Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலங்கையில் கொரெக்ஸ் டி மருந்துக்கு தடை

    இருமலுக்காகப் பயன்படுத்தும் Corex D சிரப்ஸை விநியோகித்தல் மற்றும் பாவனை செய்தலை சுகாதார அமைச்சு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்துள்ளது. Corex D சிரப்ஸை அதிகம் அருந்திய 06 நபர்கள் நேற்று வரையில் மரணித்துள்ளமையே இதற்கான காரணம். பெரும்பாலும் இம்மருந்தை மருத்துவ ஆலோசனையின்றி பெரும்பாலான மருந்தகங்கள் விநியோகிப்பதுடன் போதைக்காக அதிகம் உட்கொண்டமையால் மேற்படி மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

  • ஆட்ட நிர்ணய சதிகளில் ஈடுபட நடுவர்கள் முயற்சி இந்திய தொலைக்காட்சி அம்பலம்: ஐ.சி.சி. விசாரணை

    கிரிக்கெட் வீரர்கள் ஸ்பொட் பிக்சிங்களிலும் போட்டி நிர்ணயங்களிலும், தகவல்களை சூதாட்டக் காரர்களிடம் வழங்குவதிலிருந்து மாறுபட்டு 6 கிரிக்கெட் நடுவர்கள் போட்டிகளில் தவறான தீர்ப்புக்களையோ அல்லது போட்டி பற்றிய தகவல்களையோ வழங்க ஒப்புக் கொண்ட விடயமொன்று அம்பலத்திற்கு வந்துள்ளது.

  • ரியுசன் வகுப்புக்குச் சென்றதே இல்லை! எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வரவே விரும்புகின்றேன்! தேசிய ரீதியில் 2ம் இடம்பெற்ற மட்டு. மாணவன் துவாரகேஸ்

    அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி தமிழ்மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியாக இரண்டாமிடம் பெற்றவர் செல்வன் தமிழ்வண்ணன் துவாரகேஸ். அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 192 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மட்டு.புனித மிக்கேல் மாணவனான இவர் காரைதீவைச் சேர்ந்தவராவார்.

  • தம்புள்ள ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பில் ஆராய அனைவருக்கும் பௌசி அழைப்பு

    பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை தம்புள்ள ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கு அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கலந்துரையாடலுக்கு தான் அழைப்பு விடுத்துள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார். இன்று பிற்பகல் 2:30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அந்த சந்திப்பு இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  • தாலிக்கொடி திருடனை பிடிக்க உதவிய ‘Power Windows’

    கொழும்பில் வாகன நெரிசல்கள் இருந்தாலும் மின்விளக்கு சமிக்ஞைகள் இயங்கும் சந்திகளில் வாகனங்கள் நிறுத் தப்படும் போது அவற்றை நெருங்கி பிச்சை கேட்போரின் தொல்லை நாளாந்தம் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. கைக்குழந்தைகளுடன் பெண்கள் நிறுத்தப் பட்டிருக்கும் வாகனங் களின் ஜன்னலைத் தட்டி பிச்சை கேட்பார்கள். வாகன ஓட்டிகள் அவர்களின் கையில் உள்ள பச் சிளம் பாலகர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு பணம் கொடுப்பார்கள். இந்தப் பால கர்கள் இப்பெண்களின் பிள்ளைகளா? அல்லது வாடகைக்கு எடுக்கப்பட்ட பிள்ளைகளா என்ற சந்தேகம் இப்போது பொலிஸார்…

  • “பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்”: எரிக் சோல்ஹெய்ம்

    – BBC/Tamil இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன. அந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹேய்ம், அந்த திட்டம் குறித்து…

  • இலங்கையின் தோல்வி! பட்டாசு ஒலிகளால் மீண்டும் அதிர்ந்த காத்தான்குடி: ஓர் பல்சுவை ஆக்கம்.

    -Special Report நேற்றிரவு முடிவடைந்த நான்காவது உலக இருபது 20 கிண்ண இறுதிப்போட்டியில் உலக இரசிகர்களால் எதிர்வுகூறப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி 36 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று முதன் முறையாக இருபது20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிக்கொண்டது. இலங்கை 18.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  • பெண்கள் மீதான துஷ்பிரயோகம்: வேறொன்றுமில்லை, இதுதான் காரணம்

    நாட்டில் தற்போது அதிகரித்துள்ள பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களுக்கான பிரதான காரணிகளாக கையடக்கத்தொலைபேசி பாவனை மற்றும் இணையம் ஆகியன உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதர அமைச்சு, குடும்ப சுகாதார பணியகம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியம் ஆகியன இணைந்து மேற்கொண்ட ஆய்விலிருந்தே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • அபு ஹம்ஸா அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

    கடும்போக்கு முஸ்லிம் மதபோதகரான அபு ஹம்ஸா நியூயோர்க்கிலுள்ள நீதிமன்றமொன்றில் பயங்கரவாத குற்ற விசாரணைகளுக்காக ஆஜர்படுத்தப்படவுள்ளார். அபு ஹம்ஸா மற்றும் ஏனைய 4 பேரின் இறுதிநேர மேன்முறையீடுகளை லண்டன் மேல்நீதிமன்றம் ஏற்க மறுத்து சில மணிநேரத்தில் இரண்டு விமானங்களில் அவர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

  • முஸ்லிம் மக்களின் பிரதிநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பா?

    தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பை முஸ்லிம் மக்கள் தங்களது பிரதிநிதிகளாக ஒருபோதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நீதி அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ஆம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என் பதே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • ஆசிரியர்கள் உரிய பாடசாலைக்கு செல்ல மறுத்தால் நியமனம் ரத்து: ஜனாதிபதி

    பாடசாலைகளின் பெயர் குறித்து நியமனம் வழங்கப்படும் ஆசிரியர்கள் உரிய பாடசாலைகளுக்குச் செல்ல மறுத்தால் அவர்களின் நியமனங்கள் ரத்துச்செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வலியுறுத்தினார். ஏற்கனவே பலமுறை இது குறித்துத் தாம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய் வதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆசிரியர் நியமனத்தின்போது தற்போது பெயர்குறிப்பிட்டே நியமனங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், பல வழிகளில் செல்வாக்குகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் தமது பாடசாலைகளைத் தமக்கு வசதியாக ஏற்படுத்திக்…

  • T20 உலகக் கிண்ணம்: இறுதிப்போட்டியில் இலங்கை-மேற்கிந்தியத்தீவுகள்

    -MJ இலங்கையில் மிக அபாரமாக இடம்பெற்று வந்த உலக இருபது 20 கிண்ணத்திற்கான போட்டிகள் இறுதிச் சுற்றை அடைந்திருக்கின்றன. இவ் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இம்முறைக்கான உலகக் கிண்ணத்தை மேற்கிந்தியத்தீவுகள் வெற்றிபெறும் என உலக விளையாட்டு வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். எனினும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இத்தொடரில் பல தோல்விகளைப் பெற்றிருந்ததால் இக்கருத்துக்கணிப்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டு, ‘இல்லை’ என்று வாக்களிக்கும் அளவுக்கு இவ் அணியின் நிலைமை இருந்தது.

←Previous Page
1 … 1,205 1,206 1,207 1,208 1,209 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar