உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும் தற்போதுள்ள விருப்பு வாக்கு முறைமை முற்றாக இரத்தாகும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் தொடர்பான விவாதத்திற்கு இன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையான காலப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் ஒவ்வொரு சரத்துக்கள் தொடர்பாகவும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி முதலாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடத்தப்படவுள்ளது.
புதிய சட்டம் அமுலுக்கு வந்தவுடன் நீண்டகாலமாக நாட்டில் நடைமுறையில் இருக்கும் விருப்பு வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை நீக்கப்படும்.
இதற்கமைய 70 வீதம் தொகுதி முறைமையும் 30வீதம் விகிதாசார முறைமையும் கலந்த புதிய உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிக்க உத்தேச சட்டம் வழிவகுக்கும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் சுட்டிக்காட்டினார்.
– அரசாங்க தகவல் திணைக்களம்
Leave a comment