அமெரிக்க வீசா விண்ணப்பதாரிகள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வெளிப்படுத்த வேண்டும்

america usaநியுயோர்க்: அமெரிக்கா செல்வோர் விசா பெற்றுக்கொள்வதில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா விசாவை பெற்றுகு்கொள்ள எதிர்பார்த்திருக்கும் அவர்கள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த புதிய நடைமுறை அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், இது கட்டாயமாக்கப்படும். இதற்கான அனுமதியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளது.

புதிய நடைமுறைக்கு அமைய விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர், கடந்த 5 வருட காலத்தில் பயன்படுத்திய சமூக ஊடகங்கள் தொடர்பான தகவல், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி இலக்கங்கள் தொடர்பில் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், கடந்த 15 வருடங்களாக அவர் வசித்த முகவரி, தொழில், பயண விவரங்கள் உள்ளிட்டவற்றையும் தெரிவிக்க வேண்டும். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவ்வாறான சட்டம் நடைமுறைக்கு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s