கட்டார் மற்றும் அமெரிக்கா பயங்கர வாதத்திற்கு எதிரான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன

qatarகொழும்பு: அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் கட்டார் வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அல் தானி ஆகிய இருவரும் நேற்று கட்டார் தலை நகர் தோஹாவில் பயங்கரவத்த்திற்கு எதிராக போராடுவது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் நேற்று 11/07/2017 கைச்சாத்திட்டனர்.

கட்டார் மற்றும் அமெரிக்கா இடையேயான தொடர்ச்சியான இருதரப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பிற்குள்ளாகவும், இரு தரப்பினருடனான கூட்டுப் பணியின் விளைவாகவும், தகவல் மற்றும் நிபுணத்துவப் பரிமாற்றம் அவை தொடர்பான பொறிமுறைகள் நிறுவனங்களை தோற்றுவித்தல் போன்ற விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பையும் விரிவு படுத்துவதற்காகவே மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இரு நாடுகளுக்குமிடையில் கடந்த பலவாரங்களாக இடம்பெற்றுவந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னால் கைச்சாத்திடப்பட்ட மேற்படி உடன்பாட்டிற்கும் தற்போதைய இராஜதந்திர நெருக்கடியிற்குமிடையில் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என கட்டார் வெளியுறவு அமைச்சர் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அல்தானி தெரிவித்தத்தோடு கட்டார் மீது தடை விதித்துள்ள நாடுகளும் இவ்வாறான உடன்படிக்கைகளை எதிர்காலத்தில் செய்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்

வளைகுடா நாடுகளுக்கிடையில் ஏற்கனவே செய்து கொல்லப்பட்ட ரியாத் உடன்படிக்கையை கட்டார் மீறியுள்ளதாக கூறி அதனை வெளியிட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்த கட்டார் வெளியுறவு அமைச்சர் அமெரிக்கா மற்றும் குவைத் மேற்கொள்ளும் மத்தியஸ்த முயற்சிகளை குறை மதிப்பீடு செய்கின்ற முயற்சியாக கட்டார் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்வேளை ரியாத் உடன்படிக்கை சகல வளைகுடா நாடுகளையும் கட்டுப்படுத்துகின்ற ஆவணமாகும், அதுபோன்றுதான் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பின் அடிப்படை யாப்புமாகும், அவை கட்டாறிற்கு மாத்திரம் உரியதல்ல, கட்டாறிற்கு எதிரான

குற்றச்சாட்டுகள் அடிப்படிகள் அற்றவை, எமக்கு எதிராக தடைவித்தித்துள்ள நாடுகள்தான் அந்த உடன்படிக்கையை மீறியுள்ளன, அந்த உடன்படிக்கையின் படி நெருக்கடி நிலைமைகளை கையாள்வதற்கான வழிவகைகள் பொறிமுறைகள் இருக்கின்றன அவற்றை அந்த நாடுகள் மீறியுள்ளன.

அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கருத்து தெரிவிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்டின் அழைப்பின் பேரில் ரியாத்தில் இடம் பெற்ற உச்சி மாநாட்டிற்கு காட்டார் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல்தானி அவர்களே முதன்மையான ஆதரவை வழங்கினார், பிராந்தியத்தில் உள்ள சகல நாடுகளும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதை நிறுத்த வேண்டும்.

qatar

இந்த புரிந்துணர்வு உடன்பாடு கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் இருநாடுகளுக்குமிடையில் அமுலில் உள்ளது என்றாலும் ரியாத்தில் இடம்பெற்ற மாநாட்டின் முடிவுகளை அமுலுக்கு கொண்டுவருவதற்கான விரிவான பேச்சு வார்த்தைகளின் பின்னரே கட்டருடனான இந்த புரிந்துணர்வு உடன்பாடு மீள்வரைவு செய்யப்பட்டு கைச்சாத்திடப் படுகின்றது. இரு நாடுகளும் எந்தெந்த வழிவகைகளில், எத்தகைய கால வரையரைகளில் ஒத்துழைப்பது என்ற விடயங்களே உடன்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

காட்டார் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல்தானி உடனான பேச்சு வார்த்தைகள் மிகவும் ஆழமானவை, ஆக்கபூர்வமானவை அவை பலவேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தன, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களது ரியாத் விஜயத்தின் பிரதான் இலக்குகளுடனேயே நானும் கட்டார் வருகை தந்தேன், இங்கிருந்து நான் ரியாத் செல்கின்றேன் தற்போதைய இராஜதந்திர நெருக்கடி குறித்தும் குவைத் மேற்கொள்ளும் மத்தியஸ்த முயற்சிகள் குறித்தும் விரிவான பேச்சு வார்த்தைகளை அங்கு நடத்தவுள்ளேன் என்றும் கூறினார்.

வளைகுடாவில் தற்பொழுது ஏற்பட்டுள்ள இராஜதந்திர நெருக்கடியை முடிவிற்கு கொண்டுவருவதற்கு குவைத் அரசு மேற்கொள்ளும் மத்தியஸ்த முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகவே தான் பிராந்தியத்தில் சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் மேலும் தெரிவித்தார்.

  • கட்டார் தூதுவராலயம் – கொழும்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s