Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வேட்புமனு ஏற்பு நாளை நிறைவு: கட்டுப்பணம் செலுத்தல் இன்று பூர்த்தி: மூன்று மாகாண சபைகளுக்கும் 14 மனுக்கள் நேற்று தாக்கல்

    தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளுக்கும் நேற்று 14 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 27 பேர் கட்டுப்பணம் செலுத் தியுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ஒன்பது சுயேச்சைக் குழுக்களும் 05 கட்சிகளும் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

  • உடன்படிக்கையில் கைச்சாத்திட ஹசன் அலி தொடர்ந்தும் மறுப்பு! ரவூப் ஹக்கீம் தடுமாற்றம்!!

    அம்பாறையில் முஸ்லிம்களுக்கான கரையோர மாவட்டம் மற்றும் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்குத் தமிழ் பேசும் அரச அதிபர்கள் நியமனம் ஆகிய இரண்டு கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்றுக் காலை கூடியபோது தனது இந்த நிலைப்பாட்டைக் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்தியுள்ள ஹசன் அலி, மேற்படி இரு விடயங்களையும் அரசு ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை…

  • கிழக்கில் முஸ்லிம் தலைமைகள் கூட்டமைப்புடன் இணையாதது ஏற்க முடியாது! அஸாத் சாலி

    மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் முஸ்லிம் முதலமைச்சர் பதவியை இலகுவாக கைப்பற்றியிருக்கு முடியும். அவ்வாறில்லாவிடினும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருக்கலாம். அதனால் தான் சுயேட்சை குழுவாக போட்டியிட உள்ளதாக அஸாத் சாலி அறிவித்துள்ளார். கடந்த கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அஸாத் சாலி, இன்று தனது இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

  • கிழக்கு மீனவர்கள் வாழ்வில் புத்தொளி!

    கிழக்கில் புலிகள் தோற்கடிக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்ட சமாதானத்தின் பிரதிபலன்கனை கிழக்கு மாகாண மீனவர்கள் இன்று முழுமையாக அனுபவிக்கின்றனர்.

  • அசாட் சாலி கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் குதிக்கும் செய்தியில் மாற்றம்.

    -MMS பலத்த எதிர்பாரப்புகளுக்கு மத்தியில் இடம்பெற இருக்கும் கிழக்குமாகாணசபைத் தேர்தலுக்கு பலத்த போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வகையில் வட-கிழக்குக்கு வெளியில் இருக்கும் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் அசாத் சாலி தனது பதவியை இராஜினாமா செய்து, கிழக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் தனது இப்பதவியை தான் இராஜினாமாச் செய்யப்போவதில்லை என தற்பொழுது அறிவித்திருக்கின்றார்.

  • மட்டு. மாவட்டத்தில் வரலாறு காணாத முன்னேற்றம்! பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பெருமிதம்

    மட்டக்களப்பு மாவட்டம் கடந்த ஐந்து வருட காலத்தில் வரலாறு காணாத வகையில் அபிவிருத்தியடைந்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மாவட் டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டும் கருத்தரங்கில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரதியமைச்சர் மேலும் கூறியதாவது:

  • அரச உடைமைகளை பாவிக்கத் தடை!

    எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரச உடைமைகளை பாவிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இது தொடர்பான சுற்றறிக்கையை உள்ளுராட்சி மன்ற தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

  • நிருவாகச் சேவையின் போட்டிப் பரீட்சை

    இலங்கை நிருவாகச் சேவையில் 111ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை -2010 (2012) மற்றும் இலங்கை நிருவாகச் சேவையில் 111ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை -2011 (2012) ஆகிய இரு சாராருக்கான பரீட்சைகளும் ஜுலை 21ஆம் 22ஆம் திகதிகளில் நடைபெறும் . கொழும்பில் மட்டுமே நடைபெறவிருக்கும் இப்பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களும் நேர அட்டவணைகளும் உரிய விண்ணப்பதாரிகளுக்கு அவர்களது முகவரிகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்.எம்.என்.புஸ்பகுமார தெரிவித்தார்.

  • கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸுக்கு இரவோடு இரவாக ஆசனம் குறைப்பு

    எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்படுவதாக கூறப்பட்ட 12 ஆசனங்க்களில் ஒன்று இரவோடு இரவாக குறைக்கப்பட்டிருக்கிறது. நேற்று திங்கட்கிழமை இரவு அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற முஸ்லிம் கட்சிகளுடனான சந்திப்பின் போதே நீண்ட இழுபறிக்குப் பின்னர் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • மட்டக்களப்பு மாவட்டத்தில் 2013 இற்குப் பின்னர் மின்சாரமற்ற கிராமமே இருக்கப் போவதில்லை

    மட்டக்களப்பு மாவட்டம் கடந்த ஐந்து வருட காலத்தில் வரலாறு காணாத வகையில் அபிவிருத்தியடைந்துள்ளது. இக்காலத் துள் 5400 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி வேலைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் 951 கோடி 60 இலட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மேலதிகமாக அடுத்த வருடத்துக்கான தேசத்துக்கு மகுடம் கண்காட்சி திட்டத்தின் கீழ் 300 கோடி ரூபாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அபிவிருத்தி வேலைகளுக்காக வழங்கியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் அவர் என்னையும்…

  • புனித றமழான் மாதத்தில் சவூதி அரேபியாவுக்கு சேவைகளை அதிகரித்துள்ள எமிரேட்ஸ்

    77 மேலதிக விமானங்கள் இணைப்பு புனித றமழான் மாத காலத்தில் எமிரேட்ஸ் சவூதி அரேபியாவுக்கான அதன் விரிவான விமான சேவைகளுடன் மேலதிகமாக 77 விமானங்களை இணைத்துள்ளது. இந்த மேலதிக சேவைகள் மூலம் ஜெத்தா மற்றும் மதீனா அல் முனவ்வரா நகரங்களே கூடுதல் நன்மை அடையவுள்ளன. சமய அடிப்படையிலான பிரயாணங்களை இந்தக் கால கட்டத்தில் மேற்கொள்ளும் பெருந்திரளான பக்தர்களின் நன்மை கருதியே இந்த சேவை இடம்பெறவுள்ளது. 2012 ஜுலை 20 முதல் செப்டம்பர் 01 வரை இந்த மேலதிக…

  • கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சரும் நானே!

    – சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஊடகங்களுக்கு பேட்டி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும். நாம் தேர்தலில் அமோக வெற்றிபெறும் என்பதும் கிழக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் நான்தான் என்பதும் நூற்றுக்கு நூறு வீதம் உறுதியானது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

←Previous Page
1 … 1,237 1,238 1,239 1,240 1,241 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar