-
பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகளின் சமூக அக்கறை என்ன?
BBC/Tamil இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட திவிநெகும சட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்முறை திருத்தச் சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களும் சிறுபான்மை மக்களின் நலன்களை கடுமையாகப் பாதிக்கும் என்ற போதிலும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் அதற்கு ஆதரவாக வாக்களித்தமை அந்தக் கட்சிகளின் சமூக நோக்கங்களை கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
ஊனம் என்ன குறையா?
பிறப்பிலேயே இரண்டு கைகளையும் வலது பாதத்தையும் இழந்த தெரணியகல தெல்ஒறுவ கனிஷ்ட பாடசாலையின் மாணவி ரஷ்மி நிமேஷா குணவர்தன ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 153 புள்ளிகளை பெற்று சித்தியடைந்தார்.
-
மேட்ச் ஃபிக்ஸிங்: இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் குழு விசாரணைக் கூட்டம்
மேட்ச் ஃபிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட ஒப்புக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் மூன்று பேரை விசாரிக்கும் கூட்டம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் நிர்வாகக் குழு நடத்தியுள்ளது. இந்தியா டிவி என்ற தனியார் தொலைக்காட்சி நடத்திய ரகசிய நடவடிக்கையில், அண்மைய இருபது ஓவர் உலகக் கோப்பையின்போது மேட்ச் ஃபிக்ஸிங் செய்வதற்கு ஒப்புக்கொள்வதுபோல கிரிக்கெட் நடுவர்கள் ஆறு பேர் பேசியிருந்தது ரகசியமாக வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது.
-
விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் ஜனாதிபதியை சந்திப்பு
பெண் பிள்ளைகளின் சர்வதேச தினத்தை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் கடற்பிரிவு பெண் பிள்ளைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தனர்.
-
மறக்க முடியுமா…..?
-MJ கடதாசி, காகிதம் என்ற உச்சரிப்பில் தினந்தோரும் மக்களின் முக்கிய தொடர்பாடல் ஊடகமாக தபால் போக்குவரத்துக்களும் எழுத்து ஊடகங்களும் இருந்த காலப்பகுதி அது.
-
‘துல் ஹஜ்’ தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு
ஹிஜ்ரி 1433 ‘துல் ஹிஜ்ஜாஹ்’ ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல், ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 05.56 மணி முதல் துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கின்றது.
-
தன்னம்பிக்கையுடன் விளையாடினால் கிரிக்கட்டில் மட்டுமல்ல எதிலும் வெற்றி கிடைக்கும்
அறியவேண்டிய ஓர் வரலாறு (தினகரன் ஆசிரியர் தலைப்பு) நூற்றாண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் தேசிய விளையாட்டாக இருந்து வந்த உதைபந்தாட்டம் அன்று கொழும்பில் நாகரீக மோகத்தில் மூழ்கியிருந்தவர்களையும் கிராமிய மக்களையும் கவர்ந்திருந்தது.
-
“நீதித்துறையின் சுதந்திரம் 1978ஆம் ஆண்டே பறிபோனது”
இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை 1978ஆம் ஆண்டு ஜே ஆர் ஜெயவர்தன ஆட்சியின் போது அமலுக்கு வந்த புதிய அரசியல் சட்டத்துடன் பறிபோனதாக இலங்கையின் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் கூறுகிறார். கடந்த இரு நாட்களாக இலங்கையில் நடந்த நீதித்துறை போராட்டங்கள் மற்றும் சர்வதேச நீதிமான்கள் கவுன்சில் இலங்கையின் நீதித்துறையின் நிலை குறித்து விடுத்த அறிக்கையின் பின்னணியில், இலங்கையில், ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய அளவுக்கு, சுயாதீனத் தன்மையுடன் நீதித்துறை செயல்பட முடிகிறதா என்று…
-
ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 21 பேர் நியமனம்
ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 21 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளித்தார்.
-
சட்டவிரோத குடியேற்றவாசிகள்;பப்புவா நியூகினிக்கு அனுப்பும் சட்டத்துக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றம் அனுமதி
சட்டவிரோதமான படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களை பப்புவா நியூகினியின் மனூஸ் தீவுகளுக்கு அனுப்புவது தொடர்பான சட்டமூலத்துக்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக் குள் நுழைந்து கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர் களை நாவுறு மற்றும் பப்புவா நியூகினி தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை அவுஸ்திரேலியா ஆரம்பித்துள்ளது.
-
உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டமூலம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றம்: 23 வருடங்களின் பின் விருப்பு வாக்குக்கு முற்றுப்புள்ளி
தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைகளை இணைத்து தயாரிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு கட்சிகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பு எதுவும் இன்றி திருத்தங்களுடன் தேர்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டதோடு, இதனூடாக உள்ளூராட்சி தேர்தல்களில் விருப்பு வாக்கு முறை முற்றாக ரத்துச் செய்யப்படுகிறது.
-
விருப்பு வாக்கு முறையை நீக்க இன்று விவாதம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் தற்போதுள்ள விருப்பு வாக்கு முறைமை முற்றாக இரத்தாகும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் தொடர்பான விவாதத்திற்கு இன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையான காலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.