Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சர்வதேசமெங்கிலும் சனிக்கிழமை நோன்பு

    கொழும்பு: இலங்கையில் இன்று மாலை ரமழான் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் ரமழான் நோன்பு சனிக்கிழமையிலிருந்து ஆரம்பமாகிறது. தற்பொழுதிலிருந்தே தறாவீஹ் வணக்கங்களில் அதிகமானவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ள சென்றவன்னமிருக்கின்றனர். இதேவேளை சர்வசதேசமெங்கிலும் சனிக்கிழமை நோன்பு ஆரம்பமாகிறது.

  • நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை: ஒரே நாளில் 91 பேர் பலி! 110 பேர் மாயம்!!

    இரத்தினபுரி: நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை முதல் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி இவர்கள் பலியாகியுள்ளார்கள்.மேலும் குறித்த அனர்த்தத்தில் 5 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • அந்த இருட்டான நேரத்தில் ஒசாமாவுக்கு நடந்தது என்ன? மனம் திறக்கிறார் நானகாவது மனைவி அமால்

    லண்டன்: அல்-கய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால்.

  • அவுஸ்திரேலியா, பபுவா நியுகினி மக்கள் சனிக்கிழமை நோன்பு நோற்கின்றனர்

    சிட்னி: அவுஸ்திரேலியா மற்றும் பபுவா நியுகினி நாட்டிலுள்ள முஸ்லிம்கள் சனிக்கிழமை (27) ரமழான் நோன்பு நோற்கின்றனர். தற்பொழுது அங்கு தறாவீஹ் தொழுகை நிறைவடைந்து, மக்கள் சஹரை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • இராணுவ வீராங்கனையாகிய விடுதலைப் புலிகளின் மகளிர் அணி போராளியின் பேட்டி

    கிளிநொச்சி: விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 13 வயதில் இணைந்து இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் பெண் போராளி ஒருவர் பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன. முன்னாள் பெண் போராளியும் தற்போது இலங்கை இராணுவத்தில் கடமையாற்றும் அண்டர்சன் பிரதா (Anderson Pradha) என்பவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

  • ஞானசாரவை கைது செய்ய பொலீஸ் குழுக்கள் அமைப்பு

    கொழும்பு: கடும் போக்கு பௌத்த அமைப்பா பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரோவை கைது செய்வதற்கு பல பொலீஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலீஸ் தலைமையக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொலீஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, இனங்களுக்கிடையில் அமைதியை சீர் குலைக்கும் வகையில் உரையாற்றியமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் பேரில் இவரை கைது செய்வதற்கு சிறப்பு பொலீஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  • ரமழான் தலைப்பிறை எதிர்பார்க்கப்படுகிறது

    டோஹா: புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்று மாலை எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் தற்பொழுது வெப்பமான காலநிலை தொடர்வதால் பிறை பார்ப்பதற்கான சிக்கல்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள லண்டன் நகர் பாதுகாப்பு

    லண்டன்: மன்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து, லண்டன் மாநகரின் வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு அதியுயர் உஷார் நிலைக்கு உயர்த்தப்படுவதாக பிரதமர் அறிவித்ததை அடுத்து, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

  • கட்டுநாயக்கா விமானநிலைய புதிய பாதுகாப்பு நடைமுறைகள்: பயணிகள் அவதானம்!

    கொழும்பு: கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு சட்டத்தை செயற்படுத்தவுள்ளதாக விமான நிலைய, விமானசேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜுன் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

  • ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

    சகோதரர் அமானி (நளீமி) அவர்களின் ஜனாஸாத் தொழுகை இன்று 24-05-2017 காலை 8 மணிக்கு காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு, அதே மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

  • அமானி நளீமி காலமானார்

    காத்தான்குடி 3, கடற்கரை வீதியைச் சேர்ந்த  சி.எம்.எம். அமானி (38)-(நளீமி), இன்று இரவு (23-05-2017) காலமானார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”. அன்னார், காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா அலுவலக செயலாளரும், காத்தான்குடி ஜம்மிய்யாவின் உறுப்பினரும், இர்பான் நளீமியின் சகோதரரும், அப்துர் ராஸிக் நளீமியின் மைத்துனருமாவார்.

  • அனைத்துப் பாடசாலைகளிலும் ஜனாதிபதி மைத்திரியின் புகைப்படத்தைக் காட்சிப்படுத்த உத்தரவு

    கொழும்பு: நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படங்களை காட்சிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் எம்.எல்.கம்மன்பில கடிதம் மூலம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

←Previous Page
1 … 124 125 126 127 128 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar