சர்வதேச உலமாக்கள், அறிஞர்கள் மாநாட்டுக்கு 5 உலமாக்கள் பங்கேற்பு

  • ஆர். ஹஸன்

ulama hizbullahகாத்தான்குடி: இந்தோனேசியாவின், சுமாத்ரா தீவில் எதிர்வரும் ஜுலை 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச உலமாக்கள், அறிஞர்கள் மாநாட்டுக்கு இலங்கை சார்பில் ஐந்து உலமாக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்களை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தனது பூரண அனுசரணையில் அனுப்பிவைக்கவுள்ளது. உலகளாவிய ரீதியில் முக்கிய உலமாக்கள் மற்றும் அறிஞர்கள் கலந்து கொள்ளும் மேற்படி உலமாக்கள், அறிஞர்கள் மாநாடு எதிர்வரும் ஜுலை 16ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் ஆரம்பமாகவுள்ளது. ஜுலை 23 திகதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ள குறித்த மாநாட்டுக்கு இலங்கை சார்பில் ஐந்து உலமாக்கள் பங்கேற்கவுள்ளனர்.

இவர்களது பயணத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செய்து கொடுத்துள்ளது. அதற்கமைய அவர்களுக்கான விமான சீட்டுக்களை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சனிக்கிழமை (8) வழங்கி வைத்தார்.

காத்தான்குடியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ulama hizbullah

சர்வதேச உலமாக்கள் மற்றும் அறிஞர்கள் மாநாட்டில் இலங்கை சார்பில் கலந்து கொள்ளும் ஐந்து பேர் கொண்ட குழுவில், மட்டக்களப்பு மாவட்ட ஐம்இய்யதுல் உலமா சபையின் தலைவரும், ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் உபதலைவரும், முன்னாள் காழி நீதிபதியுமான அஷ்ஷெய்க் எஸ்.எம். அலியார் பலாஹி, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் பத்வா குழுத்தலைவரும், ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் ஏ.ஜி.எம்.அமீன் பலாஹி, மட்டக்களப்பு பல்கலைகழக கல்லூரியின் தொலைக் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரும், கண்டி, வட்டதெனிய கதீஜத்துல் குப்ரா பெண்கள் அரபுக் கல்லூரியின் உப தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம்.பாறூக் அஷ்ஹரி, தாறுல் ஹூதா பெண்கள் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல்.முபாரக் மதனி, அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபை தலைவரும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா (பி.ஏ) ஆகியோர் இடம்பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

உலமாக்களுக்கான பல்வேறு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன், சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடொன்றுக்கு நாட்டின் முக்கிய உலமாக்கள் ஐவரை அனுப்பி வைக்கின்றமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s