Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அருள்மழை பொழியும் ரமழானே! (ரமழான் வாசகர் ஆக்கம்)

    – ஷிபா   மாதங்களின் மகுடமாய் மானிடர்களின் பாவங்களை சுட்டெரிக்க வந்திடும் ரமழானே! நீ வசந்தமாய் வந்திடு!

  • முரண்பாட்டுடனன்றி இணக்கப்பாட்டுடன் தனித்துப் போட்டி

    தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட இணக்கம் காணப்பட்டுள்ளது கடைசி நிமிடம் வரை அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கே முஸ்லிம் காங்கிரஸ் முன்னுரிமை வழங்கியது. வேட்புமனுத் தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைய 24 மணி நேரம் இருக்கும் நிலையிலே தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

  • கானல் நீராய்ப்போன விளையாட்டு மைதானக் கனவு!

    -MMS காத்தான்குடி மத்தியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் தேசிய உதைப்பந்தாட்டப் போட்டிகளுக்காக துரிதமாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கு அரசாங்கம் பல கோடி ரூபாய்களை வழங்கியிருந்தது. இதற்கிணங்க, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் நேரடி பார்வையின் மூலம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இம்மைதானம் மீள் நிர்மானம் செய்யப்பட்டு, அபிவிருத்தியும் செய்யப்பட்டு வந்தது. எமது இணையத்தளத்தில் மேற்படி அபிவிருத்தி பற்றிய ஓர் திட்டமான ஆக்கத்தினை வெளியிட்டிருந்தோம்.

  • இலங்கை, இந்திய சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்: ஓர் பார்வை

    -MJ இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகை தந்துள்ள இந்தியாயை எதிர்த்து, சொந்த மண்ணில் மற்றுமொரு சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரை இலங்கை விளையாட இருக்கின்றது. கடந்த மாதம் பாகிஸ்தானுடன் விளையாடப்பட்ட ஒருநாள் தொடரை இலங்கை வெற்றி பெற்றிருந்தது யாவரும் அறிந்த விடயம்.

  • முதன் முறையாக ஜாமியுழ்ழாபிரீனில் பெண்களுக்கான தறாவீஹ் தொழுகை!

    -MJ இன்று மாலை நாட்டின் பல பாகங்களிலும் ரமழான் மாத பிறை தென்பட்டதால், கொழும்பு பெரிய பள்ளிவாயலின் அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை முஸ்லீம்கள் நாளை சனிக்கிழமை புனித ரமழான் நோன்பை நோற்கின்றனர். காத்தான்குடியில் கூடுதலாக சிறுவர் குர்ஆன் மத்ரஸாக்களிலும், சில பள்ளிவாயல்களிலும் மற்றும் குறிப்பிட்ட இல்லங்களிலும் பெண்களுக்கான தறாவீஹ் தொழுகைகள் நடைபெற்று வருவது வழக்கம். கடந்த ஒரு சில ரமழானில் முகைதீன் மெத்தைப் பள்ளிவாயலிலும் பெண்களுக்கான தொழுகைகள் இடம்பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

  • “மன்னார் முஸ்லிம்களின் உரிமைக்காக இலங்கை முஸ்லிம்களும் உலக முஸ்லிம்களும் இணைந்து செயற்பட வேண்டும்” -அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி

    கொழும்பிலும் ஏறாவூரிலும் ஆர்ப்பாட்டம் -MMS கடந்த சில மாதங்களாக மன்னார் முஸ்லீம்களை தமது சொந்த நிலங்களுக்கு அவர்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளில் மன்னார் ஆயரும் மற்றும் சில தமிழ் அரசியல்வாதிகளும் தடையாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. மன்னார் முஸ்லீம்கள் விடயமாக பாராளுமன்றத்தில் பிரதியமைச்சர்  ரிசாட் பதியுத்தீன் பகிரங்கமாக மன்னார் ஆயரதும் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களது விடயங்களையும் கண்டித்திருந்தார். இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் முன்வர வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர்…

  • எமது அன்பு நெஞ்சங்களுக்கு புனித ரமழான் வாழ்த்துக்கள்! ‘ரமழான் கரீம்’

  • விஞ்ஞானம்,கலை போன்ற துறைகளில் திறமையுள்ள இலங்கையருக்கு பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு

    விஞ்ஞானம், பொறியியல் மற்றும் கலைத்துறையில் அதிவிசேட திறமைகொண்ட இலங்கையர்களை தமது நாட்டிற்கு வேலைசெய்ய அழைப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையிலும் மாலைதீவிலும், விஞ்ஞானம், மானுடவியல், பொறியியல் மற்றும் கலைத்துறைகளில் திறமையான சில மேதாவிகள் உள்ளனர். இவர்கள் ‘மேதாவி திறமையாளர் குடிவரவு பாதை’ என்னும் விசேட ஏற்பாடு வழியாக பிரித்தானியாவில் வேலை செய்யும் சாத்தியத்தை ஆராய்ந்து பார்க்கும்படி நான் விதந்துரைக்கின்றேன் என இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர் கூறியதாக கொழும்பிலுள்ள பிரத்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

  • ரமழானில் முஸ்லிம்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்குமாறு அரசு கோரிக்கை

    புனித ரமழான் காலத்தில் முஸ்லிம்களுக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு அரசாங்கம் சகல அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய புனித ரமழான் மாத காலத்தில் முஸ்லிம்களுக்கு தடையின்றி தேவையான மின்சாரம், நீர் விநியோகம் உட்பட சகல விதமான அத்தியாவசிய வசதிகளை வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

  • மூன்று மாகாண சபைகளுக்கும் செப். 8 இல் தேர்தல்: 114 உறுப்பினர்களை தெரிவு செய்ய 3073 பேர் போட்டி(விரிவான தகவல்கள்)

    2 கட்சிகள், 2 சுயேச்சைகளின் மனுக்கள் நிராகரிப்பு கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

  • அமெரிக்கா, ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கின்றனர்.

    -MJ இலங்கையிலும் சிலர் நோன்பு நேற்று வியாழக்கிழமை (19-07-2012) கிழக்காசிய நாடுகளில் பிறை தென்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் அநேகமான நாடுகளில் உள்ள முஸ்லீம்கள் இன்று வெள்ளிக்கிழமையிலிருந்து ரழழான் நோன்பை பிடித்து வருகின்றனர்.

  • மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 கட்சிகளுடன் 21 சுயேட்சைக் குழுக்களும் போட்டி!

    -MMS எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள கலைக்கப்பட்ட 3 மாகாணசபைகளுக்குமிடையிலான தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. இன்று நண்பகலுடன் தாக்கல் செய்யப்பட்டு நிறைவடைந்துள்ள மனுக்களின்படி,  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உட்பட 13 அரசியல் கட்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதுடன 21 சயேட்சை குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றன…

←Previous Page
1 … 1,235 1,236 1,237 1,238 1,239 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar