், வியாழக்கிழமையன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை இடையே நடந்த போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது. 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தனது துடுப்பாட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணி, முதல் விக்கெட்டை 5-ஆவது ஓவரில் பறிகொடுத்தாலும், மெண்டிஸ் மற்றும் குணதிலக ஆகிய இரு இலங்கை வீரர்களும் நன்கு அடித்து விளையாடினர்.
-
கத்தார் அதிக முதலீடு செய்துள்ள மாலைத்தீவு, தனது ராஜ்ய உறவைத் துண்டிக்கிறது
மாலைத்தீவு: மாலைத்தீவு கத்தாருடனான தனது ராஜீய உறவைத் துண்டிக்கும் ஏழாவது நாடாகியுள்ளது. கத்தார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி, ஏற்கனவே சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எகிப்து, லிபியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் கத்தாருடனான தங்கள் ராஜீய உறவை துண்டித்துக் கொள்வதாக அறிவித்தன. மாலைத்தீவு, கத்தாருக்கு எதிரான முடிவை எடுத்துள்ள போதும் அது கடினமானதாக இல்லாமல் சற்று தளர்வானதாகவே உள்ளது.
-
ஈரான் நாடாளுமன்றத்திலும், கொமைனி சமாதியிலும் துப்பாக்கிச் சூடு
டெஹ்ரான்: ஈரானின் நாடாளுமன்றம் மற்றும் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அயத்தொல்லா கொமெனி வழிபாட்டிடத்திலும் ஆயுதம் தரித்த நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத்திற்குள் குறைந்தது ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு பாதுகாவலர் காயமடைந்தார் என்று செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
-
“கட்டார் நெருக்கடியை ஏற்படுத்தியது நானே”- டொனால்ட் ட்ரம்ப்
நியுயோர்க்: மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு நானே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.தனது கோரிக்கைக்கு அமைய, கட்டாருடனான உறவினை கைவிடுவதற்கு மத்திய கிழக்கு நாடுகள் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
-
பாரிய ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய இளைஞன்
அனுராதபுரம்: கடந்த மூன்றாம் திகதி ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் ஒன்று, தனுஷ்க சேரம் என்ற இளைஞரால் தடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்திற்கு சுற்றுலா சென்ற குறித்த இளைஞர், ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தார். இதன்போது ரயில் வீதியின் தண்டவாளத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளமையை அவர் அவதானித்துள்ளார்.
-
ஞானசாரதேரர் விடயத்தில் முஸ்லிம்களை ஏமாற்றுவதனால் தனது புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் அரசாங்கம்
– முகம்மத் இக்பால், சாய்ந்தமருது பௌத்த தீவிரவாத இயக்கமான பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஜானசார தேரர் அவர்களை கைது செய்யும் பொருட்டு விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த இரண்டு வாரங்களாக செய்திகள் வெளிவருகின்றது.
-
அமெரிக்காவுக்கு விசுவாசமான வளைகுடா நாடுகளின் வரலாற்றுப்பிளவு: குற்றச்சாட்டுக்களும் மறுப்புக்களும்
டோஹா: தங்களுடைய பிராந்தியத்தை ஸ்திரமற்றதாக ஆக்குவதாக கத்தார் மீது குற்றஞ்சாட்டி, சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எமன் ஆகிய நாடுகளும் தங்களுடைய ராஜீய தொடர்புகளை துண்டித்துள்ளன. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு உள்பட தீவிரவாதக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக இந்த நாடுகள் கூறுகின்றன. ஆனால், கத்தார் இதனை மறுத்துள்ளது.
-
கட்டார் உடனான உறவுகள் துண்டிப்பு: கட்டார் அதிர்ச்சி
கட்டார் நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதுடன், எல்லைகளை மூடிவிடவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகள் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கட்டார் அரசு தனது அதிர்ச்சியையும், கவலையையும் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க வீசா விண்ணப்பதாரிகள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வெளிப்படுத்த வேண்டும்
நியுயோர்க்: அமெரிக்கா செல்வோர் விசா பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா விசாவை பெற்றுகு்கொள்ள எதிர்பார்த்திருக்கும் அவர்கள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வெளிப்படுத்த வேண்டும்.
-
நாட்டின் பல மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் 100 மில்லிமீற்றர் வரையிலான அடைமழை
கொழும்பு: நாட்டின் பல மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் 100 மில்லிமீற்றர் வரையிலான அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 24 மணித்தியாலம் தொடர்பில் திணைக்களத்தின் வானிலை நிபுணர் நதீகா ரணவீர கருத்து வெளியிட்டார்.