-
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் 24மணிநேர இணைய வானொலி இன்று ஆரம்பம் (எமக்குத் தெரியவேன்டிய தெரியாத விடயங்கள்)
125 வருட வானொலி வரலாற்றில் ஒரு மைல்கல். முன்னாள் முஸ்லிம் சேவையின் பணிப்பாளர்களது இருவட்டு வெளியீடு. சிங்கள சேவையில் முஸ்லிம் நிகழ்ச்சி வழங்கிய நால்வர்க்குப் பாராட்டு. முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்ஸன் சமரசிங்கவின் ஆதரவுடன் இணைய வானொலி முஸ்லிம் சேவை ஆரம்பமாவது பெரும் நம்பிக்கையளிக்கிறது. காரணம் ஜனாதிபதியின் பூரண ஆதரவும், ஆலோசனையும் தலைவர் ஹட்ஸன் சமரசிங்ஹவுக்கு உண்டு என்பதனால்.
-
தேர்தல் வெற்றியுடன் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணையும் – கெஹலிய
-Adaderana எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல் வெற்றியின் பின் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணக்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
-
மட்டக்களப்பில் வேட்புமனு தாக்கல் (படங்கள்)
-MMS மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.தங்கேஸ்வரியின் சுயேட்சைக்குழு உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்தனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி சுயேட்சைக்குழுவிலும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அதன் தலைமை வேட்பாளர் எம்.எம்அப்துர் றஹ்மான் ஆகியோர் சுயேட்சைக்குழுவிலும் தமது வேட்பு மனுக்களை மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கையளித்தனர்.
-
கலைக்கப்பட்ட 3 மாகாணசபைகளுக்குமான தேர்தல் செப்டம்பர் 8ல்!
கடந்த மாதம் கலைக்கப்பட்டு தேர்தல் எப்போது என எதிர்பார்த்திருந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 8ம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் கலைக்கப்பட்டு அவற்றுக்கான வேட்பு மனுக்கல் இன்று நண்பகலுடன் நிறைவுற்றன. அதன் பின்னரே தேர்தல்கள் ஆணையாளர் இவ் அறிவிப்பை விடுத்துள்ளார்.
-
அ. இ. மு. காங்கிரஸ், தே. காங்கிரஸ் ஐ.ம.சு.முவுடன் இணைந்து போட்டி (வேட்பாளர்கள் விபரம் உள்ளடக்கம்)
அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பட்டியலில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டி யிடுகின்றன. கிழக்கு மாகாண சபையில் மேற்படி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருமாறு; முன்னர் தேசிய காங்கிரஸ்- அம்பாறை மாவட்டத்தில் 3 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வேட்பாளர் மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் ஒதுக்கீடு…
-
வேட்பு மனுக்கள் ஏற்பு இன்றுடன் நிறைவு: கட்சிகள் இறுதிநேரப் பரபரப்பு * வேட்பாளர் பட்டியல் நிரப்புவதில் முழு மூச்சு
கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் ஏற்பு இன்று நண்பகலுடன் நிறைவு பெறுகிறது. கட்டுப்பணம் செலுத்துவது நேற்று நண்பகலுடன் நிறைவு பெற்றது. பிரதான கட்சிகளான ஐ. ம. சு.மு, ஐ. தே. க, ஜே. வி. பி ஆகியன நேற்று நான்கு மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன. சப்ரகமுவ மாகாண சபைக்கான தேர்தலில் ஐ.ம.சு. மு. நேற்று கேகாலை மாவட்டத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. அதேநேரம், பொலநறுவை மாவட்டத்தில் ஜே.வி.பியும்…
-
சிரியா: அதிபரின் மைத்துனர், பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டனர்
சிரியாவின் அதிபர் அஸ்ஸதின் மைத்துனரான அஸ்ஸிஃப் ஷெளக்கத் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் அறிவித்துள்ளது. அஸ்ஸிஃப் ஷெளக்கத் அந்நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிகவும் செல்வாக்குமிக்க நபராக இருந்துவந்தவர். தலைநகர் டமஸ்கஸ்ஸிலுள்ள தேசியப் பாதுகாப்பு பணியக தலைமைக் கட்டடத்தின்மீது நடத்தப்பட்டுள்ள தற்கொலைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அஸாட் சாலிக்கு காத்தான்குடியில் ‘புகழிடம்’?
-SHM ஓர் போராட்டம் போல் இடம்பெற இருக்கும் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள முடிவை பிரஜைகள் முன்னணி வரவேற்றுள்ளதுடன் அசாத் சாலி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் பிரஜைகள் முன்னணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமிற்கு நேரடியாகச் சென்று தமது வரவேற்பை தெரிவித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் முன்னிலையில் அசாத் சாலி வேட்பு மனுவில் கையொப்பம் இட்டுள்ளார்.
-
புனித றமழான் மாத தலைப்பிறை பார்ப்பது தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்.
– CMM. அமானி 18.07.2012 அன்புப் பொது மக்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ ஷஃபான் மாத்தின் 29ம் நாளான 20.07.2012ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சூரியன் அஸ்தமித்ததும் றமழான் மாத தலைப்பிறை பார்க்கின்ற சந்தேகத்துக்குரிய நாளாக இருப்பதால் அன்றைய தினம் தலைப்பிறை பார்க்கின்ற பொறுப்பு நமக்கு உள்ளது.
-
‘ஒலிம்பிக் லேன்’: லண்டனில் புதிய போக்குவரத்து ஒழுங்கு
-MJ லண்டனில் அடுத்தவாரம் இறுதியில் இடம்பெற இருக்கும் உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பாரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்தவகையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்கான விசேட போக்குவரத்து ஒழுங்குகளை இலண்டன் ஒலிம்பிக் சபை மேற்கொன்டு வருகின்றது. வீரர்களையும் அதிகாரிகளையும் குறித்த நேரத்துக்குள் விரைவாக அழைத்துச் செல்வதற்காக முக்கிய வீதிகளில் ‘ஒலிம்பிக் லேன்’ (OLYMPIC LANE) அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.
-
கிழக்குத் தேர்தலில் தனித்து போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது. ஆசன ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காமையை அடுத்து ஜனாதிபதியின் இணக்கத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்குத் தேர்தலில் தனியாக களமிறங்கத் தீர்மானித்துள்ளது.
-
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய புதிய கட்டிடத் திறப்புவிழாவுக்கான அழைப்பிதழ்
-இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்