WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • “#FiftyDaysSinceTheSiege”: கத்தார்வாசிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

    டோஹா: சில வளைகுடா நாடுகள் கத்தார் மீது தடை விதித்து 50 நாட்கள் முடிவடைந்துவிட்டது. கத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டிய சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள், அதனுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக கடந்த ஜூன் ஐந்தாம் தேதியன்று அறிவித்தன.

  • ஐக்கிய இராச்சியத்தில் முதன்முதலாக மருத்துவப்பட்டம் பெற்ற காத்தான்குடியைச் சேர்ந்த சப்ரான் சத்தார்

    நமது நிருபர் லண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் ரெடிங் (Reading) நகரில் வசித்துவரும் சப்ரான் சத்தார், பிரசித்திபெற்ற சவ்த்தம்ப்டன் பல்கலைக்கழகத்தில் (University of Southampton) 6 வருட வைத்தியக் கற்கை நெறியைப் பூர்த்திசெய்து, வைத்தியராக பட்டம் பெற்றார். “அல்ஹம்துலில்லாஹ்”! இப்பட்டமளிப்பு விழா 21-07-2017 வெள்ளிக்கிழமை சவ்த்தம்ப்டன் பல்கலைக்கழக வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

  • முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். மன்சூர் காலமானார்

    எம்.எஸ்.எம்.ஸாகிர் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஸ்ஸாக் மன்சூர் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(25) செவ்வாய்க்கிழமை சற்றுமுன்னர் காலமானார். வணிக மற்றும் கப்பல்துறை முன்னாள் அமைச்சரான அவர், குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதவராகவும் பணிபுரிந்துள்ளார்.

  • காத்தான்குடியில் உடற்பயிற்சி நடைபாதை அமைப்பதற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதியொதுக்கீடு!

    ஹாசிப் யாஸீன் காத்தான்குடி: விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் காத்தான்குடியில் உடற் பயிற்சி நடைபாதை அமைப்பதற்கு ரூபா 30 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்நிதி ஒதுக்கீடு நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளின் பேரில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • கதறி அழுத நீதிபதி இளஞ்செழியன்! நெகிழ்ந்து போன பேரின மக்கள்!

    கொழும்பு: யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் முழு இலங்கையையும் அதிர வைத்துள்ளது. நாட்டில் அமைதி நிலவி வரும் இந்நிலையில் நீதியை காக்கும் நீதிபதி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி தாக்குதல் மேற்கொண்டமை பாரதூரமான விடயமாகும். நல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உயிர் தப்பியிருந்தார். எனினும் அவரின் பாதுகாவலர்களில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றுமொருவர் காயமடைந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • மீராவோடை பாடசாலை காணி விடயத்தில் தேரர் தலையிடுவது சரியா.? உண்மையில் நடந்தது, என்ன.? (காணொளி)

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் கல்குடா: மீராவோடை சக்தி வித்தியாலயத்திற்குரிய விளையாட்டு மைதான குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த(18- 07-2017) செவ்வாய்கிழமை காலை வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களால் கண்டன போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த போராட்டம் இடம் பெற்ற இடத்திற்கு திடீர் என வருகை தந்த மட்டக்களப்பு மங்களராமய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீராவோடையில் 10 நாட்களுக்குள்,

  • நீதிபதி இளஞ்செழியனுக்கு 17 ஆண்டுகளாக மெய்பாதுகாவலராக இருந்தவர் உயிரிழப்பு

    யாழ்ப்பாணம்: யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் போது படுகாயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று யாழ். நல்லூர் பகுதியில் வைத்து நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார். இந்த தாக்குதலின் போது நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்திருந்தனர்.

  • சவூதி இளவரசர் – ஹிஸ்புல்லாஹ் இடையே விசேட பேச்சு

    – ஆர். ஹஸன் கொழும்பு: புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும், இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் இன்று சனிக்கிழமை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை சந்தித்து முதலீடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

  • “மக்களை நாடிச் சென்று சேவை செய்திருந்தால் சமூகத்திலுள்ள அதிகளவான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும்” – ஷிப்லி பாறுக்

    எம்.ரீ. ஹைதர் அலி காத்தான்குடி: தேர்தல் அல்லாத காலங்களிலும் அரசியல் வாதிகள் மக்களை நாடிச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து சேவையாற்றுகின்ற ஒரு நிலைமை உருவாக வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திற்குட்பட்ட வரிய குடும்பத்தை சேர்ந்த நபர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சுய தொழிலுக்கான இடியப்ப உபகரணங்கள் வழங்கும்…

  • “கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை”

    கொழும்பு: கட்டாரில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,எந்த அளவிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அவற்றுக்கு முகம்கொடுக்கும் சக்திமிக்க இராஜ்ஜியமாக கட்டார் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

  • வானில் இருந்து வீழ்ந்த மர்மப்பொருள்! 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

    யாழ்ப்பாணம்: யாழில் வானத்தில் இருந்து வீழ்ந்த ஒருவகையான திரவம் காரணமாக 18 மாணவிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் 18 பேரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • முஸ்லிம் பெண்களுக்கு “ஹலால் செக்ஸ் வழிகாட்டி”

    லண்டன்: முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவருடன் தாம்பத்ய உறவு கொள்வது எப்படி? இதைப் பற்றி விரிவாக கூறும் புத்தகம் வர்த்தக வலைதளம் ஒன்றில் விற்பனையாகி வருகிறது. இது தொடர்பாக சர்ச்சைகளும் சூடு பிடித்துவிட்டன. ‘ஹலால் வழியில் சுகமான பாலியல் உறவு கொள்ள முஸ்லிம்களுக்கான பாலியல் வழிகாட்டி கையேடு’ என்ற பொருள் கொண்ட ‘The Muslim’s Guide to Sex Manual: A Halal Guide to Mind Blowing Sex’ புத்தகத்தை, ஒரு பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார்.…

←Previous Page
1 … 115 116 117 118 119 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar