கதறி அழுத நீதிபதி இளஞ்செழியன்! நெகிழ்ந்து போன பேரின மக்கள்!

Ilancheliyanகொழும்பு: யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் முழு இலங்கையையும் அதிர வைத்துள்ளது. நாட்டில் அமைதி நிலவி வரும் இந்நிலையில் நீதியை காக்கும் நீதிபதி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி தாக்குதல் மேற்கொண்டமை பாரதூரமான விடயமாகும். நல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உயிர் தப்பியிருந்தார். எனினும் அவரின் பாதுகாவலர்களில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றுமொருவர் காயமடைந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதியின் பாதுகாப்பு கடமையில் கடந்த 17 வருடங்காக கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர நேற்று இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தனது மெய்ப்பாதுகாவலரின் இழப்பை தாங்க முடியாத யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி, ஹேமச்சந்திரவின் குடும்பத்தினர் முன்னிலையில் கதறி அழுதார்.

இந்த உருக்கமான சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் இதயங்களை கனக்க செய்துள்ளது.

நீதிபதி இளஞ்செழியனின் இந்த நேர்மையான குணத்தை தென்னிலங்கை ஊடகங்கள் வெகுவாக பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

அதேபோல் சமூக ஊடகங்களிலும் சகல இனங்களைச் சேர்ந்தவர்களும் நீதிபதியின் குணாதிசயத்தை வரவேற்று பதிவிட்டு வருகிறனர்.

இலங்கையில் இவ்வாறு எந்தவொரு அரசியல்வாதியும் தனது மெய்பாதுகாவலரின் உயிரிழப்பை மதித்தில்லை.

எனினும் நீதிபதியான இளஞ்செழியன், ஹேமச்சந்திரவின் குடும்பத்தினர் முன்னிலையில் கதறி அழும் காட்சி நெகிழ வைப்பதாக பதிவிட்டுள்ளனர்.

ஹேமச்சந்திரவின் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கோரி கதறியழுத நீதிபதியை, சிங்கள மக்கள் பாராட்டியுள்ளனர்.

படித்தவர், பதவி பெற்றவர், பட்டம் பெற்றவர் என்ற போதிலும், மனித உயிருக்கு முன்னால் இவ்வளவு நெகிழ்ச்சியடைவதென்பது பாராட்டப்பட வேண்டிய விடயம் என் குறிப்பிட்டுள்ளனர். எந்த இனமாக இருந்தாலும் சிறந்த ஒருவராக நீதிபதி காணப்படுகின்றார்.

இலங்கை அரசியல்வாதிகள் நீதிபதியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளது. அவரிடம் இருந்து சிலவற்றை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்னமும் மனிதர்களிடம் மனிதாபிமானம் காணப்படுகின்றதென்பதற்கு நீதிபதி சிறந்த உதாரணமாக காணப்படுகிறார். தமிழ் நீதிபதி என்ற போதிலும் நன்றிக் கடன் தெரிந்த உண்மையான மனிதன் என நீதிபதியை பலரும் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s